Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௬௩

Qur'an Surah Az-Zukhruf Verse 63

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَمَّا جَاۤءَ عِيْسٰى بِالْبَيِّنٰتِ قَالَ قَدْ جِئْتُكُمْ بِالْحِكْمَةِ وَلِاُبَيِّنَ لَكُمْ بَعْضَ الَّذِيْ تَخْتَلِفُوْنَ فِيْهِۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ (الزخرف : ٤٣)

walammā jāa
وَلَمَّا جَآءَ
And when came
வந்த போது
ʿīsā
عِيسَىٰ
Isa
ஈஸா
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
with clear proofs
தெளிவான அத்தாட்சிகளுடன்
qāla
قَالَ
he said
அவர் கூறினார்
qad ji'tukum
قَدْ جِئْتُكُم
"Verily I have come to you
திட்டமாக நான் உங்களிடம் வந்துள்ளேன்
bil-ḥik'mati
بِٱلْحِكْمَةِ
with wisdom
ஞானத்துடன்
wali-ubayyina
وَلِأُبَيِّنَ
and that I make clear
விவரிப்பதற்காகவும்
lakum baʿḍa
لَكُم بَعْضَ
to you some
உங்களுக்கு/சிலவற்றை
alladhī takhtalifūna
ٱلَّذِى تَخْتَلِفُونَ
(of) that which you differ
எதில்/கருத்து வேற்றுமை கொள்கிறீர்களோ
fīhi
فِيهِۖ
in it
அதில்
fa-ittaqū l-laha
فَٱتَّقُوا۟ ٱللَّهَ
So fear Allah
ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்!
wa-aṭīʿūni
وَأَطِيعُونِ
and obey me
இன்னும் எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்!

Transliteration:

Wa lammaa jaaa'a 'Eesaa bilbaiyinaati qaala qad ji'tukum bil Hikmati wa li-ubaiyina lakum ba'dal lazee takhtalifoona feehi fattaqul laaha wa atee'oon (QS. az-Zukhruf:63)

English Sahih International:

And when Jesus brought clear proofs, he said, "I have come to you with wisdom [i.e., prophethood] and to make clear to you some of that over which you differ, so fear Allah and obey me. (QS. Az-Zukhruf, Ayah ௬௩)

Abdul Hameed Baqavi:

ஈஸா தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபொழுது (தன் மக்களை நோக்கி) "மெய்யாகவே ஞானத்தை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவைகளில் சிலவற்றை உங்களுக்கு விவரித்தும் கூறுவேன். நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிபடுங்கள்" என்றும், (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௬௩)

Jan Trust Foundation

இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது| “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தெளிவான அத்தாட்சிகளுடன் ஈஸா வந்த போது அவர் கூறினார்: “திட்டமாக நான் உங்களிடம் ஞானத்துடன் வந்துள்ளேன். இன்னும் நீங்கள் எதில் கருத்து வேற்றுமை கொள்கிறீர்களோ அதில் சிலவற்றை உங்களுக்கு விவரிப்பதற்காகவும் வந்துள்ளேன். ஆகவே, அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்!