குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௮௬
Qur'an Surah Az-Zukhruf Verse 86
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا يَمْلِكُ الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الشَّفَاعَةَ اِلَّا مَنْ شَهِدَ بِالْحَقِّ وَهُمْ يَعْلَمُوْنَ (الزخرف : ٤٣)
- walā yamliku
- وَلَا يَمْلِكُ
- And not have power
- உரிமை பெற மாட்டார்(கள்)
- alladhīna
- ٱلَّذِينَ
- those whom
- எவர்களை
- yadʿūna
- يَدْعُونَ
- they invoke
- அவர்கள் அழைக்கின்றார்கள்
- min dūnihi
- مِن دُونِهِ
- besides Him besides Him
- அவனையன்றி
- l-shafāʿata
- ٱلشَّفَٰعَةَ
- (for) the intercession
- சிபாரிசு செய்வதற்கு
- illā man
- إِلَّا مَن
- except who
- ஆனால்/எவர்கள்
- shahida
- شَهِدَ
- testifies
- சாட்சிகூறினார்(களோ)
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- to the truth
- உண்மைக்கு
- wahum
- وَهُمْ
- and they
- அவர்கள்
- yaʿlamūna
- يَعْلَمُونَ
- know
- நன்கு அறிந்தவர்களாக
Transliteration:
Wa laa yamlikul lazeena yad'oona min doonihish shafaa'ata illaa man shahida bilhaqqi wa hum ya'lamoon(QS. az-Zukhruf:86)
English Sahih International:
And those they invoke besides Him do not possess [power of] intercession; but only those who testify to the truth [can benefit], and they know. (QS. Az-Zukhruf, Ayah ௮௬)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்வையன்றி எவைகளை இவர்கள் (இறைவனென) அழைக்கின்றார்களோ அவைகள் (இவர்களுக்காக அவனிடத்தில்) பரிந்து பேசவும் சக்தி பெறாது. ஆயினும், எவர்கள் உண்மையை அறிந்து அதனைப் பகிரங்கமாகவும் கூறுகிறார்களோ அவர்களைத் தவிர (அவனுடைய அனுமதி கிடைத்தால் அவனிடம் பரிந்து பேசுவார்கள்.) (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௮௬)
Jan Trust Foundation
அன்றியும், அல்லாஹ்வையன்றி அவர்கள் எவர்களை (தெய்வங்களாக) அழைக்கிறார்களோ, அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர். ஆனால் எவர்கள் சத்தியத்தை அறிந்து (ஏற்றவர்காளாக அதற்குச்) சாட்சியம் கூறுகிறார்களோ அவர்கள் (இறை அனுமதி கொண்டு பரிந்து பேசுவர்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனை அன்றி அவர்கள் எவர்களை அழைக்கின்றார்களோ அவர்கள் (அல்லாஹ்விடம் யாருக்கும்) சிபாரிசு செய்வதற்கு உரிமை பெற மாட்டார்கள். ஆனால், எவர்கள் (அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன் என்ற) உண்மைக்கு அவர்கள் (அதை) நன்கு அறிந்தவர்களாக சாட்சி கூறினார்களோ (-அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு எதையும் இணைவைக்காமல் இருந்தார்களோ) அவர்களுக்குத்தான் (நல்லவர்கள்) சிபாரிசு செய்வார்கள். (தங்களை வணங்கியவர்களுக்கு அல்ல.)