Skip to content

ஸூரா ஸூரத்துல் ஜாஸியா - Page: 3

Al-Jathiyah

(al-Jāthiyah)

௨௧

اَمْ حَسِبَ الَّذِيْنَ اجْتَرَحُوا السَّيِّاٰتِ اَنْ نَّجْعَلَهُمْ كَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَوَاۤءً مَّحْيَاهُمْ وَمَمَاتُهُمْ ۗسَاۤءَ مَا يَحْكُمُوْنَ ࣖࣖ ٢١

am ḥasiba
أَمْ حَسِبَ
எண்ணுகின்றார்களா?
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ij'taraḥū
ٱجْتَرَحُوا۟
செய்தார்கள்
l-sayiāti
ٱلسَّيِّـَٔاتِ
பாவங்களை
an najʿalahum
أَن نَّجْعَلَهُمْ
அவர்களை ஆக்குவோம் என்று
ka-alladhīna
كَٱلَّذِينَ
எவர்களைப் போன்று
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
செய்தவர்களை
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
sawāan
سَوَآءً
சமமாக்கிவிடுவோம்
maḥyāhum
مَّحْيَاهُمْ
வாழ்க்கையும் இவர்களின்
wamamātuhum
وَمَمَاتُهُمْۚ
இவர்களின் மரணத்தையும்
sāa
سَآءَ
அது மிகக் கெட்டது
mā yaḥkumūna
مَا يَحْكُمُونَ
எதை தீர்ப்பளிக்கின்றார்களோ
எவர்கள் பாவத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்கள், நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களைப் போல் ஆகிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் உயிருடன் இருப்பதும் அவர்கள் இறந்துவிடுவதும் சமமே. அவர்கள் (இதற்கு மாறாகச்) செய்துகொண்ட முடிவு மகா கெட்டது. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௧)
Tafseer
௨௨

وَخَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزٰى كُلُّ نَفْسٍۢ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ ٢٢

wakhalaqa
وَخَلَقَ
படைத்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையான காரணத்திற்காக(வும்)
walituj'zā
وَلِتُجْزَىٰ
கூலி கொடுக்கப்படுவதற்காகவும்
kullu nafsin
كُلُّ نَفْسٍۭ
ஒவ்வொரு ஆன்மாவும்
bimā kasabat
بِمَا كَسَبَتْ
அது எதை செய்ததோ
wahum lā yuẓ'lamūna
وَهُمْ لَا يُظْلَمُونَ
இன்னும் அவர்கள்/அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
வானங்களையும் பூமியையும் அல்லாஹ் தக்க காரணத்தின் மீதே படைத்திருக்கின்றான். ஆகவே, (அவர்களில் உள்ள) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவைகளின் செயலுக்குத்தக்க கூலியே கொடுக்கப்படும். அவை (அணுவளவும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௨)
Tafseer
௨௩

اَفَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰىهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰى عِلْمٍ وَّخَتَمَ عَلٰى سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰى بَصَرِهٖ غِشٰوَةًۗ فَمَنْ يَّهْدِيْهِ مِنْۢ بَعْدِ اللّٰهِ ۗ اَفَلَا تَذَكَّرُوْنَ ٢٣

afara-ayta
أَفَرَءَيْتَ
நீர் அறிவிப்பீராக!
mani ittakhadha
مَنِ ٱتَّخَذَ
எடுத்துக்கொண்டவனைப் பற்றி
ilāhahu
إِلَٰهَهُۥ
தனது கடவுளாக
hawāhu
هَوَىٰهُ
தனது மனவிருப்பத்தை
wa-aḍallahu
وَأَضَلَّهُ
அவனை வழிகெடுத்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā ʿil'min
عَلَىٰ عِلْمٍ
அறிவு வந்ததன் பின்னர்
wakhatama
وَخَتَمَ
இன்னும் முத்திரையிட்டான்
ʿalā samʿihi
عَلَىٰ سَمْعِهِۦ
அவனது செவியிலும்
waqalbihi
وَقَلْبِهِۦ
அவனது உள்ளத்திலும்
wajaʿala
وَجَعَلَ
இன்னும் ஆக்கினான்
ʿalā baṣarihi
عَلَىٰ بَصَرِهِۦ
அவனது பார்வையில்
ghishāwatan
غِشَٰوَةً
திரையை
faman
فَمَن
ஆகவே, யார்
yahdīhi
يَهْدِيهِ
அவனுக்கு நேர்வழி காட்டுவார்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்விற்கு
afalā tadhakkarūna
أَفَلَا تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?
(நபியே!) தன்னுடைய உடல் ஆசையை இச்சையை(த் தான் வணங்கும்) தெய்வமாக எடுத்துக்கொண்ட ஒருவனை நீங்கள் கவனித்தீர்களா? அவனுக்கு(ப் போதுமான) கல்வி இருந்தும் (அவனது பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டு, அவனுடைய செவியின் மீதும், உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை அமைத்து விட்டான். அல்லாஹ் இவ்வாறு செய்த பின்னர், அவனை யாரால்தான் நேரான வழியில் செலுத்த முடியும்? (இதனை) நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா? ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௩)
Tafseer
௨௪

وَقَالُوْا مَا هِيَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَآ اِلَّا الدَّهْرُۚ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ ٢٤

waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
مَا
வேறு இல்லை
hiya
هِىَ
இது
illā
إِلَّا
தவிர
ḥayātunā
حَيَاتُنَا
நமது வாழ்க்கையை
l-dun'yā
ٱلدُّنْيَا
உலக
namūtu
نَمُوتُ
மரணிக்கின்றோம்
wanaḥyā
وَنَحْيَا
இன்னும் வாழ்கின்றோம்
wamā yuh'likunā
وَمَا يُهْلِكُنَآ
நம்மை அழிக்காது
illā l-dahru
إِلَّا ٱلدَّهْرُۚ
காலத்தைத் தவிர
wamā lahum
وَمَا لَهُم
அவர்களுக்கு இல்லை
bidhālika
بِذَٰلِكَ
இதைப் பற்றி
min ʿil'min
مِنْ عِلْمٍۖ
அறிவு
in hum
إِنْ هُمْ
அவர்கள் இல்லை
illā yaẓunnūna
إِلَّا يَظُنُّونَ
வீண் எண்ணம் எண்ணுபவர்களே தவிர
"இவ்வுலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையைத் தவிர வேறொரு வாழ்க்கை இல்லை" என்றும், "(இதில்தான்) நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்; பின்னர் இறந்து விடுகின்றோம். காலத்தைத் தவிர (வேறு யாதொன்றும்) நம்மை அழிப்பதில்லை" என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதைப்பற்றி இவர்களுக்கு யாதொரு ஞானமும் இல்லை. இவர்கள் வீண் சந்தேகத்தில் ஆழ்ந்திருப் போரைத் தவிர வேறில்லை. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௪)
Tafseer
௨௫

وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ مَّا كَانَ حُجَّتَهُمْ اِلَّآ اَنْ قَالُوا ائْتُوْا بِاٰبَاۤىِٕنَآ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٢٥

wa-idhā tut'lā
وَإِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
āyātunā
ءَايَٰتُنَا
நமது வசனங்கள்
bayyinātin
بَيِّنَٰتٍ
தெளிவான ஆதாரங்களாக
mā kāna
مَّا كَانَ
இருக்கவில்லை
ḥujjatahum
حُجَّتَهُمْ
அவர்களின் ஆதாரம்
illā
إِلَّآ
தவிர
an qālū
أَن قَالُوا۟
அவர்கள் சொல்வதே
i'tū biābāinā
ٱئْتُوا۟ بِـَٔابَآئِنَآ
எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
அவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி,) "மெய்யாகவே (மரணித்தவர்கள் உயிர்பெற்று எழும்புவார்கள் என்ற விஷயத்தில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (இறந்து போன) எங்களுடைய மூதாதைகளை (உயிர்ப்பித்துக்) கொண்டு வாருங்கள்" என்று கூறுவதைத் தவிர, (வேறு) பதில் கூற அவர்களுக்கு முடிவதில்லை. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௫)
Tafseer
௨௬

قُلِ اللّٰهُ يُحْيِيْكُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَارَيْبَ فِيْهِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ ࣖ ٢٦

quli
قُلِ
கூறுவீராக!
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
yuḥ'yīkum
يُحْيِيكُمْ
உங்களை உயிர்ப்பிக்கின்றான்
thumma
ثُمَّ
பிறகு
yumītukum
يُمِيتُكُمْ
உங்களை மரணிக்க வைப்பான்
thumma
ثُمَّ
பிறகு
yajmaʿukum
يَجْمَعُكُمْ
அவன் உங்களை ஒன்று சேர்ப்பான்
ilā yawmi l-qiyāmati
إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
lā rayba
لَا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
fīhi
فِيهِ
அதில்
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
akthara
أَكْثَرَ
அதிகமானவர்கள்
l-nāsi
ٱلنَّاسِ
மக்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
(நபியே!) நீங்கள் அவர்களை நோக்கி கூறுங்கள்: "அல்லாஹ்தான் உங்களை உயிர்ப்பித்தான்; (நானல்ல.) அவனே உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர், மறுமை நாளில் (உயிர் கொடுத்து) உங்களை ஒன்று சேர்ப்பான். இதில் யாதொரு சந்தேகமும் இல்லை. ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதனை உறுதி கொள்வதில்லை." ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௬)
Tafseer
௨௭

وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يَوْمَىِٕذٍ يَّخْسَرُ الْمُبْطِلُوْنَ ٢٧

walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்விற்கே உரியது
mul'ku
مُلْكُ
ஆட்சி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியின்
wayawma
وَيَوْمَ
நாளில்
taqūmu
تَقُومُ
நிகழ்கின்றது
l-sāʿatu
ٱلسَّاعَةُ
மறுமை நாள்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
yakhsaru
يَخْسَرُ
நஷ்டமடைவார்கள்
l-mub'ṭilūna
ٱلْمُبْطِلُونَ
பொய்யர்கள்
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. விசாரணை நாள் வரும் அன்று (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கியவர்கள் நஷ்டத்திற்கு உள்ளாகி இருப்பார்கள். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௭)
Tafseer
௨௮

وَتَرٰى كُلَّ اُمَّةٍ جَاثِيَةً ۗ كُلُّ اُمَّةٍ تُدْعٰٓى اِلٰى كِتٰبِهَاۗ اَلْيَوْمَ تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٢٨

watarā
وَتَرَىٰ
நீர் பார்ப்பீர்
kulla
كُلَّ
ஒவ்வொரு
ummatin
أُمَّةٍ
சமுதாயத்தையும்
jāthiyatan
جَاثِيَةًۚ
முழந்தாளிட்ட வர்களாக
kullu
كُلُّ
ஒவ்வொரு
ummatin
أُمَّةٍ
சமுதாயமும்
tud'ʿā
تُدْعَىٰٓ
அழைக்கப்படும்
ilā kitābihā
إِلَىٰ كِتَٰبِهَا
தமது பதிவு புத்தகத்தின் பக்கம்
l-yawma
ٱلْيَوْمَ
இன்று
tuj'zawna
تُجْزَوْنَ
கூலி கொடுக்கப்படுவீர்கள்
mā kuntum taʿmalūna
مَا كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்கு
(நபியே! அந்நாளில்) ஒவ்வொரு வகுப்பாரும், முழந்தாளிட்டிருக்கக் காண்பீர்கள். ஒவ்வொரு வகுப்பாரும் (விசாரணைக்காக) அவர்களுடைய (பதிவுப்) புத்தகத்தை நோக்கி அழைக்கப்படுவார்கள். (அவர்களை நோக்கி) "இன்றைய தினம் நீங்கள் உங்கள் செயலுக்குரிய கூலியை கொடுக்கப் பெறுவீர்கள்" (என்றும்), ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௮)
Tafseer
௨௯

هٰذَا كِتٰبُنَا يَنْطِقُ عَلَيْكُمْ بِالْحَقِّ ۗاِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٢٩

hādhā
هَٰذَا
இதோ
kitābunā
كِتَٰبُنَا
நமது பதிவேடு
yanṭiqu
يَنطِقُ
அது பேசும்
ʿalaykum
عَلَيْكُم
உங்கள் மீது
bil-ḥaqi
بِٱلْحَقِّۚ
உண்மையாக
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
kunnā nastansikhu
كُنَّا نَسْتَنسِخُ
எழுதிக் கொண்டிருந்தோம்
mā kuntum taʿmalūna
مَا كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை
"இது (உங்கள் செயலைப் பற்றிய) நம்முடைய (பதிவுப்) புத்தகம். இது உங்களைப் பற்றிய உண்மையையே கூறும். நிச்சயமாக நாம், நீங்கள் செய்தவற்றையெல்லாம் எழுதி வைத்திருக்கின்றோம்" (என்றும் கூறப்படும்). ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨௯)
Tafseer
௩௦

فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِيْ رَحْمَتِهٖۗ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِيْنُ ٣٠

fa-ammā alladhīna
فَأَمَّا ٱلَّذِينَ
ஆகவே/எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
fayud'khiluhum
فَيُدْخِلُهُمْ
அவர்களை நுழைவிப்பான்
rabbuhum
رَبُّهُمْ
அவர்களது இறைவன்
fī raḥmatihi
فِى رَحْمَتِهِۦۚ
தனது அருளில்
dhālika huwa
ذَٰلِكَ هُوَ
இதுதான்
l-fawzu
ٱلْفَوْزُ
வெற்றி
l-mubīnu
ٱلْمُبِينُ
மிகத் தெளிவான(து)
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களை, அவர்களுடைய இறைவன் தன்னுடைய அருளில் புகுத்துவான். இதுதான் மிகத் தெளிவான வெற்றியாகும். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௩௦)
Tafseer