Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௨௨

Qur'an Surah Muhammad Verse 22

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَهَلْ عَسَيْتُمْ اِنْ تَوَلَّيْتُمْ اَنْ تُفْسِدُوْا فِى الْاَرْضِ وَتُقَطِّعُوْٓا اَرْحَامَكُمْ (محمد : ٤٧)

fahal ʿasaytum
فَهَلْ عَسَيْتُمْ
Then would you perhaps
நீங்கள் குழப்பம் செய்வீர்கள்தானே!
in tawallaytum
إِن تَوَلَّيْتُمْ
if you are given authority
நீங்கள்விலகிவிட்டால்
an tuf'sidū
أَن تُفْسِدُوا۟
that you cause corruption
குழப்பம் செய்வீர்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
watuqaṭṭiʿū
وَتُقَطِّعُوٓا۟
and cut off
இன்னும் துண்டித்து விடுவீர்கள்
arḥāmakum
أَرْحَامَكُمْ
your ties of kinship
உங்கள் இரத்த உறவுகளை

Transliteration:

Fahal 'asaitum in tawallaitum an tufsidoo fil ardi wa tuqatti'ooo arhaamakum (QS. Muḥammad:22)

English Sahih International:

So would you perhaps, if you turned away, cause corruption on earth and sever your [ties of] relationship? (QS. Muhammad, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராது) விலகிக் கொண்டதன் பின்னர், நீங்கள் பூமியில் சென்று விஷமம் செய்து இரத்த பந்தத்தைத் துண்டித்துவிடப் பார்க்கின்றீர்களா? (ஸூரத்து முஹம்மது, வசனம் ௨௨)

Jan Trust Foundation

(போருக்கு வராது) நீங்கள் பின் வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடுவதிலிருந்தும்) துண்டித்து விடவும் முனைவீர்களோ?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லாஹ்வின் வேதத்தை விட்டும் அதன் சட்டங்களை விட்டும்) நீங்கள் விலகிவிட்டால் பூமியில் குழப்பம் செய்வீர்கள்தானே! உங்கள் இரத்த உறவுகளை துண்டித்து விடுவீர்கள்தானே! (அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு விலகக்கூடியவர் பூமியில் கலகம் செய்து உறவுகளை துண்டிப்பவராக ஆகிவிடுவார்.)