Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௨௮

Qur'an Surah Al-Jathiyah Verse 28

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَرٰى كُلَّ اُمَّةٍ جَاثِيَةً ۗ كُلُّ اُمَّةٍ تُدْعٰٓى اِلٰى كِتٰبِهَاۗ اَلْيَوْمَ تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ (الجاثية : ٤٥)

watarā
وَتَرَىٰ
And you will see
நீர் பார்ப்பீர்
kulla
كُلَّ
every
ஒவ்வொரு
ummatin
أُمَّةٍ
nation
சமுதாயத்தையும்
jāthiyatan
جَاثِيَةًۚ
kneeling
முழந்தாளிட்ட வர்களாக
kullu
كُلُّ
Every
ஒவ்வொரு
ummatin
أُمَّةٍ
nation
சமுதாயமும்
tud'ʿā
تُدْعَىٰٓ
will be called
அழைக்கப்படும்
ilā kitābihā
إِلَىٰ كِتَٰبِهَا
to its record
தமது பதிவு புத்தகத்தின் பக்கம்
l-yawma
ٱلْيَوْمَ
"Today
இன்று
tuj'zawna
تُجْزَوْنَ
you will be recompensed
கூலி கொடுக்கப்படுவீர்கள்
mā kuntum taʿmalūna
مَا كُنتُمْ تَعْمَلُونَ
(for) what you used (to) do
நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்கு

Transliteration:

Wa taraa kulla ummatin jaasiyah; kullu ummatin tud'aaa ilaa kitaabihaa al Yawma tujzawna maa kuntum ta'maloon (QS. al-Jāthiyah:28)

English Sahih International:

And you will see every nation kneeling [from fear]. Every nation will be called to its record [and told], "Today you will be recompensed for what you used to do. (QS. Al-Jathiyah, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

(நபியே! அந்நாளில்) ஒவ்வொரு வகுப்பாரும், முழந்தாளிட்டிருக்கக் காண்பீர்கள். ஒவ்வொரு வகுப்பாரும் (விசாரணைக்காக) அவர்களுடைய (பதிவுப்) புத்தகத்தை நோக்கி அழைக்கப்படுவார்கள். (அவர்களை நோக்கி) "இன்றைய தினம் நீங்கள் உங்கள் செயலுக்குரிய கூலியை கொடுக்கப் பெறுவீர்கள்" (என்றும்), (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௨௮)

Jan Trust Foundation

(அன்று) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க (நபியே!) நீர் காண்பீர்; ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் (பதிவு) புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள் (உலகில்) செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே! அந்நாளில்) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டவர்களாக நீர் பார்ப்பீர். ஒவ்வொரு சமுதாயமும் தமது பதிவு புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும். நீங்கள் (உலகத்தில்) செய்துகொண்டிருந்த செயல்களுக்கு இன்று கூலி கொடுக்கப்படுவீர்கள்.