குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௮௦
Qur'an Surah Az-Zukhruf Verse 80
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمْ يَحْسَبُوْنَ اَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوٰىهُمْ ۗ بَلٰى وَرُسُلُنَا لَدَيْهِمْ يَكْتُبُوْنَ (الزخرف : ٤٣)
- am yaḥsabūna
- أَمْ يَحْسَبُونَ
- Or (do) they think
- அவர்கள் எண்ணுகின்றனரா?
- annā lā nasmaʿu
- أَنَّا لَا نَسْمَعُ
- that We (can) not hear
- நாம் செவியுற மாட்டோம்
- sirrahum
- سِرَّهُمْ
- their secret(s)
- இரகசிய பேச்சை(யும்) அவர்களின்
- wanajwāhum
- وَنَجْوَىٰهُمۚ
- and their private counsel(s)?
- அவர்கள் கூடிப் பேசுவதையும்
- balā
- بَلَىٰ
- Nay
- மாறாக
- warusulunā
- وَرُسُلُنَا
- and Our Messengers
- நமது தூதர்கள்
- ladayhim
- لَدَيْهِمْ
- with them
- அவர்களிடம் இருந்து
- yaktubūna
- يَكْتُبُونَ
- are recording
- பதிவு செய்கின்றனர்
Transliteration:
Am yahsaboona annaa laa nasma'u sirrahum wa najwaahum; balaa wa Rusulunaa ladaihim yaktuboon(QS. az-Zukhruf:80)
English Sahih International:
Or do they think that We hear not their secrets and their private conversations? Yes, [We do], and Our messengers [i.e., angels] are with them recording. (QS. Az-Zukhruf, Ayah ௮௦)
Abdul Hameed Baqavi:
அல்லது அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்து வைத்திருப்பதும் அல்லது (தங்களுக்குள்) இரகசியமாகப் பேசிக் கொள்வதும் நமக்கு எட்டாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அன்று! அவர்களிடத்தில் இருக்கும் நம்முடைய மலக்குகள் (ஒவ்வொன்றையும்) பதிவு செய்துகொண்டே வருகின்றனர். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௮௦)
Jan Trust Foundation
அல்லது, அவர்களுடைய இரகசியத்தையும், அவர்கள் தனித்திருந்து கூடிப் பேசுவதையும் நாம் கேட்கவில்லையென்று எண்ணிக் கொண்டார்களா? அல்ல| மேலும் அவர்களிடமுள்ள நம் தூதர்கள் (எல்லாவற்றையும்) எழுதிக் கொள்கிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் அவர்களின் இரகசிய பேச்சையும் அவர்கள் கூடி (ஒன்றாக)ப் பேசுவதையும் செவியுற மாட்டோம் என்று அவர்கள் எண்ணுகின்றனரா? மாறாக, நமது தூதர்கள் அவர்களிடம் இருந்து (அவர்கள் பேசுகின்ற அனைத்தையும்) பதிவு செய்கின்றனர்.