Skip to content

ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் - Page: 2

Al-Fath

(al-Fatḥ)

௧௧

سَيَقُوْلُ لَكَ الْمُخَلَّفُوْنَ مِنَ الْاَعْرَابِ شَغَلَتْنَآ اَمْوَالُنَا وَاَهْلُوْنَا فَاسْتَغْفِرْ لَنَا ۚيَقُوْلُوْنَ بِاَلْسِنَتِهِمْ مَّا لَيْسَ فِيْ قُلُوْبِهِمْۗ قُلْ فَمَنْ يَّمْلِكُ لَكُمْ مِّنَ اللّٰهِ شَيْـًٔا اِنْ اَرَادَ بِكُمْ ضَرًّا اَوْ اَرَادَ بِكُمْ نَفْعًا ۗبَلْ كَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا ١١

sayaqūlu
سَيَقُولُ
கூறுவார்(கள்)
laka
لَكَ
உமக்கு
l-mukhalafūna
ٱلْمُخَلَّفُونَ
பின்தங்கியவர்கள்
mina l-aʿrābi
مِنَ ٱلْأَعْرَابِ
கிராம அரபிகளில்
shaghalatnā
شَغَلَتْنَآ
எங்களைஈடுபடுத்தின
amwālunā
أَمْوَٰلُنَا
எங்கள்செல்வங்களும்
wa-ahlūnā
وَأَهْلُونَا
எங்கள் குடும்பங்களும்
fa-is'taghfir
فَٱسْتَغْفِرْ
ஆகவே, நீர் பாவமன்னிப்புக் கோருவீராக!
lanā
لَنَاۚ
எங்களுக்காக
yaqūlūna
يَقُولُونَ
அவர்கள் கூறுகின்றனர்
bi-alsinatihim
بِأَلْسِنَتِهِم
தங்கள் நாவுகளினால்
mā laysa
مَّا لَيْسَ
இல்லாதவற்றை
fī qulūbihim
فِى قُلُوبِهِمْۚ
தங்கள் உள்ளங்களில்
qul
قُلْ
கூறுவீராக!
faman
فَمَن
யார்?
yamliku
يَمْلِكُ
உரிமை பெறுவார்
lakum
لَكُم
உங்களுக்காக
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
shayan
شَيْـًٔا
எதற்கும்
in arāda
إِنْ أَرَادَ
நாடினால்
bikum
بِكُمْ
உங்களுக்கு
ḍarran
ضَرًّا
தீங்கை
aw arāda
أَوْ أَرَادَ
அல்லது/நாடினால்
bikum
بِكُمْ
உங்களுக்கு
nafʿan
نَفْعًۢاۚ
நன்மையை
bal
بَلْ
மாறாக
kāna
كَانَ
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
khabīran
خَبِيرًۢا
ஆழ்ந்தறிபவனாக
(நபியே! போர் செய்ய உங்களுடன் வராது) பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகள் உங்களிடம் வந்து "நாங்கள் உங்களுடன் வர எங்களுடைய பொருள்களும் எங்களுடைய குடும்பங்களும் எங்களுக்கு அவகாசமளிக்கவில்லை" என்று (பொய்யாகக்) கூறி, "(இறைவனிடம்) நீங்கள் எங்களுக்கு மன்னிப்புக் கோருவீராக!" என்று கூறுவார்கள். அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாதவை களைத் தங்கள் நாவுகளால் கூறுகின்றனர். ஆகவே, (நபியே!) நீங்கள் (அவர்களை நோக்கிக்) கூறுங்கள்: "அல்லாஹ் உங்களுக்கு யாதொரு தீமை செய்ய நாடினாலும் அல்லது அவன் உங்களுக்கு யாதொரு நன்மை செய்ய நாடினாலும் அதில் எதையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக உங்களுக்குத் தடுத்து விடக்கூடியவன் யார்? நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்துகொண்டு இருக்கின்றான். (பின்னும் நீங்கள் அவர்களை நோக்கி,) ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௧௧)
Tafseer
௧௨

بَلْ ظَنَنْتُمْ اَنْ لَّنْ يَّنْقَلِبَ الرَّسُوْلُ وَالْمُؤْمِنُوْنَ اِلٰٓى اَهْلِيْهِمْ اَبَدًا وَّزُيِّنَ ذٰلِكَ فِيْ قُلُوْبِكُمْ وَظَنَنْتُمْ ظَنَّ السَّوْءِۚ وَكُنْتُمْ قَوْمًاۢ بُوْرًا ١٢

bal
بَلْ
மாறாக
ẓanantum
ظَنَنتُمْ
நீங்கள் எண்ணினீர்கள்
an lan yanqaliba
أَن لَّن يَنقَلِبَ
அறவே திரும்ப மாட்டார்(கள்) என்று
l-rasūlu
ٱلرَّسُولُ
தூதரும்
wal-mu'minūna
وَٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்களும்
ilā ahlīhim
إِلَىٰٓ أَهْلِيهِمْ
தங்கள் குடும்பங்களுக்கு
abadan
أَبَدًا
ஒருபோதும்
wazuyyina
وَزُيِّنَ
இன்னும் அலங்கரிக்கப்பட்டு விட்டது
dhālika
ذَٰلِكَ
இது
fī qulūbikum
فِى قُلُوبِكُمْ
உங்கள் உள்ளங்களில்
waẓanantum
وَظَنَنتُمْ
(இன்னும் நீ) எண்ணினீர்கள்
ẓanna
ظَنَّ
எண்ணம்
l-sawi
ٱلسَّوْءِ
கெட்ட
wakuntum
وَكُنتُمْ
நீங்கள் இருக்கின்றீர்கள்
qawman
قَوْمًۢا
மக்களாக
būran
بُورًا
அழிந்து போகின்ற
"(அல்லாஹ்வுடைய) தூதரும், அவரை நம்பிக்கை கொண்டவர்களும் (போரிலிருந்து) தங்கள் குடும்பத்தார்களிடம் ஒரு காலத்திலும் திரும்பி வரவே மாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள். (ஆதலால்தான் போருக்கு நீங்கள் வரவில்லை.) இதுவே உங்கள் மனதில் அழகாக்கப்பட்டது. ஆதலால், நீங்கள் கெட்ட எண்ணத்தையே எண்ணிக் கொண்டிருந் தீர்கள். அதனால் நீங்கள்தான் அழிந்துபோனீர்கள்" (என்று கூறுங்கள்.) ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௧௨)
Tafseer
௧௩

وَمَنْ لَّمْ يُؤْمِنْۢ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ فَاِنَّآ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ سَعِيْرًا ١٣

waman
وَمَن
எவர்(கள்)
lam yu'min
لَّمْ يُؤْمِنۢ
நம்பிக்கை கொள்ளவில்லையோ
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை(யும்)
warasūlihi
وَرَسُولِهِۦ
அவனது தூதரையும்
fa-innā
فَإِنَّآ
நிச்சயமாக நாம்
aʿtadnā
أَعْتَدْنَا
தயார் செய்துள்ளோம்
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
saʿīran
سَعِيرًا
கொழுந்து விட்டெரியும் நரகத்தை
எவன் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் உண்மையாகவே நம்பிக்கை கொள்ளவில்லையோ (அவன் நிராகரிப்பவன்தான். ஆகவே,) அத்தகைய நிராகரிப்பவனுக்கு நரகத்தையே நிச்சயமாக நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௧௩)
Tafseer
௧௪

وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ يَغْفِرُ لِمَنْ يَّشَاۤءُ وَيُعَذِّبُ مَنْ يَّشَاۤءُ ۗوَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا ١٤

walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்விற்கே
mul'ku
مُلْكُ
ஆட்சி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
பூமியின்
yaghfiru
يَغْفِرُ
மன்னிக்கின்றான்
liman yashāu
لِمَن يَشَآءُ
தான் நாடுகின்றவர்களை
wayuʿadhibu
وَيُعَذِّبُ
இன்னும் வேதனை செய்கின்றான்
man yashāu
مَن يَشَآءُۚ
தான் நாடுகின்றவர்களை
wakāna
وَكَانَ
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ghafūran
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًا
மகாகருணையாளனாக
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் நாடியவர்களை மன்னித்து விடுகின்றான். அவன் நாடியவர்களை வேதனை செய்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௧௪)
Tafseer
௧௫

سَيَقُوْلُ الْمُخَلَّفُوْنَ اِذَا انْطَلَقْتُمْ اِلٰى مَغَانِمَ لِتَأْخُذُوْهَا ذَرُوْنَا نَتَّبِعْكُمْ ۚ يُرِيْدُوْنَ اَنْ يُّبَدِّلُوْا كَلٰمَ اللّٰهِ ۗ قُلْ لَّنْ تَتَّبِعُوْنَا كَذٰلِكُمْ قَالَ اللّٰهُ مِنْ قَبْلُ ۖفَسَيَقُوْلُوْنَ بَلْ تَحْسُدُوْنَنَا ۗ بَلْ كَانُوْا لَا يَفْقَهُوْنَ اِلَّا قَلِيْلًا ١٥

sayaqūlu
سَيَقُولُ
கூறுவார்(கள்)
l-mukhalafūna
ٱلْمُخَلَّفُونَ
பின்தங்கியவர்கள்
idhā inṭalaqtum
إِذَا ٱنطَلَقْتُمْ
நீங்கள் சென்றால்
ilā maghānima
إِلَىٰ مَغَانِمَ
கனீமத்துகளை நோக்கி
litakhudhūhā
لِتَأْخُذُوهَا
அவற்றை நீங்கள் எடுப்பதற்காக
dharūnā
ذَرُونَا
எங்களை விடுங்கள்
nattabiʿ'kum
نَتَّبِعْكُمْۖ
நாங்களும் உங்களைப் பின்பற்றி வருகிறோம்
yurīdūna
يُرِيدُونَ
அவர்கள் நாடுகின்றனர்
an yubaddilū
أَن يُبَدِّلُوا۟
அவர்கள் மாற்றிவிட
kalāma
كَلَٰمَ
பேச்சை
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
qul
قُل
நீர் கூறுவீராக!
lan tattabiʿūnā
لَّن تَتَّبِعُونَا
அறவே நீங்கள் எங்களை பின்பற்ற மாட்டீர்கள்
kadhālikum
كَذَٰلِكُمْ
இப்படித்தான்
qāla
قَالَ
கூறி இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min qablu
مِن قَبْلُۖ
இதற்கு முன்னரே
fasayaqūlūna
فَسَيَقُولُونَ
அவர்கள் கூறுவார்கள்
bal
بَلْ
இல்லை
taḥsudūnanā
تَحْسُدُونَنَاۚ
நீங்கள் எங்கள் மீது பொறாமைப்படுகின்றீர்கள்
bal
بَلْ
மாறாக
kānū
كَانُوا۟
இருக்கின்றனர்
lā yafqahūna
لَا يَفْقَهُونَ
விளங்காதவர்களாக
illā
إِلَّا
தவிர
qalīlan
قَلِيلًا
குறைந்த விஷயங்களை
(நபியே! முன்னர் போருக்கு உங்களுடன் வராது) பின் தங்கிவிட்டவர்கள், போரில் கிடைத்த பொருள்களை எடுத்துக் கொள்ள நீங்கள் செல்லும் சமயத்தில், (உங்களை நோக்கி) "நாங்களும் உங்களைப் பின்பற்றிவர எங்களை (அனுமதித்து) விடுங்கள்" என்று கூறுவார்கள். இவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையை மாற்றி விடவே கருதுகின்றார்கள். ஆகவே, நீங்கள் அவர்களை நோக்கி "நீங்கள் எங்களைப் பின்பற்றிவர வேண்டாம். இதற்கு முன்னரே அல்லாஹ் இவ்வாறு கூறிவிட்டான்" என்றும் கூறுங்கள் அதற்கவர்கள், ("அல்லாஹ் ஒன்றும் கூறவில்லை;") நீங்கள்தான் நம்மீது பொறாமை கொண்டு (இவ்வாறு கூறுகின்றீர்கள்) என்று கூறுவார்கள். அன்றி, அவர்களில் சிலரைத் தவிர (மற்றெவரும் இதன் கருத்தை) உணர்ந்துகொள்ள மாட்டார்கள். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௧௫)
Tafseer
௧௬

قُلْ لِّلْمُخَلَّفِيْنَ مِنَ الْاَعْرَابِ سَتُدْعَوْنَ اِلٰى قَوْمٍ اُولِيْ بَأْسٍ شَدِيْدٍ تُقَاتِلُوْنَهُمْ اَوْ يُسْلِمُوْنَ ۚ فَاِنْ تُطِيْعُوْا يُؤْتِكُمُ اللّٰهُ اَجْرًا حَسَنًا ۚ وَاِنْ تَتَوَلَّوْا كَمَا تَوَلَّيْتُمْ مِّنْ قَبْلُ يُعَذِّبْكُمْ عَذَابًا اَلِيْمًا ١٦

qul
قُل
கூறுவீராக!
lil'mukhallafīna
لِّلْمُخَلَّفِينَ
பின்தங்கியவர்களை நோக்கி
mina l-aʿrābi
مِنَ ٱلْأَعْرَابِ
கிராமவாசிகளில்
satud'ʿawna
سَتُدْعَوْنَ
அழைக்கப்படுவீர்கள்
ilā qawmin
إِلَىٰ قَوْمٍ
கூட்டத்தின் பக்கம்
ulī basin
أُو۟لِى بَأْسٍ
பலமுடைய(வர்கள்)
shadīdin
شَدِيدٍ
கடுமையான(து)
tuqātilūnahum
تُقَٰتِلُونَهُمْ
அவர்களிடம் நீங்கள் சண்டை செய்வதற்காக
aw yus'limūna
أَوْ يُسْلِمُونَۖ
அல்லது/அவர்கள் பணிந்து விடுவதற்காக
fa-in tuṭīʿū
فَإِن تُطِيعُوا۟
நீங்கள் கீழ்ப்படிந்தால்
yu'tikumu
يُؤْتِكُمُ
உங்களுக்கு கொடுப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ajran
أَجْرًا
கூலியை
ḥasanan
حَسَنًاۖ
அழகிய(து)
wa-in tatawallaw
وَإِن تَتَوَلَّوْا۟
நீங்கள் விலகினால்
kamā tawallaytum
كَمَا تَوَلَّيْتُم
நீங்கள் விலகியதை போன்று
min qablu
مِّن قَبْلُ
இதற்கு முன்பு
yuʿadhib'kum
يُعَذِّبْكُمْ
உங்களை தண்டிப்பான்
ʿadhāban
عَذَابًا
தண்டனையால்
alīman
أَلِيمًا
வலி தரக்கூடிய(து)
(நபியே!) பின்தங்கிய நாட்டுப்புறத்து அரபிகளை நோக்கி நீங்கள் கூறுங்கள்: "மிக பலசாலிகளான மக்களுடன் (போர்புரிய) அதிசீக்கிரத்தில் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அவர்கள் முற்றிலும் கட்டுப்படும் வரையில், நீங்கள் அவர்களுடன் போர்புரிய வேண்டியதிருக்கும். (இதில்) நீங்கள் எனக்கு கட்டுப்பட்டு நடப்பீர்களாயின், அல்லாஹ் உங்களுக்கு அழகான கூலியைக் கொடுப்பான். இதற்கு முன்னர் நீங்கள் (போர் செய்யாது) திரும்பி விட்டபடி (அச்சமயம் போர் புரியாது) நீங்கள் திரும்பி விடுவீர்களாயின், அவன் உங்களை மிக கடினமாகத் துன்புறுத்தி வேதனை செய்வான்." ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௧௬)
Tafseer
௧௭

لَيْسَ عَلَى الْاَعْمٰى حَرَجٌ وَّلَا عَلَى الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَى الْمَرِيْضِ حَرَجٌ ۗ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ يُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ وَمَنْ يَّتَوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا اَلِيْمًا ࣖ ١٧

laysa
لَّيْسَ
இல்லை
ʿalā l-aʿmā
عَلَى ٱلْأَعْمَىٰ
குருடர் மீது
ḥarajun
حَرَجٌ
சிரமம்
walā
وَلَا
இன்னும் இல்லை
ʿalā l-aʿraji
عَلَى ٱلْأَعْرَجِ
ஊனமானவர் மீது
ḥarajun
حَرَجٌ
சிரமம்
walā
وَلَا
இல்லை
ʿalā l-marīḍi
عَلَى ٱلْمَرِيضِ
நோயாளி மீது
ḥarajun
حَرَجٌۗ
சிரமம்
waman
وَمَن
எவர்
yuṭiʿi
يُطِعِ
கீழ்ப்படிவாரோ
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு(ம்)
warasūlahu
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
yud'khil'hu
يُدْخِلْهُ
அவரை நுழைப்பான்
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُۖ
நதிகள்
waman
وَمَن
எவர்
yatawalla
يَتَوَلَّ
விலகுவாரோ
yuʿadhib'hu
يُعَذِّبْهُ
அவரை தண்டிப்பான்
ʿadhāban
عَذَابًا
தண்டனையால்
alīman
أَلِيمًا
வலி தரக்கூடிய
(போருக்கு வராததைப் பற்றிக்) குருடன் மீது யாதொரு குற்றமுமில்லை; நொண்டி மீதும் யாதொரு குற்றமுமில்லை; நோயாளி மீதும் யாதொரு குற்றமுமில்லை. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மெய்யாகவே வழிப்பட்டு, (போருக்கு உங்களுடன்) வருகின்றாரோ, அவரை (அல்லாஹ்) சுவனபதிகளில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். எவர் (உங்களுக்கு வழிப்படாது போருக்கு உங்களுடன் வராது) புறக்கணிக்கின்றாரோ, அவரை மிக கடினமாகவே துன்புறுத்தி வேதனை செய்வான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௧௭)
Tafseer
௧௮

۞ لَقَدْ رَضِيَ اللّٰهُ عَنِ الْمُؤْمِنِيْنَ اِذْ يُبَايِعُوْنَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِيْ قُلُوْبِهِمْ فَاَنْزَلَ السَّكِيْنَةَ عَلَيْهِمْ وَاَثَابَهُمْ فَتْحًا قَرِيْبًاۙ ١٨

laqad
لَّقَدْ
திட்டவட்டமாக
raḍiya
رَضِىَ
திருப்தி அடைந்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿani l-mu'minīna
عَنِ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை
idh yubāyiʿūnaka
إِذْ يُبَايِعُونَكَ
உம்மிடம் அவர்கள் விசுவாச வாக்குறுதி செய்தபோது
taḥta l-shajarati
تَحْتَ ٱلشَّجَرَةِ
மரத்தின் கீழ்
faʿalima
فَعَلِمَ
அவன் அறிந்தான்
mā fī qulūbihim
مَا فِى قُلُوبِهِمْ
அவர்களின் உள்ளங்களில் உள்ளதை
fa-anzala
فَأَنزَلَ
ஆகவே, இறக்கினான்
l-sakīnata
ٱلسَّكِينَةَ
அமைதியை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
wa-athābahum
وَأَثَٰبَهُمْ
இன்னும் வெகுமதியாக கொடுத்தான்
fatḥan
فَتْحًا
ஒரு வெற்றியை(யும்)
qarīban
قَرِيبًا
சமீபமான(து)
அந்த மரத்தினடியில் உங்களிடம் கைகொடுத்து வாக்குறுதி செய்த நம்பிக்கையாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களிலிருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும், ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியான ஒரு வெற்றியையும் (கைபர் என்னும் இடத்தில்) அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௧௮)
Tafseer
௧௯

وَّمَغَانِمَ كَثِيْرَةً يَّأْخُذُوْنَهَا ۗ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا ١٩

wamaghānima
وَمَغَانِمَ
இன்னும் கனீமத்துகளை
kathīratan
كَثِيرَةً
அதிகமான
yakhudhūnahā
يَأْخُذُونَهَاۗ
அவர்கள் அவற்றை பெறுவார்கள்
wakāna
وَكَانَ
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿazīzan
عَزِيزًا
மிகைத்தவனாக
ḥakīman
حَكِيمًا
மகா ஞானவானாக
(அந்த போரில்) ஏராளமான பொருள்களையும் அவர்கள் கைப்பற்றும்படி செய்தான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமாக இருக்கின்றான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௧௯)
Tafseer
௨௦

وَعَدَكُمُ اللّٰهُ مَغَانِمَ كَثِيْرَةً تَأْخُذُوْنَهَا فَعَجَّلَ لَكُمْ هٰذِهٖ وَكَفَّ اَيْدِيَ النَّاسِ عَنْكُمْۚ وَلِتَكُوْنَ اٰيَةً لِّلْمُؤْمِنِيْنَ وَيَهْدِيَكُمْ صِرَاطًا مُّسْتَقِيْمًاۙ ٢٠

waʿadakumu
وَعَدَكُمُ
வாக்களித்தான் உங்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
maghānima
مَغَانِمَ
கனீமத்துகளை
kathīratan
كَثِيرَةً
அதிகமான
takhudhūnahā
تَأْخُذُونَهَا
அவற்றை நீங்கள் பெறுவீர்கள்
faʿajjala
فَعَجَّلَ
விரைவாக கொடுத்தான்
lakum hādhihi
لَكُمْ هَٰذِهِۦ
உங்களுக்கு/இதை
wakaffa
وَكَفَّ
இன்னும் அவன் தடுத்தான்
aydiya
أَيْدِىَ
கரங்களை
l-nāsi
ٱلنَّاسِ
மக்களின்
ʿankum
عَنكُمْ
உங்களை விட்டும்
walitakūna
وَلِتَكُونَ
இருப்பதற்காகவும்
āyatan
ءَايَةً
இறை அத்தாட்சியாக
lil'mu'minīna
لِّلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
wayahdiyakum
وَيَهْدِيَكُمْ
உங்களை வழி நடத்துவதற்காகவும்
ṣirāṭan
صِرَٰطًا
பாதையில்
mus'taqīman
مُّسْتَقِيمًا
நேரான
ஏராளமான பொருள்களை (போரில்) நீங்கள் கைப்பற்றுவீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித் திருந்தான். இதனை உங்களுக்கு அதிசீக்கிரத்திலும் கொடுத்து விட்டான். (உங்களுக்கு எதிரான) மனிதர்களின் கைகளையும் உங்களை விட்டுத் தடுத்துவிட்டான். இது நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஏற்பட்டது. அவனே உங்களை நேரான பாதையில் நடத்துவான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨௦)
Tafseer