Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௩௦

Qur'an Surah Muhammad Verse 30

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ نَشَاۤءُ لَاَرَيْنٰكَهُمْ فَلَعَرَفْتَهُمْ بِسِيْمٰهُمْ ۗوَلَتَعْرِفَنَّهُمْ فِيْ لَحْنِ الْقَوْلِۗ وَاللّٰهُ يَعْلَمُ اَعْمَالَكُمْ (محمد : ٤٧)

walaw nashāu
وَلَوْ نَشَآءُ
And if We willed
நாம் நாடினால்
la-araynākahum
لَأَرَيْنَٰكَهُمْ
surely We could show them to you
அவர்களை உமக்கு காண்பித்து விடுவோம்
falaʿaraftahum
فَلَعَرَفْتَهُم
and you would know them
அவர்களை நீர் அறிந்து கொள்வீர்
bisīmāhum
بِسِيمَٰهُمْۚ
by their marks;
அவர்களின் வெளிப்படையான அடையாளங்களினால்
walataʿrifannahum
وَلَتَعْرِفَنَّهُمْ
but surely you will know them
இன்னும் அவர்களை நிச்சயமாக நீர் அறிவீர்
fī laḥni l-qawli
فِى لَحْنِ ٱلْقَوْلِۚ
by (the) tone (of their) speech
அவர்களின் பேச்சின் தொனியிலும்
wal-lahu yaʿlamu
وَٱللَّهُ يَعْلَمُ
And Allah knows
அல்லாஹ் நன்கறிவான்
aʿmālakum
أَعْمَٰلَكُمْ
your deeds
உங்கள் செயல்களை

Transliteration:

Wa law nashaaa'u la-arainaakahum fala 'araftahum bi seemaahum; wa lata'rifan nahum fee lahnil qawl; wallaahu ya'lamu a'maalakum (QS. Muḥammad:30)

English Sahih International:

And if We willed, We could show them to you, and you would know them by their mark; but you will surely know them by the tone of [their] speech. And Allah knows your deeds. (QS. Muhammad, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நாம் விரும்பினால், அவர்களை உங்களுக்கு காட்டிக் கொடுத்து விடுவோம். (அப்போது) அவர்களுடைய முகக் குறியைக்கொண்டே நீங்களும் அறிந்து கொள்வீர்கள். அவர்களுடைய தந்திரமான பேச்சின் போக்கைக் கொண்டும் நீங்கள் அவர்களை நிச்சயமாக அறிந்து கொள்வீர்கள். (நயவஞ்சகர்களே!) அல்லாஹ் உங்களுடைய செயல்களையும் நன்கறிவான். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௩௦)

Jan Trust Foundation

அன்றியும், நாம் நாடினால், திடமாக நாம் அவர்களை உமக்குக் காண்பித்திருப்போம்; அவர்களுடைய முகக்குறிகளைக் கொண்டு நீர் அவர்களை நன்கு அறிந்து கொள்வீர்; நிச்சயமாக அவர்களுடைய சூழ்ச்சியான பேச்சைக் கொண்டும் அவர்களை நீர் அறிந்து கொள்வீர்; மேலும் அல்லாஹ் உங்கள் செய்கைகளை நன்கறிகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் நாடினால் அவர்களை உமக்கு காண்பித்து விடுவோம். அவர்களை அவர்களின் வெளிப்படையான அடையாளங்களினால் நீர் அறிந்து கொள்வீர். இன்னும், அவர்களின் பேச்சின் தொனியிலும் அவர்களை நிச்சயமாக நீர் அறிவீர். அல்லாஹ் உங்கள் (அனைவரின்) செயல்களை நன்கறிவான்.