Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௨௬

Qur'an Surah Muhammad Verse 26

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لِلَّذِيْنَ كَرِهُوْا مَا نَزَّلَ اللّٰهُ سَنُطِيْعُكُمْ فِيْ بَعْضِ الْاَمْرِۚ وَاللّٰهُ يَعْلَمُ اِسْرَارَهُمْ (محمد : ٤٧)

dhālika
ذَٰلِكَ
That
இது
bi-annahum
بِأَنَّهُمْ
(is) because they
ஏனெனில், நிச்சயமாக
qālū
قَالُوا۟
[they] said
கூறினார்கள்
lilladhīna karihū
لِلَّذِينَ كَرِهُوا۟
to those who hate
வெறுத்தவர்களிடம்
mā nazzala
مَا نَزَّلَ
what Allah has revealed
எதை/இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
Allah has revealed
அல்லாஹ்
sanuṭīʿukum
سَنُطِيعُكُمْ
"We will obey you
உங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிவோம்
fī baʿḍi l-amri
فِى بَعْضِ ٱلْأَمْرِۖ
in part (of) the matter"
சில விஷங்களில்
wal-lahu yaʿlamu
وَٱللَّهُ يَعْلَمُ
But Allah knows
அல்லாஹ் நன்கறிவான்
is'rārahum
إِسْرَارَهُمْ
their secrets
இவர்கள் தங்களுக்குள் பேசுவதை

Transliteration:

Zaalika bi annahum qaaloo lillazeena karihoo maa nazzalal laahu sanutee'ukum fee ba'dil amri wallaahu ya'lamu israarahum (QS. Muḥammad:26)

English Sahih International:

That is because they said to those who disliked what Allah sent down, "We will obey you in part of the matter." And Allah knows what they conceal. (QS. Muhammad, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

காரணமாவது: நிச்சயமாக இவர்கள் அல்லாஹ் இறக்கிய (இந்த வேதத்)தை வெறுப்பவர்(களாகிய யூதர்)களை நோக்கி "நாங்கள் சில விஷயங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம்" என்று (இரகசியமாகக்) கூறுகின்றனர். இவர்களுடைய இரகசியங்களை அல்லாஹ் நன்கறிவான். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௨௬)

Jan Trust Foundation

இது ஏனெனில் அவர்கள் எதை அல்லாஹ் இறக்கிவைக்கிறானோ, அதை வெறுப்பவர்களிடம், “நாங்கள் சில காரியங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம்” என்று கூறியதனாலேயாம். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய இரகசியங்களை அறிகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது ஏனெனில், நிச்சயமாக இவர்கள் அல்லாஹ் இறக்கியதை வெறுத்தவர்களிடம் (நயவஞ்சகர்களிடம்), “சில விஷங்களில் உங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிவோம்” என்று கூறினார்கள். இவர்கள் தங்களுக்குள் பேசுவதை அல்லாஹ் நன்கறிவான்.