குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௪௮
Qur'an Surah Az-Zukhruf Verse 48
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا نُرِيْهِمْ مِّنْ اٰيَةٍ اِلَّا هِيَ اَكْبَرُ مِنْ اُخْتِهَاۗ وَاَخَذْنٰهُمْ بِالْعَذَابِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ (الزخرف : ٤٣)
- wamā nurīhim
- وَمَا نُرِيهِم
- And not We showed them
- அவர்களுக்கு நாம் காண்பிக்க மாட்டோம்
- min āyatin
- مِّنْ ءَايَةٍ
- of a Sign
- ஓர் அத்தாட்சியை
- illā
- إِلَّا
- but
- தவிர
- hiya
- هِىَ
- it
- அது
- akbaru
- أَكْبَرُ
- (was) greater
- பெரியதாக இருந்தே
- min ukh'tihā
- مِنْ أُخْتِهَاۖ
- than its sister
- அதன் சகோதரியை விட
- wa-akhadhnāhum
- وَأَخَذْنَٰهُم
- and We seized them
- இன்னும் நாம் அவர்களைப் பிடித்தோம்
- bil-ʿadhābi
- بِٱلْعَذَابِ
- with the punishment
- வேதனையால்
- laʿallahum yarjiʿūna
- لَعَلَّهُمْ يَرْجِعُونَ
- so that they may return
- அல்லது திரும்புவதற்காக
Transliteration:
Wa maa nureehim min aayatin illaa hiya akbaru min ukhtihaa wa akhaznaahum bil'azaabi la'allahum yarji'oon(QS. az-Zukhruf:48)
English Sahih International:
And We showed them not a sign except that it was greater than its sister, and We seized them with affliction that perhaps they might return [to faith]. (QS. Az-Zukhruf, Ayah ௪௮)
Abdul Hameed Baqavi:
நாம் அவர்களுக்குக் காண்பித்த ஒவ்வொரு அத்தாட்சியும், மற்றொன்றை விடப் பெரிதாகவே இருந்தது. பின்னும், அவர்கள் (பாவத்திலிருந்து) திரும்பி விடுவதற்காக (ஆரம்பத்தில் அழித்து விடாமல் இலேசான) வேதனையைக் கொண்டு (மட்டும்) அவர்களைப் பிடித்தோம். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௪௮)
Jan Trust Foundation
ஆனால் நாம் அவர்களுக்குக் காட்டிய ஒவ்வோர் அத்தாட்சியும், அடுத்ததை விட மிகவும் பெரிதாகவே இருந்தது; எனினும் அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக நாம் அவர்களை வேதனையைக் கொண்டே பிடித்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு நாம் ஓர் அத்தாட்சியைக் காண்பிக்க மாட்டோம் அது அதன் சகோதரியை விட (-முந்தி வந்த அத்தாட்சியை விட) பெரியதாக இருந்தே தவிர. நாம் அவர்களை வேதனையால் பிடித்தோம் அவர்கள் (நம் பக்கம்) திரும்புவதற்காக.