Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௨௮

Qur'an Surah Az-Zukhruf Verse 28

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَعَلَهَا كَلِمَةً ۢ بَاقِيَةً فِيْ عَقِبِهٖ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَۗ (الزخرف : ٤٣)

wajaʿalahā
وَجَعَلَهَا
And he made it
இதை ஆக்கினார்
kalimatan
كَلِمَةًۢ
a word
ஒரு வாக்கியமாக
bāqiyatan
بَاقِيَةً
lasting
நீடித்து இருக்கின்ற(து)
fī ʿaqibihi
فِى عَقِبِهِۦ
among his descendents
தனது சந்ததிகளில்
laʿallahum yarjiʿūna
لَعَلَّهُمْ يَرْجِعُونَ
so that they may return
அவர்கள் திரும்ப வேண்டும் என்பதற்காக

Transliteration:

Wa ja'alahaa Kalimatam baaqiyatan fee 'aqibihee la'al lahum yarji'oon (QS. az-Zukhruf:28)

English Sahih International:

And he made it a word remaining among his descendants that they might return [to it]. (QS. Az-Zukhruf, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (அவருடைய சந்ததிகளாகிய இந்த அரபிகளும் நம்மிடமே) வரும் பொருட்டு, அவர் தன்னுடைய சந்ததிகளில் இக் கொள்கையை நிலையான வாக்குறுதியாக அமைத்தார். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௨௮)

Jan Trust Foundation

இன்னும், தம் சந்ததியினர் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி வரும் பொருட்டு (இப்ராஹீம் தவ்ஹீதை) அவர்களிடம் ஒரு நிலையான வாக்காக ஏற்படுத்தினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதை (-“அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் இல்லை”என்பதை) தனது சந்ததிகளில் நீடித்து இருக்கின்ற ஒரு வாக்கியமாக - சட்டமாக அவர் ஆக்கினார், அவர்கள் (தங்கள் இறைவனை மட்டும் வணங்குவதன் பக்கம்) திரும்ப வேண்டும் என்பதற்காக.