Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௨

Qur'an Surah Muhammad Verse 2

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوْا بِمَا نُزِّلَ عَلٰى مُحَمَّدٍ وَّهُوَ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۚ كَفَّرَ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَاَصْلَحَ بَالَهُمْ (محمد : ٤٧)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believe
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū l-ṣāliḥāti
وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ
and do righteous deeds
இன்னும் நன்மைகளை செய்தனர்
waāmanū
وَءَامَنُوا۟
and believe
இன்னும் நம்பிக்கை கொண்டார்கள்
bimā nuzzila
بِمَا نُزِّلَ
in what is revealed
இறக்கப்பட்டதை(யும்)
ʿalā muḥammadin
عَلَىٰ مُحَمَّدٍ
to Muhammad
முஹம்மது நபியின் மீது
wahuwa
وَهُوَ
and it
அதுதான்
l-ḥaqu
ٱلْحَقُّ
(is) the truth
உண்மையாகும்
min rabbihim
مِن رَّبِّهِمْۙ
from their Lord
அவர்களின் இறைவனிடம் இருந்து வந்த
kaffara
كَفَّرَ
He will remove
போக்கிவிடுவான்
ʿanhum
عَنْهُمْ
from them
அவர்களை விட்டு
sayyiātihim
سَيِّـَٔاتِهِمْ
their misdeeds
அவர்களின் பாவங்களை
wa-aṣlaḥa
وَأَصْلَحَ
and improve
இன்னும் சீர் செய்துவிடுவான்
bālahum
بَالَهُمْ
their condition
அவர்களின் காரியத்தை

Transliteration:

Wallazeena aamanoo wa 'amilus saalihaati wa aamanoo bimaa nuzzila 'alaa Muhammadinw-wa huwal haqqu mir Rabbihim kaffara 'anhum saiyiaatihim wa aslaha baalahum (QS. Muḥammad:2)

English Sahih International:

And those who believe and do righteous deeds and believe in what has been sent down upon Muhammad – and it is the truth from their Lord – He will remove from them their misdeeds and amend their condition. (QS. Muhammad, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

எவர்கள், (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து, முஹம்மது (நபி (ஸல்)) பேரில் இறைவனால் இறக்கப்பட்ட உண்மையான இவ்வேதத்தையும் நம்பிக்கை கொண்டிருந்தார்களோ, அவர்கள் (தவறாகச் செய்த) பாவத்திற்கு இதனைப் பரிகாரமாக்கி, அவர்களுடைய காரியங் களையும் அவன் சீர்படுத்தி விட்டான். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௨)

Jan Trust Foundation

ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்து, முஹம்மது நபியின் மீது இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொண்டார்களோ - அதுதான் (அவர் மீது இறக்கப்பட்ட அந்த வேதம்தான்) அவர்களின் இறைவனிடம் இருந்து (இறுதியாக) வந்த உண்மையாகும்- அவர்களின் பாவங்களை அவர்களை விட்டு அவன் போக்கி விடுவான்; அவர்களின் காரியத்தை அவன் சீர் செய்து விடுவான்.