Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௨௯

Qur'an Surah Al-Jathiyah Verse 29

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰذَا كِتٰبُنَا يَنْطِقُ عَلَيْكُمْ بِالْحَقِّ ۗاِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ (الجاثية : ٤٥)

hādhā
هَٰذَا
This
இதோ
kitābunā
كِتَٰبُنَا
Our Record
நமது பதிவேடு
yanṭiqu
يَنطِقُ
speaks
அது பேசும்
ʿalaykum
عَلَيْكُم
about you
உங்கள் மீது
bil-ḥaqi
بِٱلْحَقِّۚ
in truth
உண்மையாக
innā
إِنَّا
Indeed We
நிச்சயமாக நாம்
kunnā nastansikhu
كُنَّا نَسْتَنسِخُ
[We] used (to) transcribe
எழுதிக் கொண்டிருந்தோம்
mā kuntum taʿmalūna
مَا كُنتُمْ تَعْمَلُونَ
what you used (to) do"
நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை

Transliteration:

Haazaa kitaabunaa yantiqu 'alaikum bilhaqq; innaa kunnaa nastansikhu maa kuntum ta'maloon (QS. al-Jāthiyah:29)

English Sahih International:

This, Our record, speaks about you in truth. Indeed, We were having transcribed whatever you used to do." (QS. Al-Jathiyah, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

"இது (உங்கள் செயலைப் பற்றிய) நம்முடைய (பதிவுப்) புத்தகம். இது உங்களைப் பற்றிய உண்மையையே கூறும். நிச்சயமாக நாம், நீங்கள் செய்தவற்றையெல்லாம் எழுதி வைத்திருக்கின்றோம்" (என்றும் கூறப்படும்). (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௨௯)

Jan Trust Foundation

“இது உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய புத்தகம்; நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்” (என்று கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதோ நமது (தாய்) பதிவேடு ஆகும். அது உங்கள் மீது உண்மையாகப் பேசும். நிச்சயமாக நாம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை எழுதிக் கொண்டிருந்தோம்.