Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௩

Qur'an Surah Muhammad Verse 3

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ بِاَنَّ الَّذِيْنَ كَفَرُوا اتَّبَعُوا الْبَاطِلَ وَاَنَّ الَّذِيْنَ اٰمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَّبِّهِمْ ۗ كَذٰلِكَ يَضْرِبُ اللّٰهُ لِلنَّاسِ اَمْثَالَهُمْ (محمد : ٤٧)

dhālika
ذَٰلِكَ
That
இது
bi-anna
بِأَنَّ
(is) because
ஏனெனில் நிச்சயமாக
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieve
நிராகரித்தவர்கள்
ittabaʿū
ٱتَّبَعُوا۟
follow
பின்பற்றினர்
l-bāṭila
ٱلْبَٰطِلَ
falsehood
பொய்யை
wa-anna
وَأَنَّ
and because
நிச்சயமாக
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
those who believe
நம்பிக்கை கொண்டவர்கள்
ittabaʿū
ٱتَّبَعُوا۟
follow
பின்பற்றினார்கள்
l-ḥaqa
ٱلْحَقَّ
(the) truth
உண்மையை
min rabbihim
مِن رَّبِّهِمْۚ
from their Lord
தங்கள் இறைவனிடமிருந்து
kadhālika
كَذَٰلِكَ
Thus
இவ்வாறுதான்
yaḍribu
يَضْرِبُ
Allah presents
விவரிக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
Allah presents
அல்லாஹ்
lilnnāsi
لِلنَّاسِ
to the people
மக்களுக்கு
amthālahum
أَمْثَٰلَهُمْ
their similitudes
அவர்களுக்குரிய தன்மைகளை

Transliteration:

Zaalika bi annal lazeena kafarut taba'ul baatila wa annal lazeena aamanut taba'ul haqqa mir Rabbihim; kazaalika yadribul laahu linnaasi amsaalahum (QS. Muḥammad:3)

English Sahih International:

That is because those who disbelieve follow falsehood, and those who believe follow the truth from their Lord. Thus does Allah present to the people their comparisons. (QS. Muhammad, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

ஏனென்றால், நிச்சயமாக நிராகரிப்பவர்கள் பொய்யையே பின்பற்றி இருந்தார்கள். நம்பிக்கை கொண்டவர்களோ, நிச்சயமாகத் தங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மையையே பின்பற்றி இருந்தார்கள். இவ்வாறே (மற்ற) மனிதர்களுக்கு அல்லாஹ் அவர்களின் நிலைமையை உதாரணமா(கக் கூறித் தெளிவா)க்கு கின்றான். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௩)

Jan Trust Foundation

இது ஏனெனில்| நிராகரிப்போர் அசத்தியத்தையே நிச்சயமாகப் பின்பற்றுகிறார்கள்; நம்பிக்கை கொண்டவர்களோ, நிச்சயமாகத் தங்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ளதையே பின்பற்றுகிறார்கள் - இவ்வாறே மனிதர்களுக்கு அல்லாஹ் அவர்கள் நிலைமையை உவமானங்களா(கக் கூறி விள)க்குகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது ஏனெனில், நிச்சயமாக நிராகரித்தவர்கள் பொய்யை (-ஷைத்தானை) பின்பற்றினர். நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மையை (-நபியையும் குர்ஆனையும்) பின்பற்றினார்கள். இவ்வாறுதான் அல்லாஹ் மக்களுக்கு அவர்களுக்குரிய தன்மைகளை விவரிக்கின்றான்.