௫௧
اِنَّ الْمُتَّقِيْنَ فِيْ مَقَامٍ اَمِيْنٍۙ ٥١
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-mutaqīna
- ٱلْمُتَّقِينَ
- இறையச்சமுள்ளவர்கள்
- fī maqāmin
- فِى مَقَامٍ
- இடத்தில்
- amīnin
- أَمِينٍ
- பாதுகாப்பான
இறை அச்சமுடையவர்களோ, நிச்சயமாக அச்சமற்ற இடத்தில், ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫௧)Tafseer
௫௨
فِيْ جَنّٰتٍ وَّعُيُوْنٍ ۙ ٥٢
- fī jannātin
- فِى جَنَّٰتٍ
- சொர்க்கங்களில்
- waʿuyūnin
- وَعُيُونٍ
- இன்னும் ஊற்றுகளில் இருப்பார்கள்
அதுவும் சுவனபதி(யின் சோலை)யிலுள்ள ஊற்றுக்களின் சமீபமாக, ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫௨)Tafseer
௫௩
يَّلْبَسُوْنَ مِنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ مُّتَقٰبِلِيْنَۚ ٥٣
- yalbasūna
- يَلْبَسُونَ
- அணிவார்கள்
- min sundusin
- مِن سُندُسٍ
- மென்மையான பட்டு
- wa-is'tabraqin
- وَإِسْتَبْرَقٍ
- இன்னும் தடிப்பமான பட்டு ஆடைகளை
- mutaqābilīna
- مُّتَقَٰبِلِينَ
- ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக
மெல்லியதும் மொத்தமானதும் (ஆக, அவர்கள் விரும்பிய) பட்டாடைகளை அணிந்து, ஒருவரை ஒருவர் முகம் நோக்கி (உட்கார்ந்து உல்லாசமாகப் பேசிக்கொண்டு) இருப்பார்கள். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫௩)Tafseer
௫௪
كَذٰلِكَۗ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِيْنٍۗ ٥٤
- kadhālika
- كَذَٰلِكَ
- இவ்வாறுதான்
- wazawwajnāhum
- وَزَوَّجْنَٰهُم
- இன்னும் அவர்களுக்கு நாம் மணமுடித்து வைப்போம்
- biḥūrin
- بِحُورٍ
- வெண்மையான கண்ணிகளை
- ʿīnin
- عِينٍ
- கண்ணழகிகளான
இவ்வாறே (சந்தேகமின்றி நடைபெறும்). அன்றி, "ஹூருல் ஈன்" (என்னும் கண்ணழகிகளாகிய கன்னிகை)களையும் நாம் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫௪)Tafseer
௫௫
يَدْعُوْنَ فِيْهَا بِكُلِّ فَاكِهَةٍ اٰمِنِيْنَۙ ٥٥
- yadʿūna
- يَدْعُونَ
- கேட்பார்கள்
- fīhā bikulli
- فِيهَا بِكُلِّ
- அதில்/எல்லா
- fākihatin
- فَٰكِهَةٍ
- பழங்களையும்
- āminīna
- ءَامِنِينَ
- நிம்மதியானவர்களாக
அச்சமற்றவர்களாக (அவர்கள் விரும்பிய) கனிவர்க்கங்கள் அனைத்தையும், அங்கு கேட்டு (வாங்கிப் புசித்து) கொண்டும் இருப்பார்கள். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫௫)Tafseer
௫௬
لَا يَذُوْقُوْنَ فِيْهَا الْمَوْتَ اِلَّا الْمَوْتَةَ الْاُوْلٰىۚ وَوَقٰىهُمْ عَذَابَ الْجَحِيْمِۙ ٥٦
- lā yadhūqūna
- لَا يَذُوقُونَ
- சுவைக்க மாட்டார்கள்
- fīhā l-mawta
- فِيهَا ٱلْمَوْتَ
- அதில்/மரணத்தை
- illā l-mawtata
- إِلَّا ٱلْمَوْتَةَ
- மரணத்தை தவிர
- l-ūlā
- ٱلْأُولَىٰۖ
- முதல்
- wawaqāhum
- وَوَقَىٰهُمْ
- இன்னும் அவன் அவர்களைப் பாதுகாத்தான்
- ʿadhāba
- عَذَابَ
- வேதனையை விட்டும்
- l-jaḥīmi
- ٱلْجَحِيمِ
- நரகத்தின்
முந்திய மரணத்தைத் தவிர, அதில் அவர்கள் வேறு யாதொரு மரணத்தையும் அனுபவிக்க மாட்டார்கள். (அதாவது: மரணிக்காது என்றென்றும் வாழ்வார்கள்.) ஆகவே, அவர்களை நரக வேதனையிலிருந்து, (இறைவன்) காப்பாற்றினான். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫௬)Tafseer
௫௭
فَضْلًا مِّنْ رَّبِّكَۚ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ ٥٧
- faḍlan
- فَضْلًا
- அருளினால்
- min rabbika
- مِّن رَّبِّكَۚ
- உமது இறைவனின்
- dhālika huwa
- ذَٰلِكَ هُوَ
- இதுதான்
- l-fawzu l-ʿaẓīmu
- ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
- மகத்தான வெற்றி
(நபியே! இது) உங்களது இறைவனின் அருளாகும். இதுதான் மகத்தான பெரும் வெற்றியுமாகும். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫௭)Tafseer
௫௮
فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ ٥٨
- fa-innamā yassarnāhu bilisānika
- فَإِنَّمَا يَسَّرْنَٰهُ بِلِسَانِكَ
- இதை நாம் இலேசாக்கினோம்/உமது மொழியில்
- laʿallahum yatadhakkarūna
- لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
- அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
(நபியே!) அவர்கள் அறிந்து நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இவ்வேதத்தை நாம் உங்களுடைய மொழியில் எளிதாக்கி வைத்தோம். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫௮)Tafseer
௫௯
فَارْتَقِبْ اِنَّهُمْ مُّرْتَقِبُوْنَ ࣖࣖ ٥٩
- fa-ir'taqib
- فَٱرْتَقِبْ
- ஆகவே, நீர் எதிர்பார்த்திருப்பீராக!
- innahum
- إِنَّهُم
- நிச்சயமாக அவர்களும்
- mur'taqibūna
- مُّرْتَقِبُونَ
- எதிர்பார்க்கின்றார்கள்
(இதனைக் கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறவில்லையெனில், அவர்களுக்கு வரக்கூடிய தீங்கை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்தே இருப்பார்கள். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫௯)Tafseer