Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௩௮

Qur'an Surah Az-Zukhruf Verse 38

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

حَتّٰىٓ اِذَا جَاۤءَنَا قَالَ يٰلَيْتَ بَيْنِيْ وَبَيْنَكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ فَبِئْسَ الْقَرِيْنُ (الزخرف : ٤٣)

ḥattā
حَتَّىٰٓ
Until
இறுதியாக
idhā
إِذَا
when
அவன் வரும் போது
jāanā
جَآءَنَا
he comes to Us
அவன் வரும் போது நம்மிடம்
qāla
قَالَ
he says
கூறுவான்
yālayta
يَٰلَيْتَ
"O would that
இருக்க வேண்டுமே!
baynī
بَيْنِى
between me
எனக்கு மத்தியிலும்
wabaynaka
وَبَيْنَكَ
and between you
உனக்கு மத்தியிலும்
buʿ'da
بُعْدَ
(were the) distance
இடைப்பட்ட தூரம்
l-mashriqayni
ٱلْمَشْرِقَيْنِ
(of) the East and the West"
கிழக்கிற்கும் மேற்கிற்கும்
fabi'sa l-qarīnu
فَبِئْسَ ٱلْقَرِينُ
How wretched is the companion!
அவன் மிகக் கெட்ட நண்பன்

Transliteration:

Hattaaa izaa jaaa'anaa qaala yaa laita bainee wa bainaka bu'dal mashriqaini fabi'sal qareen (QS. az-Zukhruf:38)

English Sahih International:

Until, when he comes to Us [at Judgement], he says [to his companion], "How I wish there was between me and you the distance between the east and west; and what a wretched companion." (QS. Az-Zukhruf, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

நம்மிடம் (வரும் வரையில்தான் அவ்வாறு எண்ணிக் கொண்டிருப்பார்கள்.) அவர்கள் (நம்மிடம்) வந்த பின்னரோ (அவர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி) "எனக்கும் உமக்கு மிடையில் கீழ் திசைக்கும், மேல் திசைக்கும் உள்ள தொலைதூரமாக இருந்திருக்க வேண்டாமா?" என்றும், "(எங்களை வழிகெடுத்த எங்களுடைய) இந்தத் தோழன் மிகப் பொல்லாதவன்" என்றும் கூறுவார்கள். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௩௮)

Jan Trust Foundation

எதுவரையென்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்)|- “ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!” (எங்களை வழிகெடுத்த) இந்நண்பன் மிகவும் கெட்டவன்” என்று கூறுவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இறுதியாக, அவன் (-ரஹ்மானின் நினைவை புறக்கணித்து வாழ்ந்தவன்) நம்மிடம் வரும் போது, (தன்னை வழிகெடுத்த ஷைத்தானை நோக்கி) எனக்கு மத்தியிலும் உனக்கு மத்தியிலும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் இருக்க வேண்டுமே! என்று கூறுவான். அவன் (-அந்த ஷைத்தான்) மிகக் கெட்ட நண்பன் ஆவான்.