குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௧௯
Qur'an Surah Az-Zukhruf Verse 19
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَجَعَلُوا الْمَلٰۤىِٕكَةَ الَّذِيْنَ هُمْ عِبٰدُ الرَّحْمٰنِ اِنَاثًا ۗ اَشَهِدُوْا خَلْقَهُمْ ۗسَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْٔـَلُوْنَ (الزخرف : ٤٣)
- wajaʿalū
- وَجَعَلُوا۟
- And they made
- இவர்கள் ஆக்கிவிட்டனர்
- l-malāikata
- ٱلْمَلَٰٓئِكَةَ
- the Angels
- வானவர்களை
- alladhīna hum
- ٱلَّذِينَ هُمْ
- those who themselves
- எவர்கள்/அவர்கள்
- ʿibādu
- عِبَٰدُ
- (are) slaves
- அடியார்களாகிய
- l-raḥmāni
- ٱلرَّحْمَٰنِ
- (of) the Most Gracious
- பேரருளாளனின்
- ināthan
- إِنَٰثًاۚ
- females
- பெண்களாக
- ashahidū
- أَشَهِدُوا۟
- Did they witness
- பார்த்தார்களா?
- khalqahum
- خَلْقَهُمْۚ
- their creation?
- அவர்கள் படைக்கப்பட்டதை
- satuk'tabu
- سَتُكْتَبُ
- Will be recorded
- பதியப்படும்
- shahādatuhum
- شَهَٰدَتُهُمْ
- their testimony
- இவர்களின் சாட்சி
- wayus'alūna
- وَيُسْـَٔلُونَ
- and they will be questioned
- இன்னும் இவர்கள் விசாரிக்கப்படுவார்கள்
Transliteration:
Wa ja'alul malaaa'ikatal lazeena hum 'ibaadur Rahmaani inaasaa; a shahidoo khalaqhum; satuktabu shahaa datuhum wa yus'aloon(QS. az-Zukhruf:19)
English Sahih International:
And they described the angels, who are servants of the Most Merciful, as females. Did they witness their creation? Their testimony will be recorded, and they will be questioned. (QS. Az-Zukhruf, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
தவிர, ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளைப் பெண்கள் என்று கூறுகின்றனரே! (நாம்) அவர்களை படைக்கும் போது இவர்கள் (நம்மோடிருந்து) பார்த்துக் கொண்டிருந்தனரா? இவர்கள் (பொய்யாகக் கற்பனை செய்து) கூறுகின்ற இவைகளெல்லாம் (நம்முடைய பதிவுப் புத்தகத்தில்) எழுதப்பட்டு (அதனைப் பற்றிக்) கேள்வி கேட்கப்படுவார்கள். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௧௯)
Jan Trust Foundation
அன்றியும், அர் ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளை அவர்கள் பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்கள், படைக்கப்பட்ட போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்களுடைய சாட்சியம் பதிவு செய்து வைக்கப்பட்டு, அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ரஹ்மானின் அடியார்களாகிய வானவர்களை பெண்களாக இவர்கள் ஆக்கிவிட்டனர். அ(ந்த வான)வர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் (அங்கு பிரசன்னமாகி சாட்சியாக இருந்து) பார்த்தார்களா? இவர்களின் (இந்த) சாட்சி பதியப்படும். (அது பற்றி) இவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.