குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௩௨
Qur'an Surah Muhammad Verse 32
ஸூரத்து முஹம்மது [௪௭]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ وَشَاۤقُّوا الرَّسُوْلَ مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدٰى لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْـًٔاۗ وَسَيُحْبِطُ اَعْمَالَهُمْ (محمد : ٤٧)
- inna alladhīna
- إِنَّ ٱلَّذِينَ
- Indeed those who
- நிச்சயமாக எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieve
- நிராகரித்தார்கள்
- waṣaddū
- وَصَدُّوا۟
- and turn away
- இன்னும் தடுத்தார்கள்
- ʿan sabīli
- عَن سَبِيلِ
- from (the) way of Allah
- பாதையில் இருந்து
- l-lahi
- ٱللَّهِ
- (the) way of Allah
- அல்லாஹ்வின்
- washāqqū
- وَشَآقُّوا۟
- and opposed
- இன்னும் மாறுசெய்தார்கள்
- l-rasūla
- ٱلرَّسُولَ
- the Messenger
- தூதருக்கு
- min baʿdi mā tabayyana
- مِنۢ بَعْدِ مَا تَبَيَّنَ
- after after [what] (has been) made clear
- தெளிவானதற்குப் பின்னர்
- lahumu
- لَهُمُ
- to them
- தங்களுக்கு
- l-hudā
- ٱلْهُدَىٰ
- the guidance
- நேர்வழி
- lan yaḍurrū
- لَن يَضُرُّوا۟
- never will they harm
- அறவே அவர்கள் தீங்கு செய்ய முடியாது
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்விற்கு
- shayan
- شَيْـًٔا
- (in) anything
- எதையும்
- wasayuḥ'biṭu
- وَسَيُحْبِطُ
- and He will make worthless
- இன்னும் வீணாக்கி விடுவான்
- aʿmālahum
- أَعْمَٰلَهُمْ
- their deeds
- அவர்களின் செயல்களை
Transliteration:
Innnal lazeena kafaroo wa saddoo 'an sabeelil laahi wa shaaaqqur Rasoola mim ba'di maa tabaiyana lahumul hudaa lany yadurrul laaha shai'anw wa sa yuhbitu a'maalahum(QS. Muḥammad:32)
English Sahih International:
Indeed, those who disbelieved and averted [people] from the path of Allah and opposed the Messenger after guidance had become clear to them – never will they harm Allah at all, and He will render worthless their deeds. (QS. Muhammad, Ayah ௩௨)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக எவர்கள் நேரான வழி இன்னதென்று தெளிவான பின்னரும் (அதனை) நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வின் பாதையை (மற்றவர்களுக்கு)த் தடுத்துக்கொண்டு (அல்லாஹ்வுடைய) தூதருக்கு விரோதமாக நடக்கின்றார்களோ அவர்கள், (அதனால்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு யாதொரு தீங்கும் செய்துவிட முடியாது. அவர்களுடைய (சூழ்ச்சியான) காரியங்களையெல்லாம் நிச்சயமாக அல்லாஹ் அழித்து விடுவான். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௩௨)
Jan Trust Foundation
நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் (பிறரை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தும், நேர்வழி தங்களுக்குத் தெளிவான பிறகு (நம்) தூதரை எதிர்த்து முரண்பட்டுக் கொண்டும் இருக்கின்றனரோ - அவர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித இடர்பாடும் செய்துவிட முடியாது; அன்றியும் அவர்களுடைய செய்கைகளை அவன் பயனற்றவையாக ஆக்கியும் விடுவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நிராகரித்தவர்கள், அல்லாஹ்வின் பாதையில் இருந்து (மக்களை) தடுத்தவர்கள், நேர்வழி தங்களுக்கு தெளிவானதற்குப் பின்னர் தூதருக்கு மாறுசெய்தவர்கள் அல்லாஹ்விற்கு அறவே எதையும் தீங்கு செய்ய முடியாது. அல்லாஹ் அவர்களின் செயல்களை வீணாக்கி விடுவான்.