குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௩௬
Qur'an Surah Az-Zukhruf Verse 36
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَنْ يَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَيِّضْ لَهٗ شَيْطٰنًا فَهُوَ لَهٗ قَرِيْنٌ (الزخرف : ٤٣)
- waman yaʿshu
- وَمَن يَعْشُ
- And whoever turns away
- யார் புறக்கணிப்பாரோ
- ʿan dhik'ri
- عَن ذِكْرِ
- from (the) remembrance
- நினைவு கூர்வதை
- l-raḥmāni
- ٱلرَّحْمَٰنِ
- (of) the Most Gracious
- பேரருளாளனை
- nuqayyiḍ
- نُقَيِّضْ
- We appoint
- நாம் சாட்டிவிடுவோம்
- lahu
- لَهُۥ
- for him
- அவருக்கு
- shayṭānan
- شَيْطَٰنًا
- a devil
- ஒரு ஷைத்தானை
- fahuwa lahu
- فَهُوَ لَهُۥ
- then he (is) to him
- அவன் அவருக்கு
- qarīnun
- قَرِينٌ
- a companion
- நண்பனாக
Transliteration:
Wa mai ya'shu 'an zikrir Rahmaani nuqaiyid lahoo Shaitaanan fahuwa lahoo qareen(QS. az-Zukhruf:36)
English Sahih International:
And whoever is blinded from remembrance of the Most Merciful – We appoint for him a devil, and he is to him a companion. (QS. Az-Zukhruf, Ayah ௩௬)
Abdul Hameed Baqavi:
எவன் ரஹ்மானுடைய நல்லுபதேசத்திலிருந்து கண்ணை மூடிக்கொள்கிறானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை (நண்பனாகச்) சாட்டிவிடுவோம். அவன் அவனுக்கு இணைபிரியாத தோழனாகி விடுகிறான். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௩௬)
Jan Trust Foundation
எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
யார் ரஹ்மானை நினைவு கூர்வதை புறக்கணிப்பாரோ (அவனது அத்தாட்சிகளைப் பார்த்து நம்பிக்கை கொள்ள மாட்டாரோ) அவருக்கு ஒரு ஷைத்தானை நாம் சாட்டிவிடுவோம். அவன் அவருக்கு (இணைபிரியா) நண்பனாக ஆகிவிடுவான்.