Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௫௧

Qur'an Surah Az-Zukhruf Verse 51

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَنَادٰى فِرْعَوْنُ فِيْ قَوْمِهٖ قَالَ يٰقَوْمِ اَلَيْسَ لِيْ مُلْكُ مِصْرَ وَهٰذِهِ الْاَنْهٰرُ تَجْرِيْ مِنْ تَحْتِيْۚ اَفَلَا تُبْصِرُوْنَۗ (الزخرف : ٤٣)

wanādā
وَنَادَىٰ
And called out
அழைத்தான்
fir'ʿawnu
فِرْعَوْنُ
Firaun
ஃபிர்அவ்ன்
fī qawmihi
فِى قَوْمِهِۦ
among his people
தனது மக்களை
qāla
قَالَ
he said
கூறினான்
yāqawmi
يَٰقَوْمِ
"O my people!
என் மக்களே!
alaysa
أَلَيْسَ
Is not
இல்லையா?
لِى
for me
எனக்கு சொந்தமானது
mul'ku
مُلْكُ
(the) kingdom
ஆட்சி
miṣ'ra
مِصْرَ
(of) Egypt
எகிப்துடைய
wahādhihi
وَهَٰذِهِ
and these
இந்த
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
[the] rivers
ஆறுகள்
tajrī
تَجْرِى
flowing
ஓடுகின்றன
min taḥtī
مِن تَحْتِىٓۖ
underneath me? underneath me?
எனக்கு முன்னால்
afalā tub'ṣirūna
أَفَلَا تُبْصِرُونَ
Then do not you see?
நீங்கள் உற்று நோக்கவில்லையா?

Transliteration:

Wa naadaa Fir'awnu fee qawmihee qaala yaa qawmi alaisa lee mulku Misra wa haazihil anhaaru tajree min tahtee afalaa tubsiroon (QS. az-Zukhruf:51)

English Sahih International:

And Pharaoh called out among his people; he said, "O my people, does not the kingdom of Egypt belong to me, and these rivers flowing beneath me; then do you not see? (QS. Az-Zukhruf, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

பின்னர், ஃபிர்அவ்ன் தன்னுடைய மக்களை நோக்கி, "என்னுடைய மக்களே! இந்த "மிஸ்ர்" தேசத்தின் ஆட்சி என்னுடையதல்லவா? (அதிலிருக்கும்) இந்த (நைல்) நதி(யின் கால்வாய்)கள் என் கட்டளைப்படி செல்வதை நீங்கள் பார்க்க வில்லையா?" என்று பறை சாற்றினான். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௫௧)

Jan Trust Foundation

மேலும் ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரிடம் பறை சாற்றினான்| “என்னுடைய சமூகத்தாரே! இந்த மிஸ்ரு (எகிப்தின்) அரசாங்கம், என்னுடையதல்லவா? என் (மாளிகை) அடியில் ஓடிக் கொண்டிருக்கும் (நீல நதியின்) இக்கால்வாய்களும் (என் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதைப்) பார்க்கவில்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஃபிர்அவ்ன் தனது மக்களை அழைத்தான்: “என் மக்களே! எகிப்துடைய ஆட்சி எனக்கு சொந்தமானது இல்லையா? இந்த ஆறுகள் (என்னைச் சுற்றி) எனக்கு முன்னால் ஓடுகின்றன. நீங்கள் (இவற்றை) உற்று நோக்கவில்லையா?” என்று கூறினான்.