Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௯

Qur'an Surah Az-Zukhruf Verse 9

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَقُوْلُنَّ خَلَقَهُنَّ الْعَزِيْزُ الْعَلِيْمُۙ (الزخرف : ٤٣)

wala-in
وَلَئِن
And if
sa-altahum
سَأَلْتَهُم
you ask them
நீர் அவர்களிடம் கேட்டால்
man khalaqa
مَّنْ خَلَقَ
"Who created
யார் படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
and the earth?"
பூமியையும்
layaqūlunna
لَيَقُولُنَّ
They will surely say
நிச்சயமாக கூறுவார்கள்
khalaqahunna
خَلَقَهُنَّ
"Has created them
அவற்றைப் படைத்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
the All-Mighty
மிகைத்தவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
the All-Knower"
நன்கறிந்தவன்

Transliteration:

Wa la'in sa altahum man khalaqas samaawaati wal arda la yaqoolunna khalaqa hunnal 'Azeezul 'Aleem (QS. az-Zukhruf:9)

English Sahih International:

And if you should ask them, "Who has created the heavens and the earth?" they would surely say, "They were created by the Exalted in Might, the Knowing," (QS. Az-Zukhruf, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று நீங்கள் அவர்களிடம் கேட்கும் பட்சத்தில், (அனைத்தையும்) மிகைத்தவனும், மிக்க ஞானமுடையவன்தான் அவைகளை படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள். (இதனை அறிந்திருந்தும் அவனுக்கு மாறு செய்கின்றனர்.) (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௯)

Jan Trust Foundation

(நபியே!) நீர் அவர்களிடம்| “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால், “யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற்றை படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்களையும் பூமியையும் யார் படைத்தான் என்று (நபியே!) நீர் அவர்களிடம் கேட்டால், “மிகைத்தவன், நன்கறிந்தவன் அவற்றைப் படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள், (பதில்) கூறுவார்கள்: