குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௨௦
Qur'an Surah Muhammad Verse 20
ஸூரத்து முஹம்மது [௪௭]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَقُوْلُ الَّذِيْنَ اٰمَنُوْا لَوْلَا نُزِّلَتْ سُوْرَةٌ ۚفَاِذَآ اُنْزِلَتْ سُوْرَةٌ مُّحْكَمَةٌ وَّذُكِرَ فِيْهَا الْقِتَالُ ۙرَاَيْتَ الَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ يَّنْظُرُوْنَ اِلَيْكَ نَظَرَ الْمَغْشِيِّ عَلَيْهِ مِنَ الْمَوْتِۗ فَاَوْلٰى لَهُمْۚ (محمد : ٤٧)
- wayaqūlu
- وَيَقُولُ
- And say
- கூறுகின்றார்(கள்)
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- those who believe
- நம்பிக்கையாளர்கள்
- lawlā nuzzilat
- لَوْلَا نُزِّلَتْ
- "Why not has been revealed
- இறக்கப்பட வேண்டாமா
- sūratun
- سُورَةٌۖ
- a Surah?"
- ஓர் அத்தியாயம்
- fa-idhā unzilat
- فَإِذَآ أُنزِلَتْ
- But when is revealed
- இறக்கப்பட்டால்
- sūratun
- سُورَةٌ
- a Surah
- ஓர் அத்தியாயம்
- muḥ'kamatun
- مُّحْكَمَةٌ
- precise
- உறுதி செய்யப்பட்டது
- wadhukira
- وَذُكِرَ
- and is mentioned
- இன்னும் கூறப்பட்டது
- fīhā l-qitālu
- فِيهَا ٱلْقِتَالُۙ
- in it the fighting
- அதில்/போர்
- ra-ayta
- رَأَيْتَ
- you see
- பார்ப்பீர்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- fī qulūbihim
- فِى قُلُوبِهِم
- in their hearts
- தங்கள் உள்ளங்களில்
- maraḍun
- مَّرَضٌ
- (is) a disease
- நோய்
- yanẓurūna
- يَنظُرُونَ
- looking
- பார்ப்பார்கள்
- ilayka
- إِلَيْكَ
- at you
- உம் பக்கம்
- naẓara
- نَظَرَ
- a look
- பார்ப்பது போல்
- l-maghshiyi ʿalayhi
- ٱلْمَغْشِىِّ عَلَيْهِ
- (of) one fainting (of) one fainting
- மயக்கமுற்றவர்கள்
- mina l-mawti
- مِنَ ٱلْمَوْتِۖ
- from the death
- மரண பயத்தால்
- fa-awlā
- فَأَوْلَىٰ
- But more appropriate
- ஆகவே
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
Transliteration:
Wa yaqoolul lazeena aamanoo law laa nuzzilat Sooratun fa izaaa unzilat Sooratum Muhkamatunw wa zukira feehal qitaalu ra aytal lazeena fee quloobihim maraduny yanzuroona ilaika nazaral maghshiyyi 'alaihi minal mawti fa'awlaa lahum(QS. Muḥammad:20)
English Sahih International:
Those who believe say, "Why has a Surah not been sent down?" But when a precise Surah is revealed and battle is mentioned therein, you see those in whose hearts is disease [i.e., hypocrisy] looking at you with a look of one overcome by death. And more appropriate for them [would have been] (QS. Muhammad, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கை கொண்டவர்களிலும் பலர், (போரைப் பற்றி) யாதொரு (தனி அத்தியாயம் இறக்கப்பட வேண்டாமா? என்று கூறுகின்றனர். அவ்வாறே (தெளிவான) ஒரு திட்டமான அத்தியாயம் இறக்கப்பட்டு போர் செய்யுமாறு அதில் கூறப்பட்டிருந்தால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அவர்கள், மரண அவஸ்தையில் சிக்கி மயங்கிக் கிடப்பவர் பார்ப்பதைப் போல் (நபியே!) உங்களை அவர்கள் நோக்குவார்கள். ஆகவே, அவர்களுக்குக் கேடுதான். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௨௦)
Jan Trust Foundation
இன்னும், ஈமான் கொண்டவர்கள் கூறுகிறார்கள்| “(புனிதப் போர் பற்றி) ஓர் அத்தியாயம் இறக்கி வைப்படவேண்டாமா?” என்று. ஆனால் உறுதிவாய்ந்த ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு அதில் போர் புரியுமாறு பிரஸ்தாபிக்கப் பட்டால், எவர்களுடைய இருதயங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கிறதோ அவர்கள் மரண (பய)த்தினால் தனக்கு மயக்கம் ஏற்பட்டவன் நோக்குவது போல் உம்மை நோக்குவதை நீர் காண்பீர்! ஆகவே, இத்தகையவர்களுக்குக் கேடு தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இந்த எதிரிகளிடம் போர் புரிய வேண்டும் என்ற கட்டளை அடங்கிய) ஓர் அத்தியாயம் இறக்கப்பட வேண்டாமா என்று நம்பிக்கையாளர்கள் கூறுகின்றார்கள். (சட்டங்கள்) உறுதி செய்யப்பட்ட ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு அதில் (எதிரிகளிடம்) போர் (செய்யுங்கள் என்ற கட்டளை) கூறப்பட்டால் தங்கள் உள்ளங்களில் நோய் உள்ளவர்கள் மரண பயத்தால் மயக்கமுற்றவர்கள் பார்ப்பது போல் அவர்கள் உம் பக்கம் பார்ப்பார்கள். அவர்களுக்கு கேடுதான்.