Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் துகான் வசனம் ௨௪

Qur'an Surah Ad-Dukhan Verse 24

ஸூரத்துத் துகான் [௪௪]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًاۗ اِنَّهُمْ جُنْدٌ مُّغْرَقُوْنَ (الدخان : ٤٤)

wa-ut'ruki
وَٱتْرُكِ
And leave
விட்டுவிடுங்கள்!
l-baḥra
ٱلْبَحْرَ
the sea
கடலை
rahwan
رَهْوًاۖ
at rest
அமைதியாக
innahum
إِنَّهُمْ
Indeed they
நிச்சயமாக அவர்கள்
jundun
جُندٌ
(are) an army
ராணுவம்
mugh'raqūna
مُّغْرَقُونَ
(to be) drowned"
மூழ்கடிக்கப்படுகின்ற

Transliteration:

Watrukil bahra rahwan innahum jundum mughraqoon (QS. ad-Dukhān:24)

English Sahih International:

And leave the sea in stillness. Indeed, they are an army to be drowned." (QS. Ad-Dukhan, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

(நீங்கள் செல்வதற்காகப் பிளந்த) கடலை வறண்டுபோன அதே நிலையில் விட்டு (நீங்கள் கடலைக் கடந்து) விடுங்கள். நிச்சயமாக அவர்களுடைய படைகள் அனைத்தும் கடலில் மூழ்கடிக்கப் பட்டுவிடும்" (என்று கூறி மூழ்கடித்தான்.) (ஸூரத்துத் துகான், வசனம் ௨௪)

Jan Trust Foundation

“அன்றியும். அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறி” இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் மூழ்கடித்தான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கடலை (அது) அமைதியாக (இருக்கின்ற நிலையில் அப்படியே) விட்டு விடுங்கள்! நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுகின்ற ராணுவம் ஆவார்கள்.