குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௭௭
Qur'an Surah Az-Zukhruf Verse 77
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَنَادَوْا يٰمٰلِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَۗ قَالَ اِنَّكُمْ مَّاكِثُوْنَ (الزخرف : ٤٣)
- wanādaw
- وَنَادَوْا۟
- And they will call
- அவர்கள் அழைப்பார்கள்
- yāmāliku
- يَٰمَٰلِكُ
- "O Malik!
- மாலிக்கே!
- liyaqḍi
- لِيَقْضِ
- Let put an end
- அழித்துவிடட்டும்!
- ʿalaynā
- عَلَيْنَا
- to us
- எங்களை
- rabbuka
- رَبُّكَۖ
- your Lord"
- உமது இறைவன்
- qāla
- قَالَ
- He (will) say
- அவர் கூறுவார்
- innakum
- إِنَّكُم
- "Indeed you
- நிச்சயமாக நீங்கள்
- mākithūna
- مَّٰكِثُونَ
- (will) remain"
- தங்குவீர்கள்
Transliteration:
Wa naadaw yaa Maaliku liyaqdi 'alainaa Rabbuka qaala innakum maakisson(QS. az-Zukhruf:77)
English Sahih International:
And they will call, "O Malik, let your Lord put an end to us!" He will say, "Indeed, you will remain." (QS. Az-Zukhruf, Ayah ௭௭)
Abdul Hameed Baqavi:
(இந்நிலையில் அவர்கள் நரகத்தின் அதிபதியை நோக்கி) "மாலிக்கே! உங்களது இறைவன் எங்களுடைய காரியத்தை முடித்து விடவும். (மரணத்தின் மூலமாயினும் எங்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்)" என்று சப்தமிடுவார்கள். அதற்கவர் "(முடியாது!) நிச்சயமாக நீங்கள் இதே நிலைமையில் (வேதனையை அனுபவித்துக் கொண்டே மரணிக்காது) இருக்க வேண்டியதுதான்" என்று கூறுவார். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௭௭)
Jan Trust Foundation
மேலும், அவர்கள் (நரகத்தில்) “யா மாலிக்” உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!” என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் “நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே” என்று கூறுவார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“மாலிக்கே! உமது இறைவன் எங்களை அழித்துவிடட்டும்!” என்று கூறி அவர்கள் (மாலிக்கை) அழைப்பார்கள்: அவர் (அப்போது உடனே பதில் தராமல், ஆயிரம் ஆண்டுகள் கழித்து பதில்) கூறுவார்: “நீங்கள் (இதில் நிரந்தரமாக) தங்குவீர்கள்! (உங்களுக்கு இங்கு மரணமில்லை)”