Skip to content

ஸூரா ஸூரத்து முஹம்மது - Page: 3

Muhammad

(Muḥammad)

௨௧

طَاعَةٌ وَّقَوْلٌ مَّعْرُوْفٌۗ فَاِذَا عَزَمَ الْاَمْرُۗ فَلَوْ صَدَقُوا اللّٰهَ لَكَانَ خَيْرًا لَّهُمْۚ ٢١

ṭāʿatun
طَاعَةٌ
கீழ்ப்படிவது(ம்)
waqawlun
وَقَوْلٌ
பேசுவதும்(தான்)
maʿrūfun
مَّعْرُوفٌۚ
நேர்மையாக
fa-idhā ʿazama
فَإِذَا عَزَمَ
உறுதியாகிவிட்டால்
l-amru
ٱلْأَمْرُ
கட்டளை
falaw ṣadaqū
فَلَوْ صَدَقُوا۟
அவர்கள் உண்மையாக நடந்திருந்தால்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வுடன்
lakāna
لَكَانَ
இருக்கும்
khayran
خَيْرًا
சிறந்ததாக
lahum
لَّهُمْ
அவர்களுக்கு
(நபியே! உங்களுக்கு) வழிப்பட்டு நடப்பதும், (உங்களிடம் எதைக் கூறியபோதிலும்) உண்மையைச் சொல்வதும்தான் (நன்று). ஆகவே, (போரைப் பற்றி) ஒரு காரியம் முடிவாகிவிட்ட பின்னர், அல்லாஹ்வுக்கு (அவர்கள்) உண்மையாக நடந்துகொண்டால், அது அவர்களுக்குத்தான் நன்மையாக இருக்கும். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௨௧)
Tafseer
௨௨

فَهَلْ عَسَيْتُمْ اِنْ تَوَلَّيْتُمْ اَنْ تُفْسِدُوْا فِى الْاَرْضِ وَتُقَطِّعُوْٓا اَرْحَامَكُمْ ٢٢

fahal ʿasaytum
فَهَلْ عَسَيْتُمْ
நீங்கள் குழப்பம் செய்வீர்கள்தானே!
in tawallaytum
إِن تَوَلَّيْتُمْ
நீங்கள்விலகிவிட்டால்
an tuf'sidū
أَن تُفْسِدُوا۟
குழப்பம் செய்வீர்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
watuqaṭṭiʿū
وَتُقَطِّعُوٓا۟
இன்னும் துண்டித்து விடுவீர்கள்
arḥāmakum
أَرْحَامَكُمْ
உங்கள் இரத்த உறவுகளை
(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராது) விலகிக் கொண்டதன் பின்னர், நீங்கள் பூமியில் சென்று விஷமம் செய்து இரத்த பந்தத்தைத் துண்டித்துவிடப் பார்க்கின்றீர்களா? ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௨௨)
Tafseer
௨௩

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ لَعَنَهُمُ اللّٰهُ فَاَصَمَّهُمْ وَاَعْمٰٓى اَبْصَارَهُمْ ٢٣

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
laʿanahumu
لَعَنَهُمُ
அவர்களை சபித்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fa-aṣammahum
فَأَصَمَّهُمْ
செவிடாக்கி விட்டான்
wa-aʿmā
وَأَعْمَىٰٓ
இன்னும் குருடாக்கி விட்டான்
abṣārahum
أَبْصَٰرَهُمْ
அவர்களின் பார்வைகளை
இத்தகையவர்களை அல்லாஹ் சபித்து, அவர்களைச் செவிடர்களாக்கி, அவர்களுடைய பார்வைகளையும் போக்கி குருடர்களாக்கி விட்டான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௨௩)
Tafseer
௨௪

اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَقْفَالُهَا ٢٤

afalā yatadabbarūna
أَفَلَا يَتَدَبَّرُونَ
அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா?
l-qur'āna
ٱلْقُرْءَانَ
குர்ஆனை
am
أَمْ
?
ʿalā qulūbin
عَلَىٰ قُلُوبٍ
உள்ளங்கள் மீது
aqfāluhā
أَقْفَالُهَآ
அவற்றின் பூட்டுகளா போடப்பட்டுள்ளன?
அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது, இவர்களுடைய உள்ளங்கள் மீது தாளிடப் பட்டு விட்டதா? ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௨௪)
Tafseer
௨௫

اِنَّ الَّذِيْنَ ارْتَدُّوْا عَلٰٓى اَدْبَارِهِمْ مِّنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدَى الشَّيْطٰنُ سَوَّلَ لَهُمْۗ وَاَمْلٰى لَهُمْ ٢٥

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna ir'taddū
ٱلَّذِينَ ٱرْتَدُّوا۟
திரும்பிச்
ʿalā adbārihim
عَلَىٰٓ أَدْبَٰرِهِم
தங்களது பின் புறங்களின் மீதே
min baʿdi mā tabayyana
مِّنۢ بَعْدِ مَا تَبَيَّنَ
தெளிவானதற்குப் பின்னர்
lahumu l-hudā
لَهُمُ ٱلْهُدَىۙ
சென்றவர்கள் தங்களுக்கு/நேர்வழி
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
sawwala
سَوَّلَ
அலங்கரித்துவிட்டான்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
wa-amlā
وَأَمْلَىٰ
(அல்லாஹ்) விட்டு வைத்துள்ளான்
lahum
لَهُمْ
அவர்களை
நிச்சயமாக எவர்களுக்கு நேரான வழி இன்னதென்று தெளிவானதன் பின்னரும், அவர்கள் (அதன்மீது செல்லாது) தங்கள் பின்புறமே திரும்பிச் சென்றுவிட்டார்களோ, அவர்களை ஷைத்தான் மயக்கிவிட்டான். அன்றி, அவர்களுடைய தப்பெண்ணங்களையும் விரிவாக்கி, அவர்களுக்கு அவற்றை அழகாக்கியும் விட்டான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௨௫)
Tafseer
௨௬

ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لِلَّذِيْنَ كَرِهُوْا مَا نَزَّلَ اللّٰهُ سَنُطِيْعُكُمْ فِيْ بَعْضِ الْاَمْرِۚ وَاللّٰهُ يَعْلَمُ اِسْرَارَهُمْ ٢٦

dhālika
ذَٰلِكَ
இது
bi-annahum
بِأَنَّهُمْ
ஏனெனில், நிச்சயமாக
qālū
قَالُوا۟
கூறினார்கள்
lilladhīna karihū
لِلَّذِينَ كَرِهُوا۟
வெறுத்தவர்களிடம்
mā nazzala
مَا نَزَّلَ
எதை/இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
sanuṭīʿukum
سَنُطِيعُكُمْ
உங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிவோம்
fī baʿḍi l-amri
فِى بَعْضِ ٱلْأَمْرِۖ
சில விஷங்களில்
wal-lahu yaʿlamu
وَٱللَّهُ يَعْلَمُ
அல்லாஹ் நன்கறிவான்
is'rārahum
إِسْرَارَهُمْ
இவர்கள் தங்களுக்குள் பேசுவதை
காரணமாவது: நிச்சயமாக இவர்கள் அல்லாஹ் இறக்கிய (இந்த வேதத்)தை வெறுப்பவர்(களாகிய யூதர்)களை நோக்கி "நாங்கள் சில விஷயங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம்" என்று (இரகசியமாகக்) கூறுகின்றனர். இவர்களுடைய இரகசியங்களை அல்லாஹ் நன்கறிவான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௨௬)
Tafseer
௨௭

فَكَيْفَ اِذَا تَوَفَّتْهُمُ الْمَلٰۤىِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ ٢٧

fakayfa
فَكَيْفَ
எப்படி
idhā tawaffathumu
إِذَا تَوَفَّتْهُمُ
அவர்களை உயிர் வாங்கும்போது
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
yaḍribūna
يَضْرِبُونَ
அடிப்பார்கள்
wujūhahum
وُجُوهَهُمْ
அவர்களின் முகங்களை(யும்)
wa-adbārahum
وَأَدْبَٰرَهُمْ
அவர்களின் பின் புறங்களையும்
இவர்கள் (சாகும்பொழுது) உயிர்களைக் கைப்பற்றும் மலக்குகள் இவர்களுடைய முகத்திலும், முதுகிலும் பலமாக அடி(ப்பார்கள். அவர்கள் அடி)க்கும் பொழுது இவர்களுடைய நிலைமை எவ்வாறிருக்கும்! ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௨௭)
Tafseer
௨௮

ذٰلِكَ بِاَنَّهُمُ اتَّبَعُوْا مَآ اَسْخَطَ اللّٰهَ وَكَرِهُوْا رِضْوَانَهٗ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ ࣖ ٢٨

dhālika
ذَٰلِكَ
இது
bi-annahumu
بِأَنَّهُمُ
ஏனெனில், நிச்சயமாக அவர்கள்
ittabaʿū
ٱتَّبَعُوا۟
பின்பற்றினார்கள்
mā askhaṭa
مَآ أَسْخَطَ
கோபமூட்டியதை
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
wakarihū
وَكَرِهُوا۟
இன்னும் வெறுத்தார்கள்
riḍ'wānahu
رِضْوَٰنَهُۥ
அவனது பொருத்தத்தை
fa-aḥbaṭa
فَأَحْبَطَ
ஆகவே, வீணாக்கி விட்டான்
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை
காரணமாவது: அல்லாஹ்வுக்குக் கோபமூட்டக் கூடியவை களையே இவர்கள் பின்பற்றி, அவனுக்குத் திருப்தித் தரக்கூடிய வைகளை வெறுத்து வந்தனர். ஆதலால், இவர்களுடைய நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் அழித்துவிட்டான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௨௮)
Tafseer
௨௯

اَمْ حَسِبَ الَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَنْ لَّنْ يُّخْرِجَ اللّٰهُ اَضْغَانَهُمْ ٢٩

am ḥasiba
أَمْ حَسِبَ
எண்ணிக் கொண்டார்களா
alladhīna fī qulūbihim
ٱلَّذِينَ فِى قُلُوبِهِم
தங்களதுஉள்ளங்களில்
maraḍun
مَّرَضٌ
நோய்
an lan yukh'rija
أَن لَّن يُخْرِجَ
வெளிப்படுத்தி காண்பிக்க மாட்டான் என்று
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
aḍghānahum
أَضْغَٰنَهُمْ
அவர்களின் குரோதங்களை
எவர்களுடைய உள்ளங்களில் (வஞ்சகமென்னும்) நோய் இருக்கின்றதோ அவர்கள், தங்களுடைய சூழ்ச்சியை அல்லாஹ் வெளிப்படுத்திவிட மாட்டான் என்று எண்ணிக் கொண்டிருக் கின்றனரா? ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௨௯)
Tafseer
௩௦

وَلَوْ نَشَاۤءُ لَاَرَيْنٰكَهُمْ فَلَعَرَفْتَهُمْ بِسِيْمٰهُمْ ۗوَلَتَعْرِفَنَّهُمْ فِيْ لَحْنِ الْقَوْلِۗ وَاللّٰهُ يَعْلَمُ اَعْمَالَكُمْ ٣٠

walaw nashāu
وَلَوْ نَشَآءُ
நாம் நாடினால்
la-araynākahum
لَأَرَيْنَٰكَهُمْ
அவர்களை உமக்கு காண்பித்து விடுவோம்
falaʿaraftahum
فَلَعَرَفْتَهُم
அவர்களை நீர் அறிந்து கொள்வீர்
bisīmāhum
بِسِيمَٰهُمْۚ
அவர்களின் வெளிப்படையான அடையாளங்களினால்
walataʿrifannahum
وَلَتَعْرِفَنَّهُمْ
இன்னும் அவர்களை நிச்சயமாக நீர் அறிவீர்
fī laḥni l-qawli
فِى لَحْنِ ٱلْقَوْلِۚ
அவர்களின் பேச்சின் தொனியிலும்
wal-lahu yaʿlamu
وَٱللَّهُ يَعْلَمُ
அல்லாஹ் நன்கறிவான்
aʿmālakum
أَعْمَٰلَكُمْ
உங்கள் செயல்களை
(நபியே!) நாம் விரும்பினால், அவர்களை உங்களுக்கு காட்டிக் கொடுத்து விடுவோம். (அப்போது) அவர்களுடைய முகக் குறியைக்கொண்டே நீங்களும் அறிந்து கொள்வீர்கள். அவர்களுடைய தந்திரமான பேச்சின் போக்கைக் கொண்டும் நீங்கள் அவர்களை நிச்சயமாக அறிந்து கொள்வீர்கள். (நயவஞ்சகர்களே!) அல்லாஹ் உங்களுடைய செயல்களையும் நன்கறிவான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௩௦)
Tafseer