Skip to content

ஸூரா ஸூரத்து முஹம்மது - Page: 2

Muhammad

(Muḥammad)

௧௧

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ مَوْلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَاَنَّ الْكٰفِرِيْنَ لَا مَوْلٰى لَهُمْ ࣖ ١١

dhālika bi-anna
ذَٰلِكَ بِأَنَّ
ஏனெனில், நிச்சயமாக அது
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்தான்
mawlā
مَوْلَى
எஜமானன்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களின்
wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்கள்
lā mawlā
لَا مَوْلَىٰ
எஜமானன் இல்லை
lahum
لَهُمْ
அவர்களுக்கு
காரணமாவது: நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்களை காப்பவனாக அல்லாஹ்வே இருக்கின்றான். நிராகரிப்பவர்களுக்கோ, நிச்சயமாக யாதொரு பாதுகாவலனுமில்லை. ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௧௧)
Tafseer
௧௨

اِنَّ اللّٰهَ يُدْخِلُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۗوَالَّذِيْنَ كَفَرُوْا يَتَمَتَّعُوْنَ وَيَأْكُلُوْنَ كَمَا تَأْكُلُ الْاَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَّهُمْ ١٢

inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yud'khilu
يُدْخِلُ
நுழைப்பான்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُۖ
ஆறுகள்
wa-alladhīna kafarū
وَٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
yatamattaʿūna
يَتَمَتَّعُونَ
இன்புறுகிறார்கள்
wayakulūna
وَيَأْكُلُونَ
இன்னும் சாப்பிடுகிறார்கள்
kamā
كَمَا
போல்
takulu
تَأْكُلُ
சாப்பிடுவது
l-anʿāmu
ٱلْأَنْعَٰمُ
கால்நடைகள்
wal-nāru
وَٱلنَّارُ
நரகம்தான்
mathwan
مَثْوًى
தங்குமிடமாகும்
lahum
لَّهُمْ
அவர்களுக்கு
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியில் புகுத்துகின்றான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள், மிருகங்கள் தின்பதைப் போல் தின்றுகொண்டும், (மிருகங்களைப் போல்) சுகத்தை அனுபவித்துக் கொண்டும் இருக்கின்றார்கள். (எனினும்,) அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௧௨)
Tafseer
௧௩

وَكَاَيِّنْ مِّنْ قَرْيَةٍ هِيَ اَشَدُّ قُوَّةً مِّنْ قَرْيَتِكَ الَّتِيْٓ اَخْرَجَتْكَۚ اَهْلَكْنٰهُمْ فَلَا نَاصِرَ لَهُمْ ١٣

waka-ayyin
وَكَأَيِّن
எத்தனையோ
min qaryatin
مِّن قَرْيَةٍ
ஊர் (மக்)கள்
hiya
هِىَ
அவை
ashaddu
أَشَدُّ
மிக உறுதியான(து)
quwwatan
قُوَّةً
பலத்தால்
min qaryatika
مِّن قَرْيَتِكَ
உமது ஊரைவிட
allatī akhrajatka
ٱلَّتِىٓ أَخْرَجَتْكَ
எது/உம்மை வெளியேற்றிய(து)
ahlaknāhum
أَهْلَكْنَٰهُمْ
நாம் அவர்களை அழித்தோம்
falā
فَلَا
அறவே இல்லை
nāṣira
نَاصِرَ
உதவியாளர்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
(நபியே!) உங்களுடைய ஊரைவிட்டும் உங்களை வெளிப்படுத்திய இவர்களைவிட எத்தனையோ ஊரார்கள் மிக்க பலசாலிகளாக இருந்தனர். (அவர்கள் செய்த அநியாயத்தின் காரணமாக) அவர்கள் அனைவரையும் நாம் அழித்துவிட்டோம். (அச்சமயம்) அவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமிருக்க வில்லை. (ஆகவே, இவர்கள் எம்மாத்திரம்! இவர்களையும் நாம் அழித்தே தீருவோம்.) ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௧௩)
Tafseer
௧௪

اَفَمَنْ كَانَ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّهٖ كَمَنْ زُيِّنَ لَهٗ سُوْۤءُ عَمَلِهٖ وَاتَّبَعُوْٓا اَهْوَاۤءَهُمْ ١٤

afaman
أَفَمَن
ஆவார்களா?
kāna
كَانَ
இருப்பவர்கள்
ʿalā bayyinatin
عَلَىٰ بَيِّنَةٍ
தெளிவான அத்தாட்சியில்
min rabbihi
مِّن رَّبِّهِۦ
தமது இறைவனின்
kaman
كَمَن
போன்று/எவர்களுக்கு
zuyyina
زُيِّنَ
அலங்கரிக்கப்பட்டது
lahu
لَهُۥ
தமக்கு
sūu
سُوٓءُ
கெட்ட
ʿamalihi
عَمَلِهِۦ
தங்களது செயல்கள்
wa-ittabaʿū
وَٱتَّبَعُوٓا۟
இன்னும் பின்பற்றுகின்றார்கள்
ahwāahum
أَهْوَآءَهُم
தங்கள் மன இச்சைகளை
எவர் தன் இறைவனின் தெளிவான (நேரான) பாதையின் மீது இருக்கின்றாரோ அத்தகையவருக்கு, எவன் தன்னுடைய தீய காரியங்களையே அழகாகக் கண்டு, தன்னுடைய சரீர இச்சை களையே பின்பற்றுகின்றானோ அவன் ஒப்பாவானா? ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௧௪)
Tafseer
௧௫

مَثَلُ الْجَنَّةِ الَّتِيْ وُعِدَ الْمُتَّقُوْنَ ۗفِيْهَآ اَنْهٰرٌ مِّنْ مَّاۤءٍ غَيْرِ اٰسِنٍۚ وَاَنْهٰرٌ مِّنْ لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهٗ ۚوَاَنْهٰرٌ مِّنْ خَمْرٍ لَّذَّةٍ لِّلشّٰرِبِيْنَ ەۚ وَاَنْهٰرٌ مِّنْ عَسَلٍ مُّصَفًّى ۗوَلَهُمْ فِيْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِ وَمَغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ ۗ كَمَنْ هُوَ خَالِدٌ فِى النَّارِ وَسُقُوْا مَاۤءً حَمِيْمًا فَقَطَّعَ اَمْعَاۤءَهُمْ ١٥

mathalu
مَّثَلُ
தன்மையாவது
l-janati allatī
ٱلْجَنَّةِ ٱلَّتِى
சொர்க்கத்தின்/எது
wuʿida
وُعِدَ
வாக்களிக்கப்பட்டது
l-mutaqūna
ٱلْمُتَّقُونَۖ
இறையச்ச முள்ளவர்களுக்கு
fīhā
فِيهَآ
அதில்
anhārun
أَنْهَٰرٌ
ஆறுகளும்
min māin
مِّن مَّآءٍ
தண்ணீரின்
ghayri āsinin
غَيْرِ ءَاسِنٍ
துர் வாடை வீசாத
wa-anhārun
وَأَنْهَٰرٌ
ஆறுகளும்
min labanin
مِّن لَّبَنٍ
பாலின்
lam yataghayyar
لَّمْ يَتَغَيَّرْ
மாறவில்லை
ṭaʿmuhu
طَعْمُهُۥ
அதன் ருசி
wa-anhārun
وَأَنْهَٰرٌ
ஆறுகளும்
min khamrin
مِّنْ خَمْرٍ
மதுவின்
ladhatin
لَّذَّةٍ
ருசியான
lilshāribīna
لِّلشَّٰرِبِينَ
அருந்துபவர்களுக்கு
wa-anhārun
وَأَنْهَٰرٌ
ஆறுகளும்
min ʿasalin
مِّنْ عَسَلٍ
தேனின்
muṣaffan
مُّصَفًّىۖ
தூய்மையான(து)
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
fīhā
فِيهَا
அதில்
min kulli
مِن كُلِّ
எல்லாவற்றிலிருந்து(ம்)
l-thamarāti
ٱلثَّمَرَٰتِ
கனிகள்
wamaghfiratun
وَمَغْفِرَةٌ
மன்னிப்பும்
min rabbihim
مِّن رَّبِّهِمْۖ
அவர்களின் இறைவனிடமிருந்து
kaman huwa
كَمَنْ هُوَ
போன்று/எவர்(கள்)/ அவர்(கள்)
khālidun
خَٰلِدٌ
நிரந்தரமானவர்(கள்)
fī l-nāri
فِى ٱلنَّارِ
நரகத்தில்
wasuqū
وَسُقُوا۟
இன்னும் புகட்டப்படுவார்கள்
māan
مَآءً
நீரை
ḥamīman
حَمِيمًا
கொதிக்கின்றது
faqaṭṭaʿa
فَقَطَّعَ
அது துண்டு துண்டாக ஆக்கிவிடும்
amʿāahum
أَمْعَآءَهُمْ
குடல்களை அவர்களின்
இறை அச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையாவது: அதில் தீங்கற்ற (பரிசுத்தமான) நீரருவிகள் இருக்கின்றன. பரிசுத்தமான ருசி மாறாத பாலாறுகளும் இருக்கின்றன. திராட்சை ரச ஆறுகளும் இருக்கின்றன. அது குடிப்பவர்களுக்குப் பேரின்பமளிக்கக்கூடியது. தெளிவான தேனாறுகளும் இருக்கின்றன. அன்றி, அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவர்க்கங்கள் இருப்பதுடன், இறைவனின் மன்னிப்பும் அவர்களுக்கு உண்டு. (இத்தகைய இன்பங்களை அனுபவிப் பவனுக்கு) நரகத்தில் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு, குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடக்கூடிய நரகவாசி ஒப்பாக முடியுமா? ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௧௫)
Tafseer
௧௬

وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُ اِلَيْكَۚ حَتّٰىٓ اِذَا خَرَجُوْا مِنْ عِنْدِكَ قَالُوْا لِلَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ مَاذَا قَالَ اٰنِفًا ۗ اُولٰۤىِٕكَ الَّذِيْنَ طَبَعَ اللّٰهُ عَلٰى قُلُوْبِهِمْ وَاتَّبَعُوْٓا اَهْوَاۤءَهُمْ ١٦

wamin'hum
وَمِنْهُم
அவர்களில் உள்ளனர்
man yastamiʿu
مَّن يَسْتَمِعُ
செவி சாய்க்கின்றவர்களும்
ilayka
إِلَيْكَ
உம் பக்கம்
ḥattā
حَتَّىٰٓ
இறுதியில்
idhā kharajū
إِذَا خَرَجُوا۟
அவர்கள் வெளியே புறப்பட்டால்
min ʿindika
مِنْ عِندِكَ
உம்மிடமிருந்து
qālū
قَالُوا۟
கூறுகின்றனர்
lilladhīna ūtū
لِلَّذِينَ أُوتُوا۟
கொடுக்கப்பட்டவர்களிடம்
l-ʿil'ma
ٱلْعِلْمَ
கல்வி
mādhā qāla
مَاذَا قَالَ
என்ன/இவர் கூறினார்
ānifan
ءَانِفًاۚ
சற்று நேரத்திற்கு முன்பு
ulāika alladhīna
أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ
இவர்கள்தான்/எவர்கள்
ṭabaʿa
طَبَعَ
முத்திரையிட்டு விட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā qulūbihim
عَلَىٰ قُلُوبِهِمْ
இவர்களின் உள்ளங்களில்
wa-ittabaʿū
وَٱتَّبَعُوٓا۟
இன்னும் இவர்கள் பின்பற்றினார்கள்
ahwāahum
أَهْوَآءَهُمْ
தங்கள் மன இச்சைகளை
(நபியே! நீங்கள் இவ்வேதத்தை ஓதிய சமயத்தில்) உங்களுக்குச் செவி சாய்ப்பவர்களைப் போல் இருந்து உங்களை விட்டு வெளிப்பட்டதும், (நம்பிக்கையாளர்களாகிய, இவ்வேத) ஞானம் கொடுக்கப்பட்டவர்களை நோக்கி(ப் பரிகாசமாக "உங்களுடைய நபி) சற்று முன் என்ன கூறினார்?" எனக் கேட்பவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். இத்தகைய வர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். (ஆதலால்,) இவர்கள் தங்கள் சரீர இச்சையைப் பின்பற்றி நடக்கின்றனர். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௧௬)
Tafseer
௧௭

وَالَّذِيْنَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًى وَّاٰتٰىهُمْ تَقْوٰىهُمْ ١٧

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
ih'tadaw
ٱهْتَدَوْا۟
நேர்வழி பெற்றார்களோ
zādahum
زَادَهُمْ
அவர்களுக்கு அதிகப்படுத்துவான்
hudan
هُدًى
நேர்வழியை
waātāhum
وَءَاتَىٰهُمْ
இன்னும் , அவர்களுக்கு வழங்குவான்
taqwāhum
تَقْوَىٰهُمْ
அவர்களின் தக்வாவை
எவர்கள் நேரான வழியில் செல்கின்றார்களோ (அவர்கள் இந்த வேதத்தைச் செவியுறுவதன் காரணமாக) அவர்களுடைய நேர்மையை (மென்மேலும்) அதிகப்படுத்தி இறை அச்சத்தையும் அவர்களுக்கு (இறைவன்) அளிக்கின்றான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௧௭)
Tafseer
௧௮

فَهَلْ يَنْظُرُوْنَ اِلَّا السَّاعَةَ اَنْ تَأْتِيَهُمْ بَغْتَةً ۚ فَقَدْ جَاۤءَ اَشْرَاطُهَا ۚ فَاَنّٰى لَهُمْ اِذَا جَاۤءَتْهُمْ ذِكْرٰىهُمْ ١٨

fahal yanẓurūna
فَهَلْ يَنظُرُونَ
அவர்கள் எதிர்பார்க்கின்றார்களா?
illā
إِلَّا
தவிர
l-sāʿata
ٱلسَّاعَةَ
மறுமை
an tatiyahum
أَن تَأْتِيَهُم
அவர்களிடம் வருவதை
baghtatan
بَغْتَةًۖ
திடீரென
faqad
فَقَدْ
திட்டமாக
jāa
جَآءَ
வந்துவிட்டன
ashrāṭuhā
أَشْرَاطُهَاۚ
அதன் அடையாளங்கள்
fa-annā
فَأَنَّىٰ
எப்படி பலனளிக்கும்!
lahum
لَهُمْ
அவர்களுக்கு
idhā jāathum
إِذَا جَآءَتْهُمْ
அவர்களிடம் வரும் போது
dhik'rāhum
ذِكْرَىٰهُمْ
அவர்கள் நல்லறிவு பெறுவது
(நபியே! அந்தப் பாவிகள்) தங்களிடம் திடீரென வரக்கூடிய மறுமை(யின் வேதனை)யை தவிர (வேறெதனையும்) எதிர் பார்க்கின்றனரா? அதன் அடையாளங்களில் பல நிச்சயமாக வந்து விட்டன. அது அவர்களிடம் வந்ததன் பின்னர், அதனைப் பற்றி அவர்களுக்கு அறிவுறுத்துவதால் என்ன பயன்? ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௧௮)
Tafseer
௧௯

فَاعْلَمْ اَنَّهٗ لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِۚ وَاللّٰهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوٰىكُمْ ࣖ ١٩

fa-iʿ'lam
فَٱعْلَمْ
நன்கறிந்து கொள்வீராக!
annahu
أَنَّهُۥ
நிச்சயமாக
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā l-lahu
إِلَّا ٱللَّهُ
அல்லாஹ்வைத் தவிர
wa-is'taghfir
وَٱسْتَغْفِرْ
இன்னும் பாவமன்னிப்பு கோருவீராக!
lidhanbika
لِذَنۢبِكَ
உமது தவறுகளுக்காக
walil'mu'minīna
وَلِلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும்
wal-mu'mināti
وَٱلْمُؤْمِنَٰتِۗ
நம்பிக்கை கொண்ட பெண்களுக்காகவும்
wal-lahu yaʿlamu
وَٱللَّهُ يَعْلَمُ
அல்லாஹ் நன்கறிவான்
mutaqallabakum
مُتَقَلَّبَكُمْ
நீங்கள் சுற்றித்திரியும் இடங்களை(யும்)
wamathwākum
وَمَثْوَىٰكُمْ
நீங்கள் தங்குமிடங்களையும்
(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரிய வேறொரு இறைவன் இல்லை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொண்டு, நீங்கள் உங்களுடைய தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்க ளுக்கும் மன்னிப்பு கோருங்கள்! (நம்பிக்கையாளர்களே!) உங்களுடைய நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௧௯)
Tafseer
௨௦

وَيَقُوْلُ الَّذِيْنَ اٰمَنُوْا لَوْلَا نُزِّلَتْ سُوْرَةٌ ۚفَاِذَآ اُنْزِلَتْ سُوْرَةٌ مُّحْكَمَةٌ وَّذُكِرَ فِيْهَا الْقِتَالُ ۙرَاَيْتَ الَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ يَّنْظُرُوْنَ اِلَيْكَ نَظَرَ الْمَغْشِيِّ عَلَيْهِ مِنَ الْمَوْتِۗ فَاَوْلٰى لَهُمْۚ ٢٠

wayaqūlu
وَيَقُولُ
கூறுகின்றார்(கள்)
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்கள்
lawlā nuzzilat
لَوْلَا نُزِّلَتْ
இறக்கப்பட வேண்டாமா
sūratun
سُورَةٌۖ
ஓர் அத்தியாயம்
fa-idhā unzilat
فَإِذَآ أُنزِلَتْ
இறக்கப்பட்டால்
sūratun
سُورَةٌ
ஓர் அத்தியாயம்
muḥ'kamatun
مُّحْكَمَةٌ
உறுதி செய்யப்பட்டது
wadhukira
وَذُكِرَ
இன்னும் கூறப்பட்டது
fīhā l-qitālu
فِيهَا ٱلْقِتَالُۙ
அதில்/போர்
ra-ayta
رَأَيْتَ
பார்ப்பீர்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
fī qulūbihim
فِى قُلُوبِهِم
தங்கள் உள்ளங்களில்
maraḍun
مَّرَضٌ
நோய்
yanẓurūna
يَنظُرُونَ
பார்ப்பார்கள்
ilayka
إِلَيْكَ
உம் பக்கம்
naẓara
نَظَرَ
பார்ப்பது போல்
l-maghshiyi ʿalayhi
ٱلْمَغْشِىِّ عَلَيْهِ
மயக்கமுற்றவர்கள்
mina l-mawti
مِنَ ٱلْمَوْتِۖ
மரண பயத்தால்
fa-awlā
فَأَوْلَىٰ
ஆகவே
lahum
لَهُمْ
அவர்களுக்கு
நம்பிக்கை கொண்டவர்களிலும் பலர், (போரைப் பற்றி) யாதொரு (தனி அத்தியாயம் இறக்கப்பட வேண்டாமா? என்று கூறுகின்றனர். அவ்வாறே (தெளிவான) ஒரு திட்டமான அத்தியாயம் இறக்கப்பட்டு போர் செய்யுமாறு அதில் கூறப்பட்டிருந்தால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அவர்கள், மரண அவஸ்தையில் சிக்கி மயங்கிக் கிடப்பவர் பார்ப்பதைப் போல் (நபியே!) உங்களை அவர்கள் நோக்குவார்கள். ஆகவே, அவர்களுக்குக் கேடுதான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௨௦)
Tafseer