Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௩௫

Qur'an Surah Az-Zukhruf Verse 35

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَزُخْرُفًاۗ وَاِنْ كُلُّ ذٰلِكَ لَمَّا مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ۗوَالْاٰخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِيْنَ ࣖ (الزخرف : ٤٣)

wazukh'rufan
وَزُخْرُفًاۚ
And ornaments of gold
இன்னும் தங்கத்தையும்
wa-in kullu
وَإِن كُلُّ
And not (is) all
எல்லாம் இல்லை
dhālika
ذَٰلِكَ
that
இவை
lammā matāʿu
لَمَّا مَتَٰعُ
but an enjoyment
இன்பங்களே தவிர
l-ḥayati l-dun'yā
ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَاۚ
(of) the life (of) the world
உலக வாழ்க்கையின்
wal-ākhiratu
وَٱلْءَاخِرَةُ
And the Hereafter
மறுமை
ʿinda rabbika
عِندَ رَبِّكَ
with your Lord
உமது இறைவனிடம்
lil'muttaqīna
لِلْمُتَّقِينَ
(is) for the righteous
இறையச்சமுள்ளவர்களுக்கு

Transliteration:

Wa zukhrufaa; wa in kullu zaalika lammaa mataa'ul hayaatid dunyaa; wal aakhiratu 'inda Rabbika lilmuttaqeen (QS. az-Zukhruf:35)

English Sahih International:

And gold ornament. But all that is not but the enjoyment of worldly life. And the Hereafter with your Lord is for the righteous. (QS. Az-Zukhruf, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

(வெள்ளி என்ன! இவைகளைத்) தங்கத்தாலேயே (அலங்கரித்தும் விடுவோம்.) ஏனென்றால், இவை அனைத்துமே இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (அழிந்துவிடக் கூடிய) அற்ப இன்பங்களே அன்றி வேறில்லை. உங்களது இறைவனிடம் இருக்கும் மறுமை(யின் நிலையான இன்ப வாழ்க்கையோ, மிக மேலானதும் நிலையானதுமாகும். அது) இறைவனுக்குப் பயந்து நடப்பவர்களுக்குத்தான் சொந்தமானது. (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௩௫)

Jan Trust Foundation

தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்); ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வேறில்லை. ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தங்கத்தையும் (நாம் அவர்களுக்கு சொந்தமாக்கி இருப்போம்). இவை எல்லாம் உலக வாழ்க்கையின் இன்பங்களே தவிர வேறு இல்லை. உமது இறைவனிடம் உள்ள மறுமை (-சொர்க்க வாழ்க்கை) இறையச்சமுள்ளவர்களுக்குத் தான்.