Skip to content

ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் - Word by Word

Al-Fath

(al-Fatḥ)

bismillaahirrahmaanirrahiim

اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِيْنًاۙ ١

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
fataḥnā
فَتَحْنَا
வெற்றி வழங்கினோம்
laka
لَكَ
உமக்கு
fatḥan mubīnan
فَتْحًا مُّبِينًا
தெளிவானவெற்றியாக
(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப்பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௧)
Tafseer

لِّيَغْفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْۢبِكَ وَمَا تَاَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُّسْتَقِيْمًاۙ ٢

liyaghfira
لِّيَغْفِرَ
மன்னிப்பதற்காக(வும்)
laka l-lahu
لَكَ ٱللَّهُ
உமக்கு/அல்லாஹ்
mā taqaddama
مَا تَقَدَّمَ
முந்தியதையும்
min dhanbika
مِن ذَنۢبِكَ
உமது பாவத்தில்
wamā ta-akhara
وَمَا تَأَخَّرَ
பிந்தியதையும்
wayutimma
وَيُتِمَّ
முழுமைப்படுத்துவதற்காகவும்
niʿ'matahu
نِعْمَتَهُۥ
அவனது அருளை
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
wayahdiyaka
وَيَهْدِيَكَ
உமக்கு வழி காண்பிப்பதற்காகவும்
ṣirāṭan mus'taqīman
صِرَٰطًا مُّسْتَقِيمًا
நேரான பாதையை
(அதற்காக நீங்கள் உங்களது இறைவனுக்கு நன்றி செலுத்து வீராக! அதனால்,) உங்களது முன் பின்னுள்ள தவறுகள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்துத் தனது அருட்கொடையையும் உங்கள் மீது முழுமைபடுத்தி வைத்து, உங்களை அவன் நேரான வழியிலும் நடத்துவான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௨)
Tafseer

وَّيَنْصُرَكَ اللّٰهُ نَصْرًا عَزِيْزًا ٣

wayanṣuraka
وَيَنصُرَكَ
உமக்கு உதவி செய்வதற்காகவும்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
naṣran
نَصْرًا
உதவி
ʿazīzan
عَزِيزًا
மிக கம்பீரமான
(நபியே!) மேலும் (தொடர்ந்து) அல்லாஹ் உங்களுக்குப் பலமான உதவி புரிந்தே வருவான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௩)
Tafseer

هُوَ الَّذِيْٓ اَنْزَلَ السَّكِيْنَةَ فِيْ قُلُوْبِ الْمُؤْمِنِيْنَ لِيَزْدَادُوْٓا اِيْمَانًا مَّعَ اِيْمَانِهِمْ ۗ وَلِلّٰهِ جُنُوْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًاۙ ٤

huwa
هُوَ
அவன்தான்
alladhī
ٱلَّذِىٓ
எப்படிப்பட்டவன்
anzala
أَنزَلَ
இறக்கினான்
l-sakīnata
ٱلسَّكِينَةَ
அமைதியை
fī qulūbi
فِى قُلُوبِ
உள்ளங்களில்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களின்
liyazdādū
لِيَزْدَادُوٓا۟
அவர்கள் அதிகரிப்பதற்காக
īmānan
إِيمَٰنًا
நம்பிக்கையால்
maʿa īmānihim
مَّعَ إِيمَٰنِهِمْۗ
அவர்கள் தங்கள் நம்பிக்கையுடன்
walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்விற்கு உரியனவே
junūdu
جُنُودُ
இராணுவங்கள்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியின்
wakāna
وَكَانَ
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalīman
عَلِيمًا
நன்கறிந்தவனாக
ḥakīman
حَكِيمًا
மகா ஞானவானாக
நம்பிக்கை கொண்டவர்களுடைய உள்ளங்களில் அவன்தான் சாந்தியையும், ஆறுதலையும் அளித்து, அவர்களுடைய நம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கும்படி செய்தான். வானங்கள், பூமி முதலிய வைகளிலுள்ள படைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. (அவைகளைக் கொண்டு அவன் விரும்பியவர்களுக்கு உதவி புரிவான்.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௪)
Tafseer

لِّيُدْخِلَ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَيُكَفِّرَ عَنْهُمْ سَيِّاٰتِهِمْۗ وَكَانَ ذٰلِكَ عِنْدَ اللّٰهِ فَوْزًا عَظِيْمًاۙ ٥

liyud'khila
لِّيُدْخِلَ
அவன் நுழைப்பதற்காக(வும்)
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்ட ஆண்களையும்
wal-mu'mināti
وَٱلْمُؤْمِنَٰتِ
நம்பிக்கை கொண்ட பெண்களையும்
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள்
fīhā
فِيهَا
அதில்
wayukaffira
وَيُكَفِّرَ
அகற்றுவதற்காகவும்
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டும்
sayyiātihim
سَيِّـَٔاتِهِمْۚ
அவர்களின் பாவங்களை
wakāna
وَكَانَ
இருக்கின்றது
dhālika
ذَٰلِكَ
இதுதான்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
fawzan
فَوْزًا
வெற்றியாக
ʿaẓīman
عَظِيمًا
மகத்தான
(அல்லாஹ்) நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சுவனபதிகளில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கிவிடுவார்கள். அவர்களின் பாவச்சுமையையும், அவர்களிலிருந்தும் நீக்கி விடுவான். இது அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் மகத்தான ஒரு வெற்றியாக இருக்கின்றது.. ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௫)
Tafseer

وَّيُعَذِّبَ الْمُنٰفِقِيْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِيْنَ وَالْمُشْرِكٰتِ الظَّاۤنِّيْنَ بِاللّٰهِ ظَنَّ السَّوْءِۗ عَلَيْهِمْ دَاۤىِٕرَةُ السَّوْءِۚ وَغَضِبَ اللّٰهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ وَاَعَدَّ لَهُمْ جَهَنَّمَۗ وَسَاۤءَتْ مَصِيْرًا ٦

wayuʿadhiba
وَيُعَذِّبَ
வேதனை செய்வதற்காகவும்
l-munāfiqīna
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சக ஆண்களை(யும்)
wal-munāfiqāti
وَٱلْمُنَٰفِقَٰتِ
நயவஞ்சக பெண்களையும்
wal-mush'rikīna
وَٱلْمُشْرِكِينَ
இணைவைக்கின்ற ஆண்களையும்
wal-mush'rikāti
وَٱلْمُشْرِكَٰتِ
இணைவைக்கின்ற பெண்களையும்
l-ẓānīna
ٱلظَّآنِّينَ
எண்ணுகின்றனர்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்தில்
ẓanna l-sawi
ظَنَّ ٱلسَّوْءِۚ
கெட்ட எண்ணம்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீதுதான்
dāiratu
دَآئِرَةُ
சுழற்சி இருக்கிறது
l-sawi
ٱلسَّوْءِۖ
கெட்ட
waghaḍiba
وَغَضِبَ
கோபப்படுகின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
walaʿanahum
وَلَعَنَهُمْ
இன்னும் அவர்களை சபிக்கின்றான்
wa-aʿadda
وَأَعَدَّ
இன்னும் தயார் செய்துள்ளான்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
jahannama
جَهَنَّمَۖ
நரகத்தை
wasāat maṣīran
وَسَآءَتْ مَصِيرًا
அது மிகக் கெட்ட மீளுமிடமாகும்
அல்லாஹ்வைப் பற்றிக் கெட்ட எண்ணம் கொள்ளும் நயவஞ்சகமுள்ள ஆண்களையும் பெண்களையும், இணை வைத்து வணங்கும் ஆண்களையும் பெண்களையும் (அல்லாஹ்) வேதனை செய்தே தீருவான். வேதனை அவர்கள் (தலைக்கு) மேல் சூழ்ந்துகொண்டு இருக்கின்றது. அல்லாஹ் அவர்கள் மீது கோபப்பட்டு, அவர்களைச் சபித்து, அவர்களுக்காக நரகத்தையும் தயார்படுத்தி வைத்திருக்கின்றான். அது செல்லுமிடங்களில் மகா கெட்டது. ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௬)
Tafseer

وَلِلّٰهِ جُنُوْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا ٧

walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்விற்கே
junūdu
جُنُودُ
இராணுவங்கள்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியின்
wakāna
وَكَانَ
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿazīzan
عَزِيزًا
மிகைத்தவனாக
ḥakīman
حَكِيمًا
மகா ஞானவானாக
வானங்கள் பூமியிலுள்ள படைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையே. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமாக இருக்கின்றான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௭)
Tafseer

اِنَّآ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًاۙ ٨

innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
arsalnāka
أَرْسَلْنَٰكَ
உம்மை அனுப்பினோம்
shāhidan
شَٰهِدًا
சாட்சியாளராக(வும்)
wamubashiran
وَمُبَشِّرًا
நற்செய்தி கூறுபவராகவும்
wanadhīran
وَنَذِيرًا
எச்சரிப்பவராகவும்
(நபியே!) நிச்சயமாக நாம் உங்களை (நம்பிக்கையாளர்களின் ஈமானைப் பற்றி) சாட்சி கூறுவதற்காகவும், (அவர்களுக்கு) நற்செய்தி கூறுவதற்காகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் அனுப்பி வைத்தோம். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௮)
Tafseer

لِّتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُعَزِّرُوْهُ وَتُوَقِّرُوْهُۗ وَتُسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا ٩

litu'minū
لِّتُؤْمِنُوا۟
நீங்கள் நம்பிக்கை கொள்வதற்காக(வும்)
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
warasūlihi
وَرَسُولِهِۦ
அவனது தூதரையும்
watuʿazzirūhu
وَتُعَزِّرُوهُ
அவரை கண்ணியப்படுத்துவதற்காகவும்
watuwaqqirūhu
وَتُوَقِّرُوهُ
அவரை மதிப்பதற்காகவும்
watusabbiḥūhu
وَتُسَبِّحُوهُ
அவனைப் புகழ்ந்து துதிப்பதற்காகவும்
buk'ratan
بُكْرَةً
காலை(யிலும்)
wa-aṣīlan
وَأَصِيلًا
மாலையிலும்
ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டு, அவருக்கு உதவி புரிந்து, அவரை கண்ணியப்படுத்தி வைத்து, காலையிலும் மாலையிலும் அவனை துதி செய்து வாருங்கள். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௯)
Tafseer
௧௦

اِنَّ الَّذِيْنَ يُبَايِعُوْنَكَ اِنَّمَا يُبَايِعُوْنَ اللّٰهَ ۗيَدُ اللّٰهِ فَوْقَ اَيْدِيْهِمْ ۚ فَمَنْ نَّكَثَ فَاِنَّمَا يَنْكُثُ عَلٰى نَفْسِهٖۚ وَمَنْ اَوْفٰى بِمَا عٰهَدَ عَلَيْهُ اللّٰهَ فَسَيُؤْتِيْهِ اَجْرًا عَظِيْمًا ࣖ ١٠

inna alladhīna yubāyiʿūnaka
إِنَّ ٱلَّذِينَ يُبَايِعُونَكَ
நிச்சயமாக/எவர்கள்/உம்மிடம் விசுவாச உறுதிமொழி செய்கின்றார்கள்
innamā yubāyiʿūna
إِنَّمَا يُبَايِعُونَ
அவர்கள் விசுவாச உறுதி மொழி செய்வதெல்லாம்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விடம்தான்
yadu
يَدُ
கை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
fawqa
فَوْقَ
மேல் இருக்கிறது
aydīhim
أَيْدِيهِمْۚ
அவர்களின் கைகளுக்கு
faman nakatha
فَمَن نَّكَثَ
ஆகவேயார் முறிப்பாரோ
fa-innamā yankuthu
فَإِنَّمَا يَنكُثُ
அவர்முறிப்பதெல்லாம்
ʿalā nafsihi
عَلَىٰ نَفْسِهِۦۖ
தனக்கு எதிராகத்தான்
waman awfā
وَمَنْ أَوْفَىٰ
யார் நிறைவேற்றுவாரோ
bimā ʿāhada
بِمَا عَٰهَدَ
எதை/ ஒப்பந்தம் செய்தாரோ
ʿalayhu
عَلَيْهُ
அதன் மீது
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
fasayu'tīhi
فَسَيُؤْتِيهِ
அவருக்குக்
ajran
أَجْرًا
கூலியை
ʿaẓīman
عَظِيمًا
மகத்தான(து)
(நபியே!) எவர்கள் (தம்முடைய உடல், பொருள், ஆவியை தியாகம் செய்து உங்களுக்கு உதவி புரிவதாக ஹுதைபிய்யாவில்) உங்களுடைய கையைப் பிடித்து வாக்குறுதி செய்கின்றார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே வாக்குறுதி செய்கின்றனர். அவர்கள் கை மீது அல்லாஹ்வுடைய கைதான் இருக்கின்றது. ஆகவே, (அவ்வாக்குறுதியை) எவன் முறித்து விடுகின்றானோ, அவன் தனக்குக் கேடாகவே அதனை முறிக்கின்றான். எவன் அல்லாஹ்விடம் செய்த அந்த வாக்குறுதியை முழுமைப்படுத்தி வைக்கின்றானோ, அவனுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை அதி சீக்கிரத்தில் (நிச்சயமாக) கொடுப்பான். ([௪௮] ஸூரத்துல் ஃபத்ஹ்: ௧௦)
Tafseer