Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௩௭

Qur'an Surah Muhammad Verse 37

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ يَّسْـَٔلْكُمُوْهَا فَيُحْفِكُمْ تَبْخَلُوْا وَيُخْرِجْ اَضْغَانَكُمْ (محمد : ٤٧)

in yasalkumūhā
إِن يَسْـَٔلْكُمُوهَا
If He were to ask you for it
அவன் அவற்றை உங்களிடம் கேட்டால்
fayuḥ'fikum
فَيُحْفِكُمْ
and press you
இன்னும் அவன் உங்களை வலியுறுத்தினால்
tabkhalū
تَبْخَلُوا۟
you will withhold
நீங்கள் கருமித்தனம் செய்வீர்கள்
wayukh'rij
وَيُخْرِجْ
and He will bring forth
இன்னும் வெளிப்படுத்தி காண்பித்து விடுவான்
aḍghānakum
أَضْغَٰنَكُمْ
your hatred
உங்கள் குரோதங்களை

Transliteration:

Iny yas'alkumoohaa fa yuhfikum tabkhaloo wa yukhrij adghaanakum (QS. Muḥammad:37)

English Sahih International:

If He should ask you for them and press you, you would withhold, and He would expose your hatred [i.e., unwillingness]. (QS. Muhammad, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

அவ்வாறு, அவன் (தனக்காக) உங்களிடம் கேட்டு வற்புறுத்தினாலும் (அதனைக் கொடுக்காது) நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள்; (அந்நேரத்தில்) அல்லாஹ் உங்களுடைய கெட்ட எண்ணத்தை வெளியாக்கி விடுவான். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௩௭)

Jan Trust Foundation

அவன் உங்களிடம் அவற்றைக் கேட்டு வற்புறுத்தினாலும், நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள். (பேராசை போன்ற) உங்கள் உள்ளக்கிடக்கைகளையும் அவன் வெளிப்படுத்தி விடுவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் அவற்றை (உங்கள் செல்வங்களை எல்லாம் தர்மமாக) உங்களிடம் கேட்டால், உங்களை (அதற்காக) வலியுறுத்தினால் (உங்களை நிர்பந்தித்தால்) நீங்கள் (அவ்வாறு தர்மம் செய்ய முடியாமல்) கருமித்தனம் செய்வீர்கள். அவன் உங்கள் குரோதங்களை (செல்வங்களை நேசிப்பதில் உங்கள் உள்ளங்களில் இருக்கின்ற பேராசைகளை) வெளிப்படுத்தி காண்பித்து விடுவான்.