Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௭௧

Qur'an Surah Az-Zukhruf Verse 71

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِّنْ ذَهَبٍ وَّاَكْوَابٍ ۚوَفِيْهَا مَا تَشْتَهِيْهِ الْاَنْفُسُ وَتَلَذُّ الْاَعْيُنُ ۚوَاَنْتُمْ فِيْهَا خٰلِدُوْنَۚ (الزخرف : ٤٣)

yuṭāfu
يُطَافُ
Will be circulated
சுற்றி வரப்படும்
ʿalayhim
عَلَيْهِم
for them
அவர்களை
biṣiḥāfin
بِصِحَافٍ
plates
தட்டுகளுடனும்
min dhahabin
مِّن ذَهَبٍ
of gold
தங்கத்தினாலான
wa-akwābin
وَأَكْوَابٍۖ
and cups
குவளைகளுடனும்
wafīhā
وَفِيهَا
And therein
இன்னும் அதில்
mā tashtahīhi
مَا تَشْتَهِيهِ
(is) what desires
விரும்புகின்றவையும்
l-anfusu
ٱلْأَنفُسُ
the souls
மனங்கள்
wataladhu l-aʿyunu
وَتَلَذُّ ٱلْأَعْيُنُۖ
and delights the eyes
இன்னும் கண்கள் இன்புறுகின்றவையும்
wa-antum fīhā
وَأَنتُمْ فِيهَا
and you therein
நீங்கள் அதில்
khālidūna
خَٰلِدُونَ
will abide forever
நிரந்தரமாக இருப்பீர்கள்

Transliteration:

Yutaafu 'alaihim bishaa fim min zahabinw wa akwaab, wa feehaa maatashtaheehil anfusu wa talazzul a'yunu wa antum feehaa khaalidoon (QS. az-Zukhruf:71)

English Sahih International:

Circulated among them will be plates and vessels of gold. And therein is whatever the souls desire and [what] delights the eyes, and you will abide therein eternally. (QS. Az-Zukhruf, Ayah ௭௧)

Abdul Hameed Baqavi:

(பலவகை உணவுகளும் பானங்களும் நிறைந்த) பொற்தட்டுக்களும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக்கொண்டே இருக்கும். அங்கு, அவர்கள் மனம் விரும்பியவைகளும், அவர்களுடைய கண்களுக்கு ரம்மியமானவையும் அவர்களுக்குக் கிடைக்கும். (அவர்களை நோக்கி) "இதில் என்றென்றும் நீங்கள் வசித்திருங்கள்" (என்றும் கூறப்படும்.) (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௭௧)

Jan Trust Foundation

பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன; இன்னும், “நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!” (என அவர்களிடம் சொல்லப்படும்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தங்கத்தினாலான தட்டுகளுடனும், குவளைகளுடனும் அவர்களை சுற்றி வரப்படும். அதில் மனங்கள் விரும்புகின்றவையும் கண்கள் இன்புறுகின்றவையும் அவர்களுக்கு உண்டு. நீங்கள் அதில் நிரந்தரமாக இருப்பீர்கள்.