وَّاُخْرٰى لَمْ تَقْدِرُوْا عَلَيْهَا قَدْ اَحَاطَ اللّٰهُ بِهَا ۗوَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرًا ٢١
- wa-ukh'rā
- وَأُخْرَىٰ
- இன்னும் வேறு பல
- lam taqdirū
- لَمْ تَقْدِرُوا۟
- நீங்கள் ஆற்றல் பெறவில்லை
- ʿalayhā
- عَلَيْهَا
- அவற்றின் மீது
- qad
- قَدْ
- திட்டமாக
- aḥāṭa
- أَحَاطَ
- சூழ்ந்திருக்கின்றான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bihā
- بِهَاۚ
- அவற்றை
- wakāna
- وَكَانَ
- இருக்கின்றான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalā kulli shayin
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- எல்லாவற்றின் மீதும்
- qadīran
- قَدِيرًا
- பேராற்றலுடையவனாக
(பாரசீகம், ரூம் முதலிய தேசங்களில் உங்களுக்கு) மற்றொரு வெற்றி (இருக்கின்றது.) அதற்கு நீங்கள் இன்னும் தகுதியுடையவர் களாகவில்லை; எனினும், அல்லாஹ் அதனை சூழ்ந்து கொண்டிருக் கின்றான். அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவனாகவே இருக்கின்றான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨௧)Tafseer
وَلَوْ قَاتَلَكُمُ الَّذِيْنَ كَفَرُوْا لَوَلَّوُا الْاَدْبَارَ ثُمَّ لَا يَجِدُوْنَ وَلِيًّا وَّلَا نَصِيْرًا ٢٢
- walaw qātalakumu
- وَلَوْ قَٰتَلَكُمُ
- உங்களிடம் போருக்கு வந்தால்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரிப்பாளர்கள்
- lawallawū l-adbāra
- لَوَلَّوُا۟ ٱلْأَدْبَٰرَ
- புறமுதுகு காட்டியிருப்பார்கள்
- thumma
- ثُمَّ
- பிறகு
- lā yajidūna
- لَا يَجِدُونَ
- காணமாட்டார்கள்
- waliyyan
- وَلِيًّا
- பாதுகாவலரையும்
- walā naṣīran
- وَلَا نَصِيرًا
- உதவியாளரையும்
நிராகரிப்பவர்கள் (இச்சமயம்) உங்களுடன் போர் புரிவார்களாயின், அவர்களே புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர், தங்களுக்கு யாதொரு பாதுகாவலனையும் உதவி செய்பவனையும் காணார்கள். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨௨)Tafseer
سُنَّةَ اللّٰهِ الَّتِيْ قَدْ خَلَتْ مِنْ قَبْلُ ۖوَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِيْلًا ٢٣
- sunnata
- سُنَّةَ
- நடைமுறைப்படிதான்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- allatī qad khalat
- ٱلَّتِى قَدْ خَلَتْ
- எது/சென்றுவிட்டது
- min qablu
- مِن قَبْلُۖ
- இதற்கு முன்னர்
- walan tajida
- وَلَن تَجِدَ
- நீர் காணமாட்டீர்
- lisunnati
- لِسُنَّةِ
- நடைமுறைக்கு
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- tabdīlan
- تَبْدِيلًا
- மாற்றத்தை(யும்)
(நிராகரிப்பவர்கள் விஷயத்தில் அனுசரிக்கும்) அல்லாஹ்வுடைய வழிமுறை இதுதான். இதற்கு முன்னரும் (இவ்வாறே) நடந்திருக்கின்றன. ஆகவே, அல்லாஹ்வுடைய வழிமுறையில் நீங்கள் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்கள். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨௩)Tafseer
وَهُوَ الَّذِيْ كَفَّ اَيْدِيَهُمْ عَنْكُمْ وَاَيْدِيَكُمْ عَنْهُمْ بِبَطْنِ مَكَّةَ مِنْۢ بَعْدِ اَنْ اَظْفَرَكُمْ عَلَيْهِمْ ۗوَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرًا ٢٤
- wahuwa alladhī
- وَهُوَ ٱلَّذِى
- அவன்தான்
- kaffa
- كَفَّ
- தடுத்தான்
- aydiyahum
- أَيْدِيَهُمْ
- அவர்களின்கரங்களை
- ʿankum
- عَنكُمْ
- உங்களை விட்டும்
- wa-aydiyakum
- وَأَيْدِيَكُمْ
- இன்னும் உங்கள் கரங்களை
- ʿanhum
- عَنْهُم
- அவர்களை விட்டும்
- bibaṭni
- بِبَطْنِ
- நடுப்பகுதியில்
- makkata
- مَكَّةَ
- மக்காவின்
- min baʿdi an
- مِنۢ بَعْدِ أَنْ
- அவன் வெற்றி கொடுத்த பின்னர்
- aẓfarakum
- أَظْفَرَكُمْ
- அவன் வெற்றி கொடுத்த பின்னர் உங்களுக்கு
- ʿalayhim
- عَلَيْهِمْۚ
- அவர்கள் மீது
- wakāna
- وَكَانَ
- இருக்கின்றான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- நீங்கள் செய்பவற்றை
- baṣīran
- بَصِيرًا
- உற்று நோக்கியவனாக
மக்காவின் சமீபமாக அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் பின்னர், அவர்களுடைய கைகளை உங்களைவிட்டும் அவனே தடுத்துக்கொண்டான். (அவ்வாறே) உங்களுடைய கைகளையும் அவர்களை விட்டுத் தடுத்துக் கொண்டான். ஏனென்றால், அல்லாஹ் நீங்கள் செய்தவைகளை உற்று நோக்கியவனாகவே இருந்தான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨௪)Tafseer
هُمُ الَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَالْهَدْيَ مَعْكُوْفًا اَنْ يَّبْلُغَ مَحِلَّهٗ ۚوَلَوْلَا رِجَالٌ مُّؤْمِنُوْنَ وَنِسَاۤءٌ مُّؤْمِنٰتٌ لَّمْ تَعْلَمُوْهُمْ اَنْ تَطَـُٔوْهُمْ فَتُصِيْبَكُمْ مِّنْهُمْ مَّعَرَّةٌ ۢبِغَيْرِ عِلْمٍ ۚ لِيُدْخِلَ اللّٰهُ فِيْ رَحْمَتِهٖ مَنْ يَّشَاۤءُۚ لَوْ تَزَيَّلُوْا لَعَذَّبْنَا الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابًا اَلِيْمًا ٢٥
- humu
- هُمُ
- அவர்கள்தான்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரித்தவர்கள்
- waṣaddūkum
- وَصَدُّوكُمْ
- இன்னும் உங்களைத் தடுத்தார்கள்
- ʿani l-masjidi
- عَنِ ٱلْمَسْجِدِ
- மஸ்ஜிதை விட்டு
- l-ḥarāmi
- ٱلْحَرَامِ
- புனித(மானது)
- wal-hadya
- وَٱلْهَدْىَ
- பலிப் பிராணியையும்
- maʿkūfan
- مَعْكُوفًا
- வழிபாட்டுக்காக கொண்டு வரப்பட்ட
- an yablugha
- أَن يَبْلُغَ
- அது சேருவதை விட்டு
- maḥillahu
- مَحِلَّهُۥۚ
- அதனுடைய இடத்திற்கு
- walawlā
- وَلَوْلَا
- இல்லாமல் இருந்தால்
- rijālun
- رِجَالٌ
- ஆண்களும்
- mu'minūna
- مُّؤْمِنُونَ
- நம்பிக்கை கொண்ட(வர்கள்)
- wanisāon
- وَنِسَآءٌ
- பெண்களும்
- mu'minātun
- مُّؤْمِنَٰتٌ
- நம்பிக்கை கொண்ட(வர்கள்)
- lam
- لَّمْ
- நீங்கள் அறியாமல்
- taʿlamūhum
- تَعْلَمُوهُمْ
- நீங்கள் அறியாமல் அவர்களை
- an taṭaūhum
- أَن تَطَـُٔوهُمْ
- நீங்கள் தாக்கிவிட
- fatuṣībakum
- فَتُصِيبَكُم
- அவர்களை உங்களுக்கு ஏற்பட்டு விடும்
- min'hum maʿarratun
- مِّنْهُم مَّعَرَّةٌۢ
- அவர்களினால்/பழிப்பு
- bighayri ʿil'min
- بِغَيْرِ عِلْمٍۖ
- அறியாமல்
- liyud'khila
- لِّيُدْخِلَ
- நுழைப்பதற்காக
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- fī raḥmatihi
- فِى رَحْمَتِهِۦ
- தனது அருளில்
- man yashāu
- مَن يَشَآءُۚ
- நாடுகின்றவர்களை
- law tazayyalū
- لَوْ تَزَيَّلُوا۟
- அவர்கள் நீங்கியிருந்தால்
- laʿadhabnā
- لَعَذَّبْنَا
- தண்டித்திருப்போம்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரித்தவர்களை
- min'hum
- مِنْهُمْ
- அவர்களில்
- ʿadhāban
- عَذَابًا
- தண்டனையால்
- alīman
- أَلِيمًا
- வலி தரக்கூடிய(து)
(நீங்கள் வெற்றி கொண்ட) இந்த மக்காவாசிகள்தாம் (அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்) நிராகரித்து விட்டதுடன், உங்களையும் சிறப்புற்ற மஸ்ஜித் (என்னும் கஅபாவு)க்குச் செல்லாதும், குர்பானியையும் அது செல்ல வேண்டிய எல்லைக்குச் செல்லாதும் தடுத்து நிறுத்தியவர்கள். ஆயினும், அங்கு அவர்களுடன் நீங்கள் அறியாத நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் இருந்தனர். (அச்சமயம் உங்கள் எதிரிகளை நீங்கள் வெட்டினால்,) இந்த நம்பிக்கையாளர்களும் (நீங்கள் அறியாமல்) உங்கள் காலில் மிதிபட்டு, அதன் காரணமாக நீங்கள் அறியாது உங்களுக்கு நஷ்டம் ஏற்படக்கூடும் என்பது இல்லாதிருந்தால், (அச்சமயம் அவர்களுடன் போர் புரிய உங்களுக்கு அனுமதி கொடுத்து, மக்காவில் நீங்கள் நுழையும்படியும் செய்திருப்பான். அப்பொழுது நீங்கள் மக்காவில் நுழையாது உங்களை அவன் தடுத்துக் கொண்டதெல்லாம், ஹுதைபியா உடன்படிக்கையின் மத்திய காலத்தில்) அல்லாஹ் தான் நாடியவர்களை (இஸ்லாம் என்னும்) தன் அருளில் புகுத்துவதற்காகவே ஆகும். (நீங்கள் அறியாத மக்காவிலுள்ள நம்பிக்கையாளர்கள்) அவர்களிலிருந்து விலகியிருப்பார்களேயானால், (அவர்கள் மீது போர் புரிய உங்களுக்கு அனுமதி கொடுத்து) அவர்களில் உள்ள நிராகரிப்பவர்களை நாம் கடினமாகவே துன்புறுத்தி வேதனை செய்வோம். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨௫)Tafseer
اِذْ جَعَلَ الَّذِيْنَ كَفَرُوْا فِيْ قُلُوْبِهِمُ الْحَمِيَّةَ حَمِيَّةَ الْجَاهِلِيَّةِ فَاَنْزَلَ اللّٰهُ سَكِيْنَتَهٗ عَلٰى رَسُوْلِهٖ وَعَلَى الْمُؤْمِنِيْنَ وَاَلْزَمَهُمْ كَلِمَةَ التَّقْوٰى وَكَانُوْٓا اَحَقَّ بِهَا وَاَهْلَهَا ۗوَكَانَ اللّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمًا ࣖ ٢٦
- idh jaʿala
- إِذْ جَعَلَ
- ஏற்படுத்திக் கொண்ட அந்த சமயத்தை நினைவு கூருங்கள்!
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரித்தவர்கள்
- fī qulūbihimu
- فِى قُلُوبِهِمُ
- தங்கள் உள்ளங்களில்
- l-ḥamiyata
- ٱلْحَمِيَّةَ
- திமிரை
- ḥamiyyata
- حَمِيَّةَ
- திமிரை
- l-jāhiliyati
- ٱلْجَٰهِلِيَّةِ
- அறியாமைக்கால
- fa-anzala
- فَأَنزَلَ
- இறக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- sakīnatahu
- سَكِينَتَهُۥ
- தன் அமைதியை
- ʿalā rasūlihi
- عَلَىٰ رَسُولِهِۦ
- தனது தூதர் மீதும்
- waʿalā
- وَعَلَى
- மீதும்
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்கள்
- wa-alzamahum
- وَأَلْزَمَهُمْ
- இன்னும் அவர்களுக்கு அவசியமாக்கினான்
- kalimata
- كَلِمَةَ
- வார்த்தையை
- l-taqwā
- ٱلتَّقْوَىٰ
- இறையச்சத்தின்
- wakānū
- وَكَانُوٓا۟
- இன்னும் இருந்தார்கள்
- aḥaqqa
- أَحَقَّ
- மிகத் தகுதியுடைவர்களாக
- bihā
- بِهَا
- அதற்கு
- wa-ahlahā
- وَأَهْلَهَاۚ
- இன்னும் அதற்கு சொந்தக்காரர்களாக
- wakāna l-lahu
- وَكَانَ ٱللَّهُ
- அல்லாஹ் இருக்கின்றான்
- bikulli shayin
- بِكُلِّ شَىْءٍ
- எல்லாவற்றையும்
- ʿalīman
- عَلِيمًا
- நன்கறிந்தவனாக
நிராகரித்தவர்கள் தங்களுடைய உள்ளங்களில் (உங்களை வேருடன் அழித்துவிட வேண்டுமென்ற) மூடத்தனமான வைராக்கியத்தை நிலைநிறுத்திக் கொண்ட சமயத்தை நினைத்துப் பாருங்கள். அச்சமயம் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், நம்பிக்கை கொண்டவர்கள் மீதும், தன்னுடைய ஆறுதலையும், உறுதியையும் இறக்கி வைத்துப் பரிசுத்த வாக்கியத்தின் மீது அவர்களை உறுதிப்படுத்தினான். அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களாகவும், அதனை அடைய வேண்டியவர் களாகவும் இருந்தார்கள். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந் தவனாக இருக்கின்றான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨௬)Tafseer
لَقَدْ صَدَقَ اللّٰهُ رَسُوْلَهُ الرُّءْيَا بِالْحَقِّ ۚ لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ اِنْ شَاۤءَ اللّٰهُ اٰمِنِيْنَۙ مُحَلِّقِيْنَ رُءُوْسَكُمْ وَمُقَصِّرِيْنَۙ لَا تَخَافُوْنَ ۗفَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوْا فَجَعَلَ مِنْ دُوْنِ ذٰلِكَ فَتْحًا قَرِيْبًا ٢٧
- laqad
- لَّقَدْ
- திட்டவட்டமாக
- ṣadaqa
- صَدَقَ
- உண்மையாக நிகழ்த்தினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- rasūlahu
- رَسُولَهُ
- தனது தூதருக்கு
- l-ru'yā
- ٱلرُّءْيَا
- கனவை
- bil-ḥaqi
- بِٱلْحَقِّۖ
- யதார்த்தத்தில்
- latadkhulunna
- لَتَدْخُلُنَّ
- நிச்சயமாக நீங்கள் நுழைவீர்கள்
- l-masjida
- ٱلْمَسْجِدَ
- மஸ்ஜிதில்
- l-ḥarāma
- ٱلْحَرَامَ
- புனிதமான(து)
- in shāa
- إِن شَآءَ
- நாடினால்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- āminīna
- ءَامِنِينَ
- பாதுகாப்பு பெற்றவர்களாக
- muḥalliqīna
- مُحَلِّقِينَ
- சிரைத்தவர்களாக
- ruūsakum
- رُءُوسَكُمْ
- உங்கள் தலை(முடி)களை
- wamuqaṣṣirīna
- وَمُقَصِّرِينَ
- இன்னும் குறைத்தவர்களாக
- lā takhāfūna
- لَا تَخَافُونَۖ
- பயப்பட மாட்டீர்கள்
- faʿalima
- فَعَلِمَ
- அவன் அறிவான்
- mā lam taʿlamū
- مَا لَمْ تَعْلَمُوا۟
- நீங்கள் அறியாதவற்றை
- fajaʿala
- فَجَعَلَ
- ஏற்படுத்தினான்
- min dūni dhālika
- مِن دُونِ ذَٰلِكَ
- அதற்கு முன்பாக
- fatḥan
- فَتْحًا
- ஒரு வெற்றியை
- qarīban
- قَرِيبًا
- சமீபமான
நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு அவர் கண்ட கனவை மெய்யாகவே உண்மையாக்கி வைத்துவிட்டான். அல்லாஹ் நாடினால், நிச்சயமாக நீங்கள் சிறப்புற்ற மஸ்ஜிதில் அச்சமற்றவர் களாகவும், உங்களுடைய தலை ரோமத்தைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும், கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள். அச்சமயம், நீங்கள் (ஒருவருக்கும்) பயப்பட மாட்டீர்கள். (அச்சமயம்) நீங்கள் அறியாதிருந்ததை (ஏற்கனவே அல்லாஹ்) அறிந்திருந்தான். ஆகவே, இதனையன்றி உடனடியான மற்றொரு வெற்றியையும் உங்களுக்குக் கொடுத்தான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨௭)Tafseer
هُوَ الَّذِيْٓ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖ ۗوَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًا ٢٨
- huwa alladhī
- هُوَ ٱلَّذِىٓ
- அவன்தான்
- arsala
- أَرْسَلَ
- அனுப்பினான்
- rasūlahu
- رَسُولَهُۥ
- தனது தூதரை
- bil-hudā
- بِٱلْهُدَىٰ
- நேர்வழியைக் கொண்டு
- wadīni
- وَدِينِ
- இன்னும் மார்க்கத்தை
- l-ḥaqi
- ٱلْحَقِّ
- உண்மையான
- liyuẓ'hirahu
- لِيُظْهِرَهُۥ
- அதை மேலோங்க வைப்பதற்காக
- ʿalā l-dīni
- عَلَى ٱلدِّينِ
- மார்க்கங்களை விட
- kullihi
- كُلِّهِۦۚ
- எல்லா
- wakafā
- وَكَفَىٰ
- போதுமான(வன்)
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வே
- shahīdan
- شَهِيدًا
- சாட்சியாவான்
அவனே, தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்தியமான மார்க்கத்தைக் கொண்டும் அதை எல்லா மார்க்கங்களைவிட மேலோங்க வைப்பதற்காக அனுப்பி வைத்தான். இதற்கு அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨௮)Tafseer
مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ ۗوَالَّذِيْنَ مَعَهٗٓ اَشِدَّاۤءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاۤءُ بَيْنَهُمْ تَرٰىهُمْ رُكَّعًا سُجَّدًا يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا ۖ سِيْمَاهُمْ فِيْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ ۗذٰلِكَ مَثَلُهُمْ فِى التَّوْرٰىةِ ۖوَمَثَلُهُمْ فِى الْاِنْجِيْلِۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْـَٔهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِهٖ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيْظَ بِهِمُ الْكُفَّارَ ۗوَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا ࣖ ٢٩
- muḥammadun
- مُّحَمَّدٌ
- முஹம்மது
- rasūlu l-lahi
- رَّسُولُ ٱللَّهِۚ
- அல்லாஹ்வின் தூதர்
- wa-alladhīna maʿahu
- وَٱلَّذِينَ مَعَهُۥٓ
- அவருடன் இருக்கின்றவர்கள்
- ashiddāu
- أَشِدَّآءُ
- கடினமானவர்கள்
- ʿalā l-kufāri
- عَلَى ٱلْكُفَّارِ
- நிராகரிப்பாளர்கள்மீது
- ruḥamāu
- رُحَمَآءُ
- கருணையாளர்கள்
- baynahum
- بَيْنَهُمْۖ
- தங்களுக்கு மத்தியில்
- tarāhum
- تَرَىٰهُمْ
- நீர் அவர்களைக்காண்பீர்
- rukkaʿan
- رُكَّعًا
- ருகூஃசெய்தவர்களாக
- sujjadan
- سُجَّدًا
- சுஜூது செய்தவர்களாக
- yabtaghūna
- يَبْتَغُونَ
- அவர்கள் விரும்புகிறார்கள்
- faḍlan
- فَضْلًا
- அருளை(யும்)
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wariḍ'wānan
- وَرِضْوَٰنًاۖ
- பொருத்தத்தையும்
- sīmāhum
- سِيمَاهُمْ
- அவர்களின் தோற்றம்
- fī wujūhihim
- فِى وُجُوهِهِم
- அவர்களின் முகங்களில்
- min athari
- مِّنْ أَثَرِ
- அடையாளமாக
- l-sujūdi
- ٱلسُّجُودِۚ
- சுஜூதின்
- dhālika
- ذَٰلِكَ
- இது
- mathaluhum
- مَثَلُهُمْ
- அவர்களின் தன்மையாகும்
- fī l-tawrāti
- فِى ٱلتَّوْرَىٰةِۚ
- தவ்றாத்தில் கூறப்பட்ட
- wamathaluhum
- وَمَثَلُهُمْ
- இன்னும் அவர்களின் தன்மையாவது
- fī l-injīli
- فِى ٱلْإِنجِيلِ
- இன்ஜீலில் கூறப்பட்ட
- kazarʿin
- كَزَرْعٍ
- ஒரு விளைச்சலைப் போலாகும்
- akhraja
- أَخْرَجَ
- வெளியாக்கியது
- shaṭahu
- شَطْـَٔهُۥ
- தனது காம்பை
- faāzarahu
- فَـَٔازَرَهُۥ
- இன்னும் அதை பலப்படுத்தியது
- fa-is'taghlaẓa
- فَٱسْتَغْلَظَ
- பிறகு அது தடிப்பமாக ஆனது
- fa-is'tawā
- فَٱسْتَوَىٰ
- அது உயர்ந்து நின்று
- ʿalā sūqihi
- عَلَىٰ سُوقِهِۦ
- தனது தண்டின் மீது
- yuʿ'jibu
- يُعْجِبُ
- கவர்கிறது
- l-zurāʿa
- ٱلزُّرَّاعَ
- விவசாயிகளை
- liyaghīẓa
- لِيَغِيظَ
- அவன் ரோஷமூட்டுவதற்காக
- bihimu
- بِهِمُ
- அவர்கள் மூலமாக
- l-kufāra
- ٱلْكُفَّارَۗ
- நிராகரிப்பாளர்களை
- waʿada
- وَعَدَ
- வாக்களித்துள்ளான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டவர்களுக்கு
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- min'hum
- مِنْهُم
- அவர்களில்
- maghfiratan
- مَّغْفِرَةً
- மன்னிப்பை(யும்)
- wa-ajran ʿaẓīman
- وَأَجْرًا عَظِيمًۢا
- மகத்தானகூலியையும்
முஹம்மது (ஸல்) அல்லாஹ்வுடைய திருத்தூதராவார்கள். (அவரும்) அவருடன் இருப்பவர்களும் நிராகரிப்பவர்கள் விஷயத்தில் கண்டிப்பானவர்களாகவும், தங்களுக்குள் மிக்க அன்புடையவர்களாகவும் இருப்பார்கள். குனிந்து சிரம் பணிந்து வணங்குபவர்களாக அவர்களை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ்வின் அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் (எந்த நேரமும்) விரும்பியவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் சிரம் பணி(ந்து வணங்கு)வதின் அடையாளமிருக்கும். இதுவே தவ்றாத் (என்னும் வேதத்)தில் உள்ள அவர்களின் வர்ணிப்பு. இன்ஜீலில் அவர் களுக்குள்ள உதாரணமாவது: ஒரு பயிரை ஒத்திருக்கின்றது. அப்பயிர் (பசுமையாகி, வளர்ந்து) உறுதிப்படுகின்றது. பின்னர், அது தடித்துக் கனமாகின்றது. பின்னர், விவசாயிக்கு ஆச்சரியம் கொடுக்கும் விதத்தில் (வளர்ந்து,) அது தன்னுடைய தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது. இவர்களைக் கொண்டு நிராகரிப்பவர்களுக்குக் கோபமூட்டும் பொருட்டு (அந்த நம்பிக்கையாளர்களை படிப்படியாக அபிவிருத்திக்குக் கொண்டு வருகின்றான். எனினும்,) அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨௯)Tafseer