Skip to content

ஸூரா ஸூரத்துத் துகான் - Page: 2

Ad-Dukhan

(ad-Dukhān)

௧௧

يَغْشَى النَّاسَۗ هٰذَا عَذَابٌ اَلِيْمٌ ١١

yaghshā
يَغْشَى
அது சூழ்ந்துகொள்ளும்
l-nāsa
ٱلنَّاسَۖ
மக்களை
hādhā
هَٰذَا
இது
ʿadhābun
عَذَابٌ
வேதனையாகும்
alīmun
أَلِيمٌ
வலி தரக்கூடிய(து)
மனிதர்கள் அனைவரையும் அது சூழ்ந்துகொள்ளும். அது துன்புறுத்தும் வேதனையாகும். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௧௧)
Tafseer
௧௨

رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ اِنَّا مُؤْمِنُوْنَ ١٢

rabbanā
رَّبَّنَا
எங்கள் இறைவா!
ik'shif
ٱكْشِفْ
அகற்றி விடுவாயாக
ʿannā
عَنَّا
எங்களை விட்டு
l-ʿadhāba
ٱلْعَذَابَ
வேதனையை
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
mu'minūna
مُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
(அந்நாளில் மனிதர்கள் இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! எங்களை விட்டும் இவ்வேதனையை நீக்கிவிடு. நிச்சயமாக நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கின்றோம்" (என்று கூறுவார்கள்). ([௪௪] ஸூரத்துத் துகான்: ௧௨)
Tafseer
௧௩

اَنّٰى لَهُمُ الذِّكْرٰى وَقَدْ جَاۤءَهُمْ رَسُوْلٌ مُّبِيْنٌۙ ١٣

annā
أَنَّىٰ
எப்படி?
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-dhik'rā
ٱلذِّكْرَىٰ
நல்லறிவு பெறுவது
waqad
وَقَدْ
திட்டமாக
jāahum
جَآءَهُمْ
வந்தார் அவர்களிடம்
rasūlun
رَسُولٌ
ஒரு தூதர்
mubīnun
مُّبِينٌ
தெளிவான(வர்)
(அந்நேரத்தில் அவர்களின்) நல்லுணர்ச்சி எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்? நிச்சயமாக (நம்முடைய) தெளிவான தூதர் (இதற்கு முன்னர்) அவர்களிடம் வந்தே இருக்கின்றார். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௧௩)
Tafseer
௧௪

ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوْا مُعَلَّمٌ مَّجْنُوْنٌۘ ١٤

thumma
ثُمَّ
பிறகு
tawallaw
تَوَلَّوْا۟
அவர்கள் விலகிவிட்டனர்
ʿanhu
عَنْهُ
அவரை விட்டு
waqālū
وَقَالُوا۟
இன்னும் , கூறினர்
muʿallamun
مُعَلَّمٌ
கற்பிக்கப்பட்டவர்
majnūnun
مَّجْنُونٌ
பைத்தியக்காரர்
எனினும், அவர்கள் அவரை புறக்கணித்து, (அவரைப்பற்றி "இவர்) எவராலோ கற்பிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரன்தான்" என்று கூறினர். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௧௪)
Tafseer
௧௫

اِنَّا كَاشِفُوا الْعَذَابِ قَلِيْلًا اِنَّكُمْ عَاۤىِٕدُوْنَۘ ١٥

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
kāshifū
كَاشِفُوا۟
நீக்குவோம்
l-ʿadhābi
ٱلْعَذَابِ
இந்த வேதனையை
qalīlan
قَلِيلًاۚ
கொஞ்சம்
innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
ʿāidūna
عَآئِدُونَ
திரும்புவீர்கள்
(மெய்யாகவே நீங்கள் உணர்ச்சி பெறக்கூடுமென்று) அவ்வேதனையைப் பின்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். (எனினும்) நிச்சயமாக (நீங்கள் பாவம்) செய்யவே மீளுகின்றீர்கள். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௧௫)
Tafseer
௧௬

يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرٰىۚ اِنَّا مُنْتَقِمُوْنَ ١٦

yawma
يَوْمَ
நாளில்
nabṭishu
نَبْطِشُ
தாக்குவோம்
l-baṭshata
ٱلْبَطْشَةَ
தாக்குதல்
l-kub'rā
ٱلْكُبْرَىٰٓ
பெரிய
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
muntaqimūna
مُنتَقِمُونَ
பழிவாங்குவோம்
மிக்க பலமாக அவர்களை நாம் பிடிக்கும் அந்நாளில் நிச்சயமாக (அவர்களிடம்) பழிவாங்கியே தீருவோம். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௧௬)
Tafseer
௧௭

۞ وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَاۤءَهُمْ رَسُوْلٌ كَرِيْمٌۙ ١٧

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
fatannā
فَتَنَّا
சோதித்தோம்
qablahum
قَبْلَهُمْ
இவர்களுக்கு முன்னர்
qawma
قَوْمَ
மக்களை
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
wajāahum
وَجَآءَهُمْ
அவர்களிடம் வந்தார்
rasūlun
رَسُولٌ
ஒரு தூதர்
karīmun
كَرِيمٌ
கண்ணியமான(வர்)
இவர்களுக்கு முன்னரும், ஃபிர்அவ்னுடைய மக்களை நிச்சயமாக நாம் சோதித்தோம். அவர்களிடம் கண்ணியமான (நம்முடைய) ஒரு தூதர் வந்தார். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௧௭)
Tafseer
௧௮

اَنْ اَدُّوْٓا اِلَيَّ عِبَادَ اللّٰهِ ۗاِنِّيْ لَكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ ١٨

an addū
أَنْ أَدُّوٓا۟
ஒப்படைத்துவிடுங்கள்!
ilayya
إِلَىَّ
என்னிடம்
ʿibāda l-lahi
عِبَادَ ٱللَّهِۖ
அல்லாஹ்வின் அடியார்களை
innī
إِنِّى
நிச்சயமாக நான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
rasūlun
رَسُولٌ
தூதர்
amīnun
أَمِينٌ
நம்பிக்கைக்குரிய(வர்)
(வந்த அவர்) "அல்லாஹ்வின் அடியார்(களாகிய இஸ்ராயீலின் சந்ததி)களை என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள். நிச்சயமாக நான் (இறைவனிடமிருந்து) உங்களிடம் வந்துள்ள நம்பிக்கையான ஒரு தூதர். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௧௮)
Tafseer
௧௯

وَّاَنْ لَّا تَعْلُوْا عَلَى اللّٰهِ ۚاِنِّيْٓ اٰتِيْكُمْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍۚ ١٩

wa-an lā taʿlū
وَأَن لَّا تَعْلُوا۟
அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِۖ
அல்லாஹ்விற்கு முன்
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
ātīkum
ءَاتِيكُم
உங்களிடம் வருவேன்
bisul'ṭānin
بِسُلْطَٰنٍ
ஆதாரத்தைக் கொண்டு
mubīnin
مُّبِينٍ
தெளிவான(து)
அல்லாஹ்வுக்கு நீங்கள் மாறு செய்யாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஓர் அத்தாட்சி கொண்டு வந்திருக் கின்றேன்" என்று கூறினார். (அதற்கவர்கள் "நாங்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவோம்" என்று கூறினார்கள். அதற்கு மூஸா) ([௪௪] ஸூரத்துத் துகான்: ௧௯)
Tafseer
௨௦

وَاِنِّيْ عُذْتُ بِرَبِّيْ وَرَبِّكُمْ اَنْ تَرْجُمُوْنِۚ ٢٠

wa-innī
وَإِنِّى
நிச்சயமாக நான்
ʿudh'tu
عُذْتُ
பாதுகாவல் தேடினேன்
birabbī
بِرَبِّى
எனது இறைவனிடம்
warabbikum
وَرَبِّكُمْ
இன்னும் உங்கள் இறைவனிடம்
an tarjumūni
أَن تَرْجُمُونِ
நீங்கள் என்னை கொல்வதில் இருந்து
"என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும்படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடம் நான் பாதுகாப்பைத் தேடுகிறேன்" என்றார். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௨௦)
Tafseer