குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௩௬
Qur'an Surah Muhammad Verse 36
ஸூரத்து முஹம்மது [௪௭]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ ۗوَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا يُؤْتِكُمْ اُجُوْرَكُمْ وَلَا يَسْـَٔلْكُمْ اَمْوَالَكُمْ (محمد : ٤٧)
- innamā l-ḥayatu l-dun'yā
- إِنَّمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا
- Only the life (of) the world
- உலக வாழ்க்கை எல்லாம்
- laʿibun
- لَعِبٌ
- (is) play
- விளையாட்டு(ம்)
- walahwun
- وَلَهْوٌۚ
- and amusement
- வேடிக்கையும்தான்
- wa-in tu'minū
- وَإِن تُؤْمِنُوا۟
- And if you believe
- நீங்கள் நம்பிக்கை கொண்டால்
- watattaqū
- وَتَتَّقُوا۟
- and fear (Allah)
- இன்னும் நீங்கள் அஞ்சி நடந்தால்
- yu'tikum
- يُؤْتِكُمْ
- He will give you
- அவன் உங்களுக்கு கொடுப்பான்
- ujūrakum
- أُجُورَكُمْ
- your rewards
- உங்கள் கூலிகளை
- walā yasalkum
- وَلَا يَسْـَٔلْكُمْ
- and not will ask you
- அவன் உங்களிடம் கேட்கமாட்டான்
- amwālakum
- أَمْوَٰلَكُمْ
- (for) your wealth
- உங்கள்செல்வங்களை
Transliteration:
Innamal hayaatud dunyaa la'ibunw wa lahw; wa in to'minoo wa tattaqoo yu'tikum ujoorakum wa laa yas'alkum amwaalakum(QS. Muḥammad:36)
English Sahih International:
[This] worldly life is only amusement and diversion. And if you believe and fear Allah, He will give you your rewards and not ask you for your properties. (QS. Muhammad, Ayah ௩௬)
Abdul Hameed Baqavi:
இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும் வேடிக்கையும் தான். நீங்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு அவனுக்குப் பயந்து நடந்துகொண்டால், உங்களுடைய பொருள்களை அவன் (தனக்காகக்) கேட்கவில்லை. (உங்களுடைய நன்மைக்காகவே கேட்கின்றான்.) (ஸூரத்து முஹம்மது, வசனம் ௩௬)
Jan Trust Foundation
திடமாக இவ்வுலக வாழ்க்கை வீண்விளையாட்டாகவும் வேடிக்கையாகவுமிருக்கிறது; ஆனால், நீங்கள் ஈமான் கொண்டு பயபக்தியுடையவர்களாயிருந்தால், அவன் உங்களுடைய கூலிகளை உங்களுக்கு அளிப்பான். அன்றியும் உங்களிடம் உங்களுடைய பொருள்களை அவன் கேட்கவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உலக வாழ்க்கை எல்லாம் விளையாட்டும் வேடிக்கையும்தான். நீங்கள் நம்பிக்கை கொண்டு, (அல்லாஹ்வை) அஞ்சி நடந்தால் அவன் உங்கள் (நன்மைகளுக்குரிய) கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை (எல்லாம் அல்லாஹ்வின் பாதையில் கொடுத்துவிடுங்கள் என்று) அவன் உங்களிடம் கேட்கமாட்டான்.