Skip to content

ஸூரா ஸூரத்துல் ஜாஸியா - Page: 4

Al-Jathiyah

(al-Jāthiyah)

௩௧

وَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْاۗ اَفَلَمْ تَكُنْ اٰيٰتِيْ تُتْلٰى عَلَيْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُّجْرِمِيْنَ ٣١

wa-ammā
وَأَمَّا
ஆக
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரித்தவர்கள்
afalam takun
أَفَلَمْ تَكُنْ
இருக்கவில்லையா?
āyātī
ءَايَٰتِى
எனது வசனங்கள்
tut'lā
تُتْلَىٰ
ஓதப்படுகின்றன
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
fa-is'takbartum
فَٱسْتَكْبَرْتُمْ
நீங்கள் பெருமை அடித்தீர்கள்
wakuntum
وَكُنتُمْ
இன்னும் நீங்கள் இருந்தீர்கள்
qawman
قَوْمًا
மக்களாக
muj'rimīna
مُّجْرِمِينَ
குற்றம் புரிகின்றவர்கள்
எவர்கள் (நம்முடைய வசனங்களை) நிராகரித்தார்களோ (அவர்களை நோக்கி) உங்களுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அச்சமயம் நீங்கள் பெருமைகொண்டு (அதனைப் புறக்கணித்து) விட்டீர்கள். அதனால் நீங்கள் குற்றவாளிகளாகி விட்டீர்கள்" (என்றும் கூறப்படும்). ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௩௧)
Tafseer
௩௨

وَاِذَا قِيْلَ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّالسَّاعَةُ لَا رَيْبَ فِيْهَا قُلْتُمْ مَّا نَدْرِيْ مَا السَّاعَةُۙ اِنْ نَّظُنُّ اِلَّا ظَنًّا وَّمَا نَحْنُ بِمُسْتَيْقِنِيْنَ ٣٢

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
inna waʿda
إِنَّ وَعْدَ
நிச்சயமாக வாக்கு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ḥaqqun
حَقٌّ
உண்மையானது
wal-sāʿatu
وَٱلسَّاعَةُ
இன்னும் மறுமை
lā rayba
لَا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
fīhā
فِيهَا
அதில்
qul'tum
قُلْتُم
நீங்கள் கூறுவீர்கள்
mā nadrī
مَّا نَدْرِى
அறியமாட்டோம்
mā l-sāʿatu
مَا ٱلسَّاعَةُ
மறுமை என்றால் என்ன?
in naẓunnu
إِن نَّظُنُّ
நாங்கள் எண்ணவில்லை
illā
إِلَّا
தவிர
ẓannan
ظَنًّا
ஒரு எண்ணமாகவே
wamā naḥnu bimus'tayqinīna
وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ
நாங்கள் உறுதிசெய்பவர்களாக இல்லை
அன்றி, "நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. மறுமை வருவதில் யாதொரு சந்தேகமுமில்லை" என்று (உங்களுக்குக்) கூறப்பட்டால் அதற்கு, "மறுமை இன்னதென்றே நாங்கள் அறியோம். அது (வீணான) வெறும் எண்ணத்தைத் தவிர வேறில்லை என்றே எண்ணுகிறோம். அதனை (மெய்யென்று) நாங்கள் நம்பவுமில்லை" என்று நீங்கள் கூறினீர்கள் (அல்லவா?) என்று (அவர்களிடம்) கேட்கப்படும். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௩௨)
Tafseer
௩௩

وَبَدَا لَهُمْ سَيِّاٰتُ مَا عَمِلُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ٣٣

wabadā
وَبَدَا
வெளிப்படும்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
sayyiātu
سَيِّـَٔاتُ
தீமைகள்
mā ʿamilū
مَا عَمِلُوا۟
அவர்கள் செய்தவற்றின்
waḥāqa
وَحَاقَ
இன்னும் சூழ்ந்துகொள்ளும்
bihim
بِهِم
அவர்களை
mā kānū bihi
مَّا كَانُوا۟ بِهِۦ
எது/ இருந்தார்களோ/அதை
yastahziūna
يَسْتَهْزِءُونَ
பரிகாசம் செய்பவர்களாக
அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்கள் அனைத்தும், அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தவைகளே அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௩௩)
Tafseer
௩௪

وَقِيْلَ الْيَوْمَ نَنْسٰىكُمْ كَمَا نَسِيْتُمْ لِقَاۤءَ يَوْمِكُمْ هٰذَاۙ وَمَأْوٰىكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نّٰصِرِيْنَ ٣٤

waqīla
وَقِيلَ
கூறப்படும்
l-yawma
ٱلْيَوْمَ
இன்று
nansākum
نَنسَىٰكُمْ
உங்களை விட்டுவிடுவோம்
kamā nasītum
كَمَا نَسِيتُمْ
நீங்கள் விட்டதுபோன்று
liqāa
لِقَآءَ
சந்திப்பை
yawmikum hādhā
يَوْمِكُمْ هَٰذَا
உங்களது இன்றைய தினத்தின்
wamawākumu
وَمَأْوَىٰكُمُ
உங்கள் ஒதுங்குமிடம்
l-nāru
ٱلنَّارُ
நரகம்தான்
wamā lakum
وَمَا لَكُم
உங்களுக்கு இல்லை
min nāṣirīna
مِّن نَّٰصِرِينَ
உதவியாளர்கள் யாரும்
அன்றி, (அவர்களை நோக்கி) "இந்நாளை நீங்கள் சந்திப்பதை மறந்தவாறே, நாமும் இன்றைய தினம் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் தங்குமிடம் நரகம்தான். (இன்றைய தினம்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் யாருமில்லை" என்றும் கூறப்படும். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௩௪)
Tafseer
௩௫

ذٰلِكُمْ بِاَنَّكُمُ اتَّخَذْتُمْ اٰيٰتِ اللّٰهِ هُزُوًا وَّغَرَّتْكُمُ الْحَيٰوةُ الدُّنْيَا ۚفَالْيَوْمَ لَا يُخْرَجُوْنَ مِنْهَا وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ ٣٥

dhālikum bi-annakumu
ذَٰلِكُم بِأَنَّكُمُ
இதற்கு காரணம் நிச்சயமாக நீங்கள்
ittakhadhtum
ٱتَّخَذْتُمْ
எடுத்துக்கொண்டீர்கள்
āyāti
ءَايَٰتِ
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
huzuwan
هُزُوًا
கேலியாக
wagharratkumu
وَغَرَّتْكُمُ
இன்னும் உங்களை மயக்கிவிட்டது
l-ḥayatu l-dun'yā
ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَاۚ
உலக வாழ்க்கை
fal-yawma
فَٱلْيَوْمَ
ஆகவே, இன்று
lā yukh'rajūna
لَا يُخْرَجُونَ
வெளியேற்றப்பட மாட்டார்கள்
min'hā
مِنْهَا
அதிலிருந்து
walā hum yus'taʿtabūna
وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ
இன்னும் அவர்களிடமிருந்து காரணங்கள் அங்கீகரிக்கப்படாது
இதன் காரணமாவது: நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக் கொண்டீர்கள். இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கிவிட்டது (என்றும் கூறப்படும்). இன்றைய தினம் அதிலிருந்து அவர்கள் வெளிச்செல்ல விடப்படமாட்டார்கள். அன்றி, அவர்களுடைய மன்னிப்புக்கோரலும் அங்கீகரிக்கப்பட மாட்டாது. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௩௫)
Tafseer
௩௬

فَلِلّٰهِ الْحَمْدُ رَبِّ السَّمٰوٰتِ وَرَبِّ الْاَرْضِ رَبِّ الْعٰلَمِيْنَ ٣٦

falillahi
فَلِلَّهِ
அல்லாஹ்விற்கே
l-ḥamdu
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
rabbi
رَبِّ
அதிபதி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
warabbi
وَرَبِّ
இன்னும் அதிபதி
l-arḍi
ٱلْأَرْضِ
பூமியின்
rabbi
رَبِّ
அதிபதி
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தார்களின்
வானங்களின் இறைவனும், பூமியின் இறைவனும், இன்னும் அகிலத்தார் அனைவரின் இறைவனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௩௬)
Tafseer
௩௭

وَلَهُ الْكِبْرِيَاۤءُ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۗوَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ࣖ ۔ ٣٧

walahu
وَلَهُ
இன்னும் அவனுக்கே உரியது
l-kib'riyāu
ٱلْكِبْرِيَآءُ
பெருமை
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
பூமியிலும்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா பெருமைகளும் அவனுக்கே சொந்தமானவை. அவன் (அனைவரையும்) மிகைத்த வனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௩௭)
Tafseer