Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௩௪

Qur'an Surah Muhammad Verse 34

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ ثُمَّ مَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يَّغْفِرَ اللّٰهُ لَهُمْ (محمد : ٤٧)

inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
Indeed those who
நிச்சயமாக எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieve
நிராகரித்தார்கள்
waṣaddū
وَصَدُّوا۟
and turn away
இன்னும் தடுத்தார்கள்
ʿan sabīli
عَن سَبِيلِ
from (the) way
பாதையில் இருந்து
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
thumma mātū
ثُمَّ مَاتُوا۟
then died
பிறகு மரணித்தார்கள்
wahum
وَهُمْ
while they
தாங்கள் இருக்கின்ற நிலையில்
kuffārun
كُفَّارٌ
(were) disbelievers
நிராகரிப்பாளர்களாக
falan yaghfira
فَلَن يَغْفِرَ
never will Allah forgive
மன்னிக்கவே மாட்டான்
l-lahu
ٱللَّهُ
will Allah forgive
அல்லாஹ்
lahum
لَهُمْ
them
அவர்களை

Transliteration:

Innal lazeena kafaroo wa saddoo 'an sabeelil laahi summa maatoo wa hum kuffaarun falany yaghfirallaahu lahum (QS. Muḥammad:34)

English Sahih International:

Indeed, those who disbelieved and averted [people] from the path of Allah and then died while they were disbelievers – never will Allah forgive them. (QS. Muhammad, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

எவர்கள் நிராகரித்து, அல்லாஹ்வுடைய பாதையையும் தடுத்துக் கொண்டு, நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகின்றார்களோ, அவர்களுடைய குற்றங்களை அல்லாஹ் ஒரு காலத்திலும் மன்னிப்பதே இல்லை. (ஸூரத்து முஹம்மது, வசனம் ௩௪)

Jan Trust Foundation

நிச்சயமாக, எவர்கள் நிராகரித்துக் கொண்டும், (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்துக் கொண்டும், பின்னர் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே இறந்தும் விடுகிறார்களோ - இ(த்தகைய)வர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ, அல்லாஹ்வின் பாதையில் இருந்து (மக்களை) தடுத்தார்களோ, பிறகு, தாங்கள் நிராகரிப்பாளர்களாக இருக்கின்ற நிலையில் மரணித்தார்களோ - அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.