Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௩௮

Qur'an Surah Muhammad Verse 38

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰٓاَنْتُمْ هٰٓؤُلَاۤءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِۚ فَمِنْكُمْ مَّنْ يَّبْخَلُ ۚوَمَنْ يَّبْخَلْ فَاِنَّمَا يَبْخَلُ عَنْ نَّفْسِهٖ ۗوَاللّٰهُ الْغَنِيُّ وَاَنْتُمُ الْفُقَرَاۤءُ ۗ وَاِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْۙ ثُمَّ لَا يَكُوْنُوْٓا اَمْثَالَكُمْ ࣖ (محمد : ٤٧)

hāantum hāulāi
هَٰٓأَنتُمْ هَٰٓؤُلَآءِ
Here you are - these
நீங்கள்தான்
tud'ʿawna
تُدْعَوْنَ
called
அழைக்கப்படுகிறீர்கள்
litunfiqū
لِتُنفِقُوا۟
to spend
நீங்கள் தர்மம் செய்வதற்கு
fī sabīli
فِى سَبِيلِ
in (the) way
பாதையில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah -
அல்லாஹ்வின்
faminkum
فَمِنكُم
but among you
உங்களில் இருக்கின்றார்
man yabkhalu
مَّن يَبْخَلُۖ
(are some) who withhold
கருமித்தனம் செய்பவரும்
waman yabkhal
وَمَن يَبْخَلْ
and whoever withholds
எவர் கருமித்தனம் செய்வாரோ
fa-innamā yabkhalu
فَإِنَّمَا يَبْخَلُ
then only he withholds
அவர் கருமித்தனம் செய்வதெல்லாம்
ʿan nafsihi
عَن نَّفْسِهِۦۚ
from himself
அவருடைய ஆன்மாவின் கருமித்தனத்தினால்தான்
wal-lahu
وَٱللَّهُ
But Allah
அல்லாஹ்தான்
l-ghaniyu
ٱلْغَنِىُّ
(is) Free of need
முற்றிலும் நிறைவானவன்
wa-antumu
وَأَنتُمُ
while you
நீங்கள்தான்
l-fuqarāu
ٱلْفُقَرَآءُۚ
(are) the needy
தேவையுள்ளவர்கள்
wa-in tatawallaw
وَإِن تَتَوَلَّوْا۟
And if you turn away
நீங்கள் விலகிச்சென்றால்
yastabdil
يَسْتَبْدِلْ
He will replace you
அவன் மாற்றுவான்
qawman
قَوْمًا
(with) a people
ஒரு சமுதாயத்தை
ghayrakum
غَيْرَكُمْ
other than you
நீங்கள் அல்லாத
thumma
ثُمَّ
then
பிறகு
lā yakūnū
لَا يَكُونُوٓا۟
not they will be
அவர்கள் இருக்க மாட்டார்கள்
amthālakum
أَمْثَٰلَكُم
(the) likes of you
உங்களைப் போன்று

Transliteration:

haaa antum haaa'ulaaa'i tud'awna litunfiqoo fee sabeelillaahi faminkum many yabkhalu wa many yabkhal fa innamaa yabkhalu 'an nafsih; wallaahu Ghaniyyu wa antumul fuqaraaa'; wa in tatwal law yastabdil qawman ghairakum summa laa yakoonooo amsaalakum (QS. Muḥammad:38)

English Sahih International:

Here you are – those invited to spend in the cause of Allah – but among you are those who withhold [out of greed]. And whoever withholds only withholds [benefit] from himself; and Allah is the Free of need, while you are the needy. And if you turn away [i.e., refuse], He will replace you with another people; then they will not be the likes of you. (QS. Muhammad, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

(மக்களே!) நீங்கள் நன்கு கவனத்தில் வையுங்கள். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய அழைக்கப்படும் சமயத்தில், கஞ்சத்தனம் செய்பவரும் உங்களில் இருக்கின்றார். அவ்வாறு எவரேனும் கஞ்சத்தனம் செய்தால், அவர் தனக்குக் கேடாகவே கஞ்சத்தனம் செய்கின்றார். அல்லாஹ்வோ தேவை யற்றவன். நீங்கள் தேவைப்பட்டவர்களாகவே இருக்கின்றீர்கள். (அவனுடைய கட்டளைகளைப்) பின்னும் நீங்கள் புறக்கணித்தால், (உங்களை அழித்து) உங்களை அல்லாத மக்களை (உங்கள் இடத்தில்) மாற்றி (அமைத்து) விடுவான். பின்னர், அவர்கள் உங்களைப் போல் இருக்க மாட்டார்கள். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௩௮)

Jan Trust Foundation

அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள்தான் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதற்கு அழைக்கப்படுகிறீர்கள். உங்களில் கருமித்தனம் செய்பவரும் இருக்கின்றார். எவர் கருமித்தனம் செய்வாரோ அவர் கருமித்தனம் செய்வதெல்லாம் அவருடைய ஆன்மாவின் கருமித்தனத்தினால் தான். (அவருடைய ஆன்மா - உள்ளம் கொடைத் தன்மையுடையதாக இருந்திருந்தால் அவர் கருமித்தனம் செய்திருக்க மாட்டார். மாறாக, அல்லாஹ்வின் பாதையில் தாராளமாக தர்மம் செய்திருப்பார்.) அல்லாஹ்தான் முற்றிலும் நிறைவானவன் (உண்மையான செல்வந்தன்) ஆவான். நீங்கள்தான் (எல்லா வகையிலும்) தேவையுள்ளவர்கள் (ஏழைகள்) ஆவீர்கள். நீங்கள் விலகிச்சென்றால் நீங்கள் அல்லாத ஒரு சமுதாயத்தை அவன் மாற்றுவான். பிறகு, அவர்கள் உங்களைப் போன்று இருக்க மாட்டார்கள்.