குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௧௬
Qur'an Surah Muhammad Verse 16
ஸூரத்து முஹம்மது [௪௭]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُ اِلَيْكَۚ حَتّٰىٓ اِذَا خَرَجُوْا مِنْ عِنْدِكَ قَالُوْا لِلَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ مَاذَا قَالَ اٰنِفًا ۗ اُولٰۤىِٕكَ الَّذِيْنَ طَبَعَ اللّٰهُ عَلٰى قُلُوْبِهِمْ وَاتَّبَعُوْٓا اَهْوَاۤءَهُمْ (محمد : ٤٧)
- wamin'hum
- وَمِنْهُم
- And among them
- அவர்களில் உள்ளனர்
- man yastamiʿu
- مَّن يَسْتَمِعُ
- (are some) who listen
- செவி சாய்க்கின்றவர்களும்
- ilayka
- إِلَيْكَ
- to you
- உம் பக்கம்
- ḥattā
- حَتَّىٰٓ
- until
- இறுதியில்
- idhā kharajū
- إِذَا خَرَجُوا۟
- when they depart
- அவர்கள் வெளியே புறப்பட்டால்
- min ʿindika
- مِنْ عِندِكَ
- from you
- உம்மிடமிருந்து
- qālū
- قَالُوا۟
- they say
- கூறுகின்றனர்
- lilladhīna ūtū
- لِلَّذِينَ أُوتُوا۟
- to those who were given
- கொடுக்கப்பட்டவர்களிடம்
- l-ʿil'ma
- ٱلْعِلْمَ
- the knowledge
- கல்வி
- mādhā qāla
- مَاذَا قَالَ
- "What (has) he said
- என்ன/இவர் கூறினார்
- ānifan
- ءَانِفًاۚ
- just now?"
- சற்று நேரத்திற்கு முன்பு
- ulāika alladhīna
- أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ
- Those (are) the ones
- இவர்கள்தான்/எவர்கள்
- ṭabaʿa
- طَبَعَ
- Allah has set a seal
- முத்திரையிட்டு விட்டான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah has set a seal
- அல்லாஹ்
- ʿalā qulūbihim
- عَلَىٰ قُلُوبِهِمْ
- upon their hearts
- இவர்களின் உள்ளங்களில்
- wa-ittabaʿū
- وَٱتَّبَعُوٓا۟
- and they follow
- இன்னும் இவர்கள் பின்பற்றினார்கள்
- ahwāahum
- أَهْوَآءَهُمْ
- their desires
- தங்கள் மன இச்சைகளை
Transliteration:
Wa minhum mai yastami' ilaika hattaaa izaa kharajoo min 'indika qaaloo lillazeena ootul 'ilma maazaa qaala aanifaa; ulaaa'ikal lazeena taba'al laahu 'alaa quloobihim wattaba'ooo ahwaaa'ahum(QS. Muḥammad:16)
English Sahih International:
And among them, [O Muhammad], are those who listen to you, until when they depart from you, they say to those who were given knowledge, "What has he said just now?" Those are the ones of whom Allah has sealed over their hearts and who have followed their [own] desires. (QS. Muhammad, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
(நபியே! நீங்கள் இவ்வேதத்தை ஓதிய சமயத்தில்) உங்களுக்குச் செவி சாய்ப்பவர்களைப் போல் இருந்து உங்களை விட்டு வெளிப்பட்டதும், (நம்பிக்கையாளர்களாகிய, இவ்வேத) ஞானம் கொடுக்கப்பட்டவர்களை நோக்கி(ப் பரிகாசமாக "உங்களுடைய நபி) சற்று முன் என்ன கூறினார்?" எனக் கேட்பவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். இத்தகைய வர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். (ஆதலால்,) இவர்கள் தங்கள் சரீர இச்சையைப் பின்பற்றி நடக்கின்றனர். (ஸூரத்து முஹம்மது, வசனம் ௧௬)
Jan Trust Foundation
இன்னும், அவர்களில் உம்மைச் செவிமடுப்பவர்களும் இருக்கின்றனர்; ஆனால் அவர்கள் உம்மை விட்டு வெளியேறியதும், எவர்களுக்கு (வேத) ஞானம் அருளப் பெற்றதோ அவர்களைப் பார்த்து| “அவர் சற்று முன் என்ன கூறினார்?” என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்; இத்தகையோரின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். மேலும் இவர்கள், தங்கள் மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களில் (-அந்த நயவஞ்சகர்களில்) உம் பக்கம் (அலட்சியமாக) செவி சாய்க்கின்றவர்களும் உள்ளனர். இறுதியில் அவர்கள் உம்மிடமிருந்து வெளியே புறப்பட்டால் (தாங்களும் கவனமாகக் கேட்டது போன்று காண்பிப்பதற்காகவும் பரிகாசமாகவும்) கல்வி கொடுக்கப்பட்டவர்களிடம் கூறுகின்றனர்: “இவர் (-இந்த தூதர்) சற்று நேரத்திற்கு முன்பு என்ன கூறினார் (தெரியுமா? எவ்வளவு அழகான கருத்தை கூறினார் தெரியுமா?)” இவர்கள்தான், அல்லாஹ் இவர்களின் உள்ளங்களில் முத்திரையிட்டு விட்டான். இவர்கள் தங்கள் மன இச்சைகளை பின்பற்றினார்கள்.