Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௧௭

Qur'an Surah Al-Jathiyah Verse 17

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاٰتَيْنٰهُمْ بَيِّنٰتٍ مِّنَ الْاَمْرِۚ فَمَا اخْتَلَفُوْٓا اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَاۤءَهُمُ الْعِلْمُ بَغْيًاۢ بَيْنَهُمْ ۗاِنَّ رَبَّكَ يَقْضِيْ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ (الجاثية : ٤٥)

waātaynāhum
وَءَاتَيْنَٰهُم
And We gave them
நாம் அவர்களுக்குக் கொடுத்தோம்
bayyinātin
بَيِّنَٰتٍ
clear proofs
தெளிவான சட்டங்களை
mina l-amri
مِّنَ ٱلْأَمْرِۖ
of the matter
இந்த மார்க்கத்தின்
famā ikh'talafū
فَمَا ٱخْتَلَفُوٓا۟
And not they differed
அவர்கள் கருத்து வேறுபடவில்லை
illā min baʿdi mā
إِلَّا مِنۢ بَعْدِ مَا
except after after [what]
தவிர/அவர்களிடம் வந்த பின்னர்
l-ʿil'mu
ٱلْعِلْمُ
the knowledge
கல்வி
baghyan
بَغْيًۢا
(out of) envy
பொறாமையினால்
baynahum
بَيْنَهُمْۚ
between themselves
தங்களுக்கு மத்தியில்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
your Lord
உமது இறைவன்
yaqḍī
يَقْضِى
will judge
தீர்ப்பளிப்பான்
baynahum
بَيْنَهُمْ
between them
அவர்களுக்கு மத்தியில்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
(on the) Day (of) the Resurrection
மறுமை நாளில்
fīmā kānū fīhi yakhtalifūna
فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ
about what they used (to) therein differ
அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றில்

Transliteration:

Wa aatainaahum baiyinaatim minal amri famakh talafooo illaa mim ba'di maa jaaa'ahumul 'ilmu baghyam bainahum; inna Rabbaka yaqdee bainahum Yawmal Qiyaamati feemaa kaanoo feehi yakhtalifoon (QS. al-Jāthiyah:17)

English Sahih International:

And We gave them clear proofs of the matter [of religion]. And they did not differ except after knowledge had come to them – out of jealous animosity between themselves. Indeed, your Lord will judge between them on the Day of Resurrection concerning that over which they used to differ. (QS. Al-Jathiyah, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

அன்றி, நம் கட்டளைகளைப் பற்றித் தெளிவான வசனங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்களுக்கிடையிலுள்ள பொறாமையின் காரணமாக, அவர்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னர், அவர்கள் தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) பிரிந்துவிட்டனர். (நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன் அவர்கள் தர்க்கித்துக் கொண்டவைகளைப் பற்றி மறுமையில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான். (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௧௭)

Jan Trust Foundation

அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இந்த மார்க்கத்தின் தெளிவான சட்டங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். அவர்களிடம் கல்வி வந்த பின்னர் தங்களுக்கு மத்தியில் உள்ள பொறாமையினால் தவிர அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேறுபடவில்லை. நிச்சயமாக உமது இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கு மத்தியில் அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றில் தீர்ப்பளிப்பான்.