Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௪௯

Qur'an Surah Az-Zukhruf Verse 49

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْا يٰٓاَيُّهَ السّٰحِرُ ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَۚ اِنَّنَا لَمُهْتَدُوْنَ (الزخرف : ٤٣)

waqālū
وَقَالُوا۟
And they said
அவர்கள் கூறினர்
yāayyuha l-sāḥiru
يَٰٓأَيُّهَ ٱلسَّاحِرُ
"O [the] magician!
ஓ சூனியக்காரரே!
ud'ʿu
ٱدْعُ
Invoke
நீர் பிரார்த்திப்பீராக!
lanā
لَنَا
for us
எங்களுக்காக
rabbaka
رَبَّكَ
your Lord
உமது இறைவனிடம்
bimā ʿahida
بِمَا عَهِدَ
by what He has made covenant
அவன் வாக்களித்ததை
ʿindaka innanā
عِندَكَ إِنَّنَا
with you Indeed we
உம்மிடம்/நிச்சயமாக நாங்கள்
lamuh'tadūna
لَمُهْتَدُونَ
(will) surely be guided"
நேர்வழி பெறுவோம்

Transliteration:

Wa qaaloo yaaa ayyuhas saahirud'u lanaa Rabbaka bimaa 'ahida 'indaka innanaa lamuhtadoon (QS. az-Zukhruf:49)

English Sahih International:

And they said [to Moses], "O magician, invoke for us your Lord by what He has promised you. Indeed, we will be guided." (QS. Az-Zukhruf, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

அச்சமயம் அவர்கள் (மூஸாவை நோக்கி) "சூனியக்காரரே! (உங்களது இறைவன் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வதாக) உங்களுக்களித்த வாக்குறுதியைக் கொண்டு (இவ் வேதனையை நீக்கி) எங்களுக்கு அருள் புரிய உங்களது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! (அவ்வாறு நீக்கிவிட்டால்) நிச்சயமாக நாங்கள் (உங்களுடைய) நேரான வழிக்கு வந்து விடுவோம்" என்று கூறினார்கள். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௪௯)

Jan Trust Foundation

மேலும், அவர்கள்| “சூனியக்காரரே (உம் இறைவன்) உம்மிடம் அறுதிமானம் செய்திருப்பதால், நீர் எங்களுக்காக உம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தனை செய்)யும், நிச்சயமாக நாங்கள் நேர்வழியை பெற்று விடுவோம்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: “ஓ சூனியக்காரரே! (-அறிஞரே! உமது இறைவன்) உம்மிடம் வாக்களித்ததை (-கேட்டு அல்லது இந்த வேதனையை நீக்குமாறு) உமது இறைவனிடம் எங்களுக்காக நீர் பிரார்த்திப்பீராக! நிச்சயமாக நாங்கள் நேர்வழி பெறுவோம்.”