Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௫

Qur'an Surah Al-Jathiyah Verse 5

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَمَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَاۤءِ مِنْ رِّزْقٍ فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَتَصْرِيْفِ الرِّيٰحِ اٰيٰتٌ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ (الجاثية : ٤٥)

wa-ikh'tilāfi
وَٱخْتِلَٰفِ
And (in the) alternation
மாறிமாறிவருவதிலும்
al-layli wal-nahāri
ٱلَّيْلِ وَٱلنَّهَارِ
(of) the night and the day
இரவு, பகல்
wamā anzala
وَمَآ أَنزَلَ
and what Allah sends down
இன்னும் எது/இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
Allah sends down
அல்லாஹ்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
from the sky
வானத்திலிருந்து
min riz'qin
مِن رِّزْقٍ
of (the) provision
மழையை
fa-aḥyā
فَأَحْيَا
and gives life
உயிர்ப்பித்தான்
bihi
بِهِ
thereby
அதன் மூலம்
l-arḍa
ٱلْأَرْضَ
(to) the earth
பூமியை
baʿda
بَعْدَ
after
பின்னர்
mawtihā
مَوْتِهَا
its death
அது இறந்த
wataṣrīfi
وَتَصْرِيفِ
and (in) directing of
திருப்புவதிலும்
l-riyāḥi
ٱلرِّيَٰحِ
(the) winds
காற்றுகளை
āyātun
ءَايَٰتٌ
(are) Signs
பல அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
for a people
மக்களுக்கு
yaʿqilūna
يَعْقِلُونَ
who reason
சிந்தித்து புரிகின்றனர்

Transliteration:

Wakhtilaafil laili wannahaari wa maaa anzalal laahu minas samaaa'i mir rizqin fa ahyaa bihil arda ba'da mawtihaa wa tasreefir riyaahi Aayaatul liqawminy ya'qiloon (QS. al-Jāthiyah:5)

English Sahih International:

And [in] the alternation of night and day and [in] what Allah sends down from the sky of provision [i.e., rain] and gives life thereby to the earth after its lifelessness and [in His] directing of the winds are signs for a people who reason. (QS. Al-Jathiyah, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

இரவு, பகல் மாறிமாறி வரும்படி அல்லாஹ் செய்திருப்பதிலும், வானத்திலிருந்து மழையை இறக்கி வைத்து, அதனைக்கொண்டு (வரண்டு) இறந்துபோன பூமியை உயிர்ப்பிப்பதிலும், (பல திசைகளுக்கும்) காற்றுகளை திருப்பிவிடுவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௫)

Jan Trust Foundation

மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானத்திலிருந்து அருள் மாரியை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை மாறி மாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் வானத்தில் இருந்து மழையை இறக்கி அதன் மூலம் பூமியை - அது இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதிலும் காற்றுகளை (பல திசைகளில்) திருப்புவதிலும் சிந்தித்துப் புரிகின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.