Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௩௯

Qur'an Surah Az-Zukhruf Verse 39

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَنْ يَّنْفَعَكُمُ الْيَوْمَ اِذْ ظَّلَمْتُمْ اَنَّكُمْ فِى الْعَذَابِ مُشْتَرِكُوْنَ (الزخرف : ٤٣)

walan yanfaʿakumu
وَلَن يَنفَعَكُمُ
And will never benefit you
உங்களுக்கு அறவே பலனளிக்காது
l-yawma
ٱلْيَوْمَ
the Day
இன்றைய தினம்
idh ẓalamtum
إِذ ظَّلَمْتُمْ
when you have wronged
நீங்கள் அநியாயம் செய்த காரணத்தால்
annakum
أَنَّكُمْ
that you
நிச்சயமாக நீங்கள்
fī l-ʿadhābi
فِى ٱلْعَذَابِ
(will be) in the punishment
வேதனையில்
mush'tarikūna
مُشْتَرِكُونَ
sharing
இணைந்திருப்பது

Transliteration:

Wa lai yanfa'akumul Yawma iz zalamtum annakum fil 'azaabi mushtarikoon (QS. az-Zukhruf:39)

English Sahih International:

And never will it benefit you that Day, when you have wronged, that you are [all] sharing in the punishment. (QS. Az-Zukhruf, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

(அதற்கு அவர்களை நோக்கி) "நீங்கள் வரம்பு மீறி பாவம் செய்ததன் காரணமாக இன்றைய தினம் உங்களுக்கு (எதுவுமே) பயனளிக்காது. நிச்சயமாக நீங்கள் வேதனையை அனுபவிப்பதில் (அந்த ஷைத்தான்களுக்குக்) கூட்டானவர்கள்தாம்" (என்றும் கூறப்படும்). (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௩௯)

Jan Trust Foundation

(அப்போது) “நீங்கள் அநியாயம் செய்த படியால் இன்று உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது; நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பீர்கள்” (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் (இறைவனுக்கு இணைவைத்து) அநியாயம் செய்த காரணத்தால் நிச்சயமாக நீங்கள் (-வழி கெடுத்தவர்கள், வழிகெட்டவர்கள் எல்லோருமாக) வேதனையில் இணைந்திருப்பது இன்றைய தினம் உங்களுக்கு அறவே பலனளிக்காது. (நரக வேதனை பங்கிட்டுக் கொடுக்கப்படாமல், ஒவ்வொருவருக்கும் முழுமையான வேதனை கொடுக்கப்படும்.)