Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௩௧

Qur'an Surah Az-Zukhruf Verse 31

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْا لَوْلَا نُزِّلَ هٰذَا الْقُرْاٰنُ عَلٰى رَجُلٍ مِّنَ الْقَرْيَتَيْنِ عَظِيْمٍ (الزخرف : ٤٣)

waqālū
وَقَالُوا۟
And they say
அவர்கள் கூறுகின்றனர்
lawlā nuzzila
لَوْلَا نُزِّلَ
"Why not was sent down
இறக்கப்பட வேண்டாமா!
hādhā l-qur'ānu
هَٰذَا ٱلْقُرْءَانُ
this the Quran
இந்த குர்ஆன்
ʿalā rajulin
عَلَىٰ رَجُلٍ
to a man
மனிதர் மீது
mina l-qaryatayni
مِّنَ ٱلْقَرْيَتَيْنِ
from the two towns
இந்த இரண்டு ஊர்களில் உள்ள
ʿaẓīmin
عَظِيمٍ
great?"
ஒரு பெரிய(வர்)

Transliteration:

Wa qaaloo law laa nuzzila haazal Quraanu 'alaa rajulim minal qaryataini 'azeem (QS. az-Zukhruf:31)

English Sahih International:

And they said, "Why was this Quran not sent down upon a great man from [one of] the two cities?" (QS. Az-Zukhruf, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

அன்றி (தாயிஃப், மக்கா ஆகிய) இவ்விரண்டு ஊர்களிலுள்ள யாதொரு பெரிய மனிதன் மீது இந்தக் குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? (அவ்வாறாயின் நாங்கள் அதனை நம்பிக்கை கொண்டிருப்போம்) என்றும் கூறுகின்றனர். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௩௧)

Jan Trust Foundation

மேலும் அவர்கள் கூறுகிறார்கள்| இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இந்த குர்ஆன் (மக்கா இன்னும் தாயிஃப் ஆகிய) இந்த இரண்டு ஊர்களில் உள்ள ஒரு பெரிய மனிதர் மீது இறக்கப்பட வேண்டாமா! என்று அவர்கள் கூறுகின்றனர்.