Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௧௦

Qur'an Surah Al-Jathiyah Verse 10

ஸூரத்துல் ஜாஸியா [௪௫]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مِنْ وَّرَاۤىِٕهِمْ جَهَنَّمُ ۚوَلَا يُغْنِيْ عَنْهُمْ مَّا كَسَبُوْا شَيْـًٔا وَّلَا مَا اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِيَاۤءَۚ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌۗ (الجاثية : ٤٥)

min warāihim
مِّن وَرَآئِهِمْ
Before them Before them
இவர்களுக்கு முன்னால் இருக்கின்றது
jahannamu
جَهَنَّمُۖ
(is) Hell
நரகம்
walā yugh'nī
وَلَا يُغْنِى
and not will avail
எதையும் தடுக்காது
ʿanhum
عَنْهُم
them
அவர்களை விட்டும்
mā kasabū
مَّا كَسَبُوا۟
what they had earned
அவர்கள் சம்பாதித்தது
shayan
شَيْـًٔا
anything
எதையும்
walā mā ittakhadhū
وَلَا مَا ٱتَّخَذُوا۟
and not what they had taken
இன்னும் எவற்றை/அவர்கள் எடுத்துக் கொண்டார்களோ
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
besides besides Allah
அல்லாஹ்வையன்றி
awliyāa
أَوْلِيَآءَۖ
(as) protectors
பாதுகாவலர்களாக
walahum
وَلَهُمْ
And for them
அவர்களுக்கு உண்டு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
வேதனை
ʿaẓīmun
عَظِيمٌ
great
பெரிய(து)

Transliteration:

Minw waraaa'ihim Jahannamu wa laa yughnee 'anhum maa kasaboo shai'anw wa laa mat takhazoo min doonil laahi awliyaaa'a wa lahum 'azaabun 'azeem (QS. al-Jāthiyah:10)

English Sahih International:

Before them is Hell, and what they had earned will not avail them at all nor what they had taken besides Allah as allies. And they will have a great punishment. (QS. Al-Jathiyah, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

இத்தகையவர்களுக்கு பின்புறம் நரகம்தான் இருக்கின்றது. அவர்கள் சேகரித்திருப்பவைகளோ அல்லது தங்களுக்குப் பாதுகாப்பாளர்கள் என்று அவர்கள் எடுத்துக்கொண்ட அல்லாஹ் அல்லாதவைகளோ, அவர்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது. அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு. (ஸூரத்துல் ஜாஸியா, வசனம் ௧௦)

Jan Trust Foundation

அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது; அவர்கள் சம்பாதித்துக் கொண்டதில் எப்பொருளும் அவர்களுக்குப் பயன் தராது; அல்லாஹ்வையன்றி, எவற்றை அவர்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் (அவர்களுக்குப் பயன் தராது); மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனையுமுண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கின்றது. அவர்கள் சம்பாதித்தது அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் வேதனையில்) எதையும் தடுக்காது. அல்லாஹ்வை அன்றி அவர்கள் எவற்றை பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் (அவர்களை விட்டும் அல்லாஹ்வின் வேதனையில் எதையும் தடுக்காது.) அவர்களுக்கு பெரிய வேதனை உண்டு.