Skip to content

ஸூரா ஸூரத்துல் ஜாஸியா - Word by Word

Al-Jathiyah

(al-Jāthiyah)

bismillaahirrahmaanirrahiim

حٰمۤ ١

hha-meem
حمٓ
ஹா மீம்
ஹாமீம். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧)
Tafseer

تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ ٢

tanzīlu
تَنزِيلُ
இறக்கப்பட்டது
l-kitābi
ٱلْكِتَٰبِ
இந்த வேதம்
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
மிகைத்தவன்
l-ḥakīmi
ٱلْحَكِيمِ
மகா ஞானவான்
(அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வினால் இவ்வேதம் இறக்கப்பட்டது. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௨)
Tafseer

اِنَّ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّلْمُؤْمِنِيْنَۗ ٣

inna
إِنَّ
நிச்சயமாக
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
laāyātin
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
lil'mu'minīna
لِّلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
நம்பிக்கை கொண்டவர்களுக்கு, வானங்களிலும் பூமியிலும் நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௩)
Tafseer

وَفِيْ خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِنْ دَاۤبَّةٍ اٰيٰتٌ لِّقَوْمٍ يُّوْقِنُوْنَۙ ٤

wafī khalqikum
وَفِى خَلْقِكُمْ
உங்களைப் படைத்திருப்பதிலும்
wamā yabuthu
وَمَا يَبُثُّ
பரப்பி இருப்பதிலும்
min dābbatin
مِن دَآبَّةٍ
உயிரினங்களை
āyātun
ءَايَٰتٌ
பல அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yūqinūna
يُوقِنُونَ
உறுதியாக நம்பிக்கை கொள்கின்றனர்
உங்களை படைத்திருப்பதிலும், (பூமியில்) பல ஜீவராசிகளை(ப் பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருப்பதிலும், (நம்பிக்கையில்) உறுதியான (நல்ல) மக்களுக்குப் பல அத்தாட்சிகளிருக்கின்றன. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௪)
Tafseer

وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَمَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَاۤءِ مِنْ رِّزْقٍ فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَتَصْرِيْفِ الرِّيٰحِ اٰيٰتٌ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ ٥

wa-ikh'tilāfi
وَٱخْتِلَٰفِ
மாறிமாறிவருவதிலும்
al-layli wal-nahāri
ٱلَّيْلِ وَٱلنَّهَارِ
இரவு, பகல்
wamā anzala
وَمَآ أَنزَلَ
இன்னும் எது/இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
min riz'qin
مِن رِّزْقٍ
மழையை
fa-aḥyā
فَأَحْيَا
உயிர்ப்பித்தான்
bihi
بِهِ
அதன் மூலம்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
baʿda
بَعْدَ
பின்னர்
mawtihā
مَوْتِهَا
அது இறந்த
wataṣrīfi
وَتَصْرِيفِ
திருப்புவதிலும்
l-riyāḥi
ٱلرِّيَٰحِ
காற்றுகளை
āyātun
ءَايَٰتٌ
பல அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yaʿqilūna
يَعْقِلُونَ
சிந்தித்து புரிகின்றனர்
இரவு, பகல் மாறிமாறி வரும்படி அல்லாஹ் செய்திருப்பதிலும், வானத்திலிருந்து மழையை இறக்கி வைத்து, அதனைக்கொண்டு (வரண்டு) இறந்துபோன பூமியை உயிர்ப்பிப்பதிலும், (பல திசைகளுக்கும்) காற்றுகளை திருப்பிவிடுவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௫)
Tafseer

تِلْكَ اٰيٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَيْكَ بِالْحَقِّۚ فَبِاَيِّ حَدِيْثٍۢ بَعْدَ اللّٰهِ وَاٰيٰتِهٖ يُؤْمِنُوْنَ ٦

til'ka
تِلْكَ
இவை
āyātu
ءَايَٰتُ
வசனங்களாகும்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
natlūhā
نَتْلُوهَا
இவற்றை ஓதுகிறோம்
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
bil-ḥaqi
بِٱلْحَقِّۖ
உண்மையாகவே
fabi-ayyi ḥadīthin
فَبِأَىِّ حَدِيثٍۭ
எந்த செய்தியை
baʿda l-lahi
بَعْدَ ٱللَّهِ
பின்னர்/அல்லாஹ்
waāyātihi
وَءَايَٰتِهِۦ
இன்னும் அவனது அத்தாட்சிகளுக்கு
yu'minūna
يُؤْمِنُونَ
இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்
(நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். மெய்யாகவே உங்கள் மீது நாம் இவைகளை ஓதிக் காண்பிக்கிறோம். அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எவ்விஷயத்தை நம்புவார்கள்? ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௬)
Tafseer

وَيْلٌ لِّكُلِّ اَفَّاكٍ اَثِيْمٍۙ ٧

waylun
وَيْلٌ
நாசம்தான்
likulli
لِّكُلِّ
எல்லோருக்கும்
affākin
أَفَّاكٍ
பாவிகள்
athīmin
أَثِيمٍ
பொய் பேசுகின்ற
(இவ்வாறு நிராகரித்துவிட்டுப் பொய்யான தெய்வங்களைக்) கற்பனையாகக் கூறும் பாவிகளுக்கெல்லாம் கேடுதான்! ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௭)
Tafseer

يَّسْمَعُ اٰيٰتِ اللّٰهِ تُتْلٰى عَلَيْهِ ثُمَّ يُصِرُّ مُسْتَكْبِرًا كَاَنْ لَّمْ يَسْمَعْهَاۚ فَبَشِّرْهُ بِعَذَابٍ اَلِيْمٍ ٨

yasmaʿu
يَسْمَعُ
செவியுறுகின்றான்
āyāti
ءَايَٰتِ
வசனங்கள்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
tut'lā
تُتْلَىٰ
ஓதப்படுவதை
ʿalayhi
عَلَيْهِ
தன் மீது
thumma
ثُمَّ
பிறகு
yuṣirru
يُصِرُّ
பிடிவாதம் காட்டுகின்றான்
mus'takbiran
مُسْتَكْبِرًا
பெருமை பிடித்தவனாக
ka-an lam yasmaʿhā
كَأَن لَّمْ يَسْمَعْهَاۖ
அவனோ அவற்றை செவியுறாதவனைப் போல
fabashir'hu
فَبَشِّرْهُ
அவனுக்கு நற்செய்தி கூறுங்கள்!
biʿadhābin
بِعَذَابٍ
வேதனையைக் கொண்டு
alīmin
أَلِيمٍ
வலி தரக்கூடிய(து)
எவன், தனக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட அல்லாஹ்வின் வசனங்களைக் கேட்டபின்னர், அதனைத் தன் காதால் கேட்காதவனைப்போல் கர்வம்கொண்டு (நிராகரிப்பின் மீதே) பிடிவாதமாக இருக்கின்றானோ அவனுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள். ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௮)
Tafseer

وَاِذَا عَلِمَ مِنْ اٰيٰتِنَا شَيْـًٔا ۨاتَّخَذَهَا هُزُوًاۗ اُولٰۤىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِيْنٌۗ ٩

wa-idhā ʿalima
وَإِذَا عَلِمَ
அவன் அறிந்து கொண்டால்
min āyātinā
مِنْ ءَايَٰتِنَا
நமது வசனங்களில்
shayan
شَيْـًٔا
எதையும்
ittakhadhahā
ٱتَّخَذَهَا
அதை எடுத்துக்கொள்கிறான்
huzuwan
هُزُوًاۚ
கேலியாக
ulāika lahum
أُو۟لَٰٓئِكَ لَهُمْ
இவர்களுக்கு உண்டு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
muhīnun
مُّهِينٌ
இழிவுதரும்
நம்முடைய வசனங்களில் எதனை அவன் கேள்விப்பட்ட போதிலும், அதனை அவன் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றான். இத்தகையவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௯)
Tafseer
௧௦

مِنْ وَّرَاۤىِٕهِمْ جَهَنَّمُ ۚوَلَا يُغْنِيْ عَنْهُمْ مَّا كَسَبُوْا شَيْـًٔا وَّلَا مَا اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِيَاۤءَۚ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌۗ ١٠

min warāihim
مِّن وَرَآئِهِمْ
இவர்களுக்கு முன்னால் இருக்கின்றது
jahannamu
جَهَنَّمُۖ
நரகம்
walā yugh'nī
وَلَا يُغْنِى
எதையும் தடுக்காது
ʿanhum
عَنْهُم
அவர்களை விட்டும்
mā kasabū
مَّا كَسَبُوا۟
அவர்கள் சம்பாதித்தது
shayan
شَيْـًٔا
எதையும்
walā mā ittakhadhū
وَلَا مَا ٱتَّخَذُوا۟
இன்னும் எவற்றை/அவர்கள் எடுத்துக் கொண்டார்களோ
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
awliyāa
أَوْلِيَآءَۖ
பாதுகாவலர்களாக
walahum
وَلَهُمْ
அவர்களுக்கு உண்டு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
ʿaẓīmun
عَظِيمٌ
பெரிய(து)
இத்தகையவர்களுக்கு பின்புறம் நரகம்தான் இருக்கின்றது. அவர்கள் சேகரித்திருப்பவைகளோ அல்லது தங்களுக்குப் பாதுகாப்பாளர்கள் என்று அவர்கள் எடுத்துக்கொண்ட அல்லாஹ் அல்லாதவைகளோ, அவர்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது. அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு. ([௪௫] ஸூரத்துல் ஜாஸியா: ௧௦)
Tafseer