Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௨௮

Qur'an Surah Muhammad Verse 28

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ بِاَنَّهُمُ اتَّبَعُوْا مَآ اَسْخَطَ اللّٰهَ وَكَرِهُوْا رِضْوَانَهٗ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ ࣖ (محمد : ٤٧)

dhālika
ذَٰلِكَ
That
இது
bi-annahumu
بِأَنَّهُمُ
(is) because they
ஏனெனில், நிச்சயமாக அவர்கள்
ittabaʿū
ٱتَّبَعُوا۟
followed
பின்பற்றினார்கள்
mā askhaṭa
مَآ أَسْخَطَ
what angered
கோபமூட்டியதை
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்விற்கு
wakarihū
وَكَرِهُوا۟
and hated
இன்னும் வெறுத்தார்கள்
riḍ'wānahu
رِضْوَٰنَهُۥ
His pleasure
அவனது பொருத்தத்தை
fa-aḥbaṭa
فَأَحْبَطَ
so He made worthless
ஆகவே, வீணாக்கி விட்டான்
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
their deeds
அவர்களின் செயல்களை

Transliteration:

Zaalika bi annahumut taba'oo maaa askhatal laaha wa karihoo ridwaanahoo fa ahbata a'maalahum (QS. Muḥammad:28)

English Sahih International:

That is because they followed what angered Allah and disliked [what earns] His pleasure, so He rendered worthless their deeds. (QS. Muhammad, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

காரணமாவது: அல்லாஹ்வுக்குக் கோபமூட்டக் கூடியவை களையே இவர்கள் பின்பற்றி, அவனுக்குத் திருப்தித் தரக்கூடிய வைகளை வெறுத்து வந்தனர். ஆதலால், இவர்களுடைய நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் அழித்துவிட்டான். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௨௮)

Jan Trust Foundation

இது ஏனெனில்| நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தமைதான்; ஆகவே அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கி விட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது (வானவர்கள் இப்படி அடிப்பது) ஏனெனில், நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்விற்கு கோபமூட்டியதை பின்பற்றினார்கள். அவனது பொருத்தத்தை வெறுத்தார்கள். ஆகவே, அவர்களின் செயல்களை அல்லாஹ் வீணாக்கி விட்டான்.