Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௩௪

Qur'an Surah Al-Jathiyah Verse 34

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقِيْلَ الْيَوْمَ نَنْسٰىكُمْ كَمَا نَسِيْتُمْ لِقَاۤءَ يَوْمِكُمْ هٰذَاۙ وَمَأْوٰىكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نّٰصِرِيْنَ (الجاثية : ٤٥)

waqīla
وَقِيلَ
And it will be said
கூறப்படும்
l-yawma
ٱلْيَوْمَ
"Today
இன்று
nansākum
نَنسَىٰكُمْ
We forget you
உங்களை விட்டுவிடுவோம்
kamā nasītum
كَمَا نَسِيتُمْ
as you forgot
நீங்கள் விட்டதுபோன்று
liqāa
لِقَآءَ
(the) meeting
சந்திப்பை
yawmikum hādhā
يَوْمِكُمْ هَٰذَا
(of) this Day of yours (of) this Day of yours
உங்களது இன்றைய தினத்தின்
wamawākumu
وَمَأْوَىٰكُمُ
and your abode
உங்கள் ஒதுங்குமிடம்
l-nāru
ٱلنَّارُ
(is) the Fire
நரகம்தான்
wamā lakum
وَمَا لَكُم
and not for you
உங்களுக்கு இல்லை
min nāṣirīna
مِّن نَّٰصِرِينَ
any helpers
உதவியாளர்கள் யாரும்

Transliteration:

Wa qeelal yawma nansaakum kamaa naseetum liqaaa'a yawmikum haazaa wa maawaakumun Naaru wa maa lakum min naasireen (QS. al-Jāthiyah:34)

English Sahih International:

And it will be said, "Today We will forget you as you forgot the meeting of this Day of yours, and your refuge is the Fire, and for you there are no helpers. (QS. Al-Jathiyah, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

அன்றி, (அவர்களை நோக்கி) "இந்நாளை நீங்கள் சந்திப்பதை மறந்தவாறே, நாமும் இன்றைய தினம் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் தங்குமிடம் நரகம்தான். (இன்றைய தினம்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் யாருமில்லை" என்றும் கூறப்படும். (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௩௪)

Jan Trust Foundation

இன்னும், “நீங்கள் உங்களுடைய இந்நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்றே, இன்றைய தினம் நாம் உங்களை மறக்கிறோம்; அன்றியும் நீங்கள் தங்குமிடம் நரகம் தான்; மேலும், உங்களுக்கு உதவி செய்பவர் எவருமில்லை” என்று (அவர்களுக்குக்) கூறப்படும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“இன்று நாங்கள் உங்களை (வேதனையில்) விட்டுவிடுவோம் உங்களது இன்றைய தினத்தின் சந்திப்பை (மறந்து அதற்கு அமல் செய்வதை) நீங்கள் விட்டது போன்று. உங்கள் ஒதுங்குமிடம் நரகம்தான். உதவியாளர்கள் யாரும் உங்களுக்கு இல்லை” என்று கூறப்படும்.