Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௨௧

Qur'an Surah Muhammad Verse 21

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

طَاعَةٌ وَّقَوْلٌ مَّعْرُوْفٌۗ فَاِذَا عَزَمَ الْاَمْرُۗ فَلَوْ صَدَقُوا اللّٰهَ لَكَانَ خَيْرًا لَّهُمْۚ (محمد : ٤٧)

ṭāʿatun
طَاعَةٌ
(Is) obedience
கீழ்ப்படிவது(ம்)
waqawlun
وَقَوْلٌ
and a word
பேசுவதும்(தான்)
maʿrūfun
مَّعْرُوفٌۚ
kind
நேர்மையாக
fa-idhā ʿazama
فَإِذَا عَزَمَ
And when (is) determined
உறுதியாகிவிட்டால்
l-amru
ٱلْأَمْرُ
the matter
கட்டளை
falaw ṣadaqū
فَلَوْ صَدَقُوا۟
then if they had been true
அவர்கள் உண்மையாக நடந்திருந்தால்
l-laha
ٱللَّهَ
(to) Allah
அல்லாஹ்வுடன்
lakāna
لَكَانَ
surely it would have been
இருக்கும்
khayran
خَيْرًا
better
சிறந்ததாக
lahum
لَّهُمْ
for them
அவர்களுக்கு

Transliteration:

Taa'atunw wa qawlum ma'roof; fa izaa 'azamal amru falaw sadaqul laaha lakaana khairal lahum (QS. Muḥammad:21)

English Sahih International:

Obedience and good words. And when the matter [of fighting] was determined, if they had been true to Allah, it would have been better for them. (QS. Muhammad, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

(நபியே! உங்களுக்கு) வழிப்பட்டு நடப்பதும், (உங்களிடம் எதைக் கூறியபோதிலும்) உண்மையைச் சொல்வதும்தான் (நன்று). ஆகவே, (போரைப் பற்றி) ஒரு காரியம் முடிவாகிவிட்ட பின்னர், அல்லாஹ்வுக்கு (அவர்கள்) உண்மையாக நடந்துகொண்டால், அது அவர்களுக்குத்தான் நன்மையாக இருக்கும். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௨௧)

Jan Trust Foundation

(ஆகவே, இறைதூதருக்கு) வழிபட்டு நடப்பதும், நன்மையான சொல்லுமே (மேலானதாகும்) எனவே, ஒரு காரியம் உறுதியாகி விட்டால், அல்லாஹ்வுக்கு அவர்கள் உண்மையாக நடந்து கொண்டால் அதுவே அவர்களுக்கு நன்மையாக இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(போர் செய்வது அவசியமாகி விட்டால் இறைத் தூதருக்கு) கீழ்ப்படிவதும், (உங்களுடன் போருக்கு புறப்படுவோம் என்று) நேர்மையாக பேசுவதும்தான் (உங்கள் செயலாக இருந்தது). ஆனால், (போருக்கு புறப்பட வேண்டும் என்று) கட்டளை உறுதியாகிவிட்டால்... (அதை வெறுத்து போரை சிரமமாக பார்க்கிறீர்கள். அப்படி செய்யாமல்,) அவர்கள் அல்லாஹ்வுடன் உண்மையாக நடந்திருந்தால் (அதுதான்) அவர்களுக்கு சிறந்ததாக இருக்கும்.