Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௨௫

Qur'an Surah Muhammad Verse 25

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ ارْتَدُّوْا عَلٰٓى اَدْبَارِهِمْ مِّنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدَى الشَّيْطٰنُ سَوَّلَ لَهُمْۗ وَاَمْلٰى لَهُمْ (محمد : ٤٧)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna ir'taddū
ٱلَّذِينَ ٱرْتَدُّوا۟
those who return
திரும்பிச்
ʿalā adbārihim
عَلَىٰٓ أَدْبَٰرِهِم
on their backs
தங்களது பின் புறங்களின் மீதே
min baʿdi mā tabayyana
مِّنۢ بَعْدِ مَا تَبَيَّنَ
after after what (has) become clear
தெளிவானதற்குப் பின்னர்
lahumu l-hudā
لَهُمُ ٱلْهُدَىۙ
to them the guidance
சென்றவர்கள் தங்களுக்கு/நேர்வழி
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
Shaitaan
ஷைத்தான்
sawwala
سَوَّلَ
enticed
அலங்கரித்துவிட்டான்
lahum
لَهُمْ
[for] them
அவர்களுக்கு
wa-amlā
وَأَمْلَىٰ
and prolonged hope
(அல்லாஹ்) விட்டு வைத்துள்ளான்
lahum
لَهُمْ
for them
அவர்களை

Transliteration:

Innal lazeenar taddoo 'alaaa adbaarihim mim ba'di maa tabaiyana lahumul hudash Shaitaanu sawwala lahum wa amlaa lahum (QS. Muḥammad:25)

English Sahih International:

Indeed, those who reverted back [to disbelief] after guidance had become clear to them – Satan enticed them and prolonged hope for them. (QS. Muhammad, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக எவர்களுக்கு நேரான வழி இன்னதென்று தெளிவானதன் பின்னரும், அவர்கள் (அதன்மீது செல்லாது) தங்கள் பின்புறமே திரும்பிச் சென்றுவிட்டார்களோ, அவர்களை ஷைத்தான் மயக்கிவிட்டான். அன்றி, அவர்களுடைய தப்பெண்ணங்களையும் விரிவாக்கி, அவர்களுக்கு அவற்றை அழகாக்கியும் விட்டான். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௨௫)

Jan Trust Foundation

நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின், தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(முந்திய வேதம் கொடுக்கப்பட்டவர்களில்) நிச்சயமாக தங்களுக்கு நேர்வழி தெளிவானதற்குப் பின்னர் தங்களது பின் புறங்களின் மீதே திரும்பிச் சென்றவர்கள் - ஷைத்தான் அவர்களுக்கு (கெட்ட செயலை செய்யத் தூண்டி அதை) அலங்கரித்தான். (அல்லாஹ்) அவர்களை (சிறிது காலம்) விட்டு வைத்துள்ளான்.