Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௨௪

Qur'an Surah Al-Jathiyah Verse 24

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْا مَا هِيَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَآ اِلَّا الدَّهْرُۚ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ (الجاثية : ٤٥)

waqālū
وَقَالُوا۟
And they say
இன்னும் கூறினார்கள்
مَا
"Not
வேறு இல்லை
hiya
هِىَ
it
இது
illā
إِلَّا
(is) but
தவிர
ḥayātunā
حَيَاتُنَا
our life
நமது வாழ்க்கையை
l-dun'yā
ٱلدُّنْيَا
(of) the world
உலக
namūtu
نَمُوتُ
we die
மரணிக்கின்றோம்
wanaḥyā
وَنَحْيَا
and we live
இன்னும் வாழ்கின்றோம்
wamā yuh'likunā
وَمَا يُهْلِكُنَآ
and not destroys us
நம்மை அழிக்காது
illā l-dahru
إِلَّا ٱلدَّهْرُۚ
except the time"
காலத்தைத் தவிர
wamā lahum
وَمَا لَهُم
And not for them
அவர்களுக்கு இல்லை
bidhālika
بِذَٰلِكَ
of that
இதைப் பற்றி
min ʿil'min
مِنْ عِلْمٍۖ
any knowledge;
அறிவு
in hum
إِنْ هُمْ
not they
அவர்கள் இல்லை
illā yaẓunnūna
إِلَّا يَظُنُّونَ
(do) but guess
வீண் எண்ணம் எண்ணுபவர்களே தவிர

Transliteration:

Wa qaaloo maa hiya illaa hayaatunad dunyaa namootu wa nahyaa wa maa yuhlikunaaa illad dahr; wa maa lahum bizaalika min 'ilmin in hum illaayazunnoon (QS. al-Jāthiyah:24)

English Sahih International:

And they say, "There is not but our worldly life; we die and live, and nothing destroys us except time." And they have of that no knowledge; they are only assuming. (QS. Al-Jathiyah, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

"இவ்வுலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையைத் தவிர வேறொரு வாழ்க்கை இல்லை" என்றும், "(இதில்தான்) நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்; பின்னர் இறந்து விடுகின்றோம். காலத்தைத் தவிர (வேறு யாதொன்றும்) நம்மை அழிப்பதில்லை" என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதைப்பற்றி இவர்களுக்கு யாதொரு ஞானமும் இல்லை. இவர்கள் வீண் சந்தேகத்தில் ஆழ்ந்திருப் போரைத் தவிர வேறில்லை. (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௨௪)

Jan Trust Foundation

மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்| “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினார்கள்: “இது நமது உலக வாழ்க்கையைத் தவிர வேறு இல்லை. நாம் (இப்போது) மரணிக்கின்றோம். இன்னும் நாம் வாழ்கின்றோம். (-நமக்கு பின்னர் நமது பிள்ளைகள் இவ்வுலகில் உயிர்வாழ்வார்கள். இப்படியே உலகம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்) காலத்தைத் தவிர நம்மை (வேறொன்றும்) அழிக்காது.” அவர்களுக்கு இதைப் பற்றி அறவே அறிவு இல்லை. அவர்கள் வீண் எண்ணம் எண்ணுபவர்களே தவிர வேறில்லை.