Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௪௨

Qur'an Surah Az-Zukhruf Verse 42

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوْ نُرِيَنَّكَ الَّذِيْ وَعَدْنٰهُمْ فَاِنَّا عَلَيْهِمْ مُّقْتَدِرُوْنَ (الزخرف : ٤٣)

aw nuriyannaka
أَوْ نُرِيَنَّكَ
Or We show you
அல்லது/நாம் உமக்கு காண்பிப்போம்
alladhī waʿadnāhum
ٱلَّذِى وَعَدْنَٰهُمْ
that which We have promised them
அவர்களுக்கு நாம் வாக்களித்ததை
fa-innā
فَإِنَّا
then indeed We
நிச்சயமாக நாம்
ʿalayhim
عَلَيْهِم
over them
அவர்கள் மீது
muq'tadirūna
مُّقْتَدِرُونَ
have full power
முழு ஆற்றல் உள்ளவர்கள்

Transliteration:

Aw nuriyannakal lazee wa'adnaahum fa innaa 'alaihim muqtadiroon (QS. az-Zukhruf:42)

English Sahih International:

Or whether [or not] We show you that which We have promised them, indeed, We are Perfect in Ability. (QS. Az-Zukhruf, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

அல்லது நாம் அவர்களுக்கு வாக்களித்த தண்டனையை நீங்கள் (உயிருடனிருந்து) உங்களது கண்ணால் காணும்படி செய்வோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆற்றல் உடைய வனாகவே இருக்கின்றோம். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௪௨)

Jan Trust Foundation

அல்லது நாம் அவர்களுக்கு (எச்சரித்து) வாக்களித்துள்ளதை (வேதனையை) நீர் காணும் படிச் செய்வோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆற்றலுடையோராய் இருக்கின்றோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லது அவர்களுக்கு நாம் வாக்களித்ததை (-வேதனையை) நாம் உமக்கு (உமது வாழ்நாளிலேயே) காண்பிப்போம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது முழு ஆற்றல் உள்ளவர்கள் ஆவோம்!